புதன், 16 ஜூன், 2010

#27 நொந்த நித்தியும் பஞ்சாக்னி தபசும்

நித்தியானந்தா ஒரு வழியாக ஜெயிலில் இருந்து எஸ் ஆனார். ஆஸ்ரமம் வந்து உடன் செய்தது பஞ்சாக்னி தபஸ்.
போகி பண்டிகை போல் வட்டமாக நெருப்பை மூட்டி நடுவில் சாமியார் உட்கார்ந்து " fog effect' உடன் போஸ் தருகிறார். இது என்ன பஞ்சாக்னி?
மக்கள் தாம் பண்ணின தவறுக்கு பிராயச்சித்தமாக செய்யும் தவம் தான் இந்த பஞ்சாக்னி தபஸ். இதைத்தான் அக்னி பிரவேசம் என்றும் சொல்லுவார்கள் ( சீதை செய்ததும் இந்த தவம் தான்). பூமிக்கும் வான் வெளிக்கும் பாலமாக இருப்பதாலும், அசுத்த படுத்த முடியாததினாலும், அக்னி மற்ற 'பூதங்களை' விட சிறந்தது. நான்கு பக்கமும் தீயை மூட்டி ஐந்தாவது தீயாக சூரியன் இருக்க இதை ஜனவரி யில் இருந்து ஜூலை மாதத்தில் தொடங்குவார்கள்.
இந்த தவம் மனதை தூய்மை படுத்துவதாக நம்பிக்கை. இப்போது விஷயத்துக்கு வருவோம். இது " வாக்கிங் போகும்போது ஆரம்பித்து" ஒரு அவரில் முடியற உண்ணா விரதம் இல்லை. பன்னிரண்டு அல்லது ஒன்பது அல்லது மூன்று அல்லது ஒரு ஆண்டுக்கு செய்யும் தவம்.
முதலில் ஒரு பக்கம் நெருப்பை மூட்டி அதன் அருகில் அமர்ந்து தவம், பிறகு இரண்டு பக்கமும் தீ நடுவில் தவம், அதன் பின் மூன்று பக்கம் தீ நடுவில் தவம் , பிறகு நான்கு பக்கமும் தீ நடுவில் தவம், கடும் வெயிலிலும் நெருப்புக்கு நடுவே அமர்ந்து தவம் செய்ய வேண்டும். இப்படி சாதரணமாக ஒன்பது அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் செய்யவேண்டும்.
நமது சாமியார் இப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தால் , நான் அவரை உண்மையான சாமியார் என்று ஏற்றுக்கொள்ள தயார். சாமியார் செய்வாரா?
பஞ்சாக்னி தபஸ் பற்றி சீரியஸாக தெரிந்து கொள்ள click : http://www.yogamag.net/archives/2002/esep02/panch.shtml

4 கருத்துகள்:

  1. சொன்னபடி வந்தேன்! கமெண்ட் போட்டுட்டேன்! ஆனால் நித்தியானந்தா பற்றி கமெண்ட் போட மாட்டேன். எனக்கு என்று ஒரு ஒழுங்கு வைத்திருக்கிறேன்! எல்லாருக்கும் அன்பை மட்டுமே பகிர்வது என்று! தங்கள் எழுத்தின் தரம் எங்கோ இருக்கிறது. வாழ்த்துக்கள்! பாடலும் நன்று!

    பதிலளிநீக்கு