திங்கள், 7 ஜூன், 2010

# 24 ஹைரோப்பா (லண்டனூரில் ரங்கராட்டினம்-3 )

                                                                                     லண்டன் பாலம்
நம்மூரில் கூவம் ஓடுவதுபோல லண்டனில் தேம்ஸ் ஓடுகிறது ஆனால் நாறாமல் அழகாக! . நம்மர் ஆறு போல் சாக்கடையாக இல்லாமல் சுத்தமான அகலமான நதியாக ஓடுகிறது தேம்ஸ். நம்மூர் 'இளையவர்' கூட கூவம் இப்படித்தான் ஆகும் என்று கனவு காண்கிறாரோ?. நதியின் ஓரமாக எங்கள் பஸ் பயணித்தது.

பிக் B உடன்  
தேம்ஸ் குறுக்காக கட்டப்பட்ட ஒரு பாலத்தை தாண்டும் பொழுது சூசன் அந்த பாலம் பெண்களால் கட்டப்பட்டது என்றார். ஆண்கள் சண்டை போட போனபொழுது, ஒரு பாலம் அவசரமாக கட்டவேண்டி இருந்ததாம் , அந்தூர் பொண்ணுங்கள் சேர்ந்து இந்த பாலத்தை கட்டினார்களாம். நம்மூரில் இது போல பெண்கள் எதுவும் செய்தால் போல தெரியவில்லை. முறத்தால் புலிகளை விரட்டியதும், கணவன் போய் சேர்ந்தபிறகு குழந்தைகளையும் போர்களத்திற்கு அனுப்பியதையும் தவிர.
                                                                            ஐஸ்
இங்கே ஒரு உயரமான கல்லை நிற்க வைத்து, கிளியோபாட்ரா வின் ஊசி என்கிறார்கள். பிறகு நாங்கள் உலக புகழ் பெற்ற லண்டன் பாலத்தை கடந்தோம்.பாலத்தை கடக்கும் போது சூசன் பாடிய " LONDON BRIDGE IS FALLING DOWN" என்று பாடிய நர்சரி ரைமிற்கு நல்ல வரவேற்பு. அனேகமாக சூசன் பேசியதில் எல்லோருக்கும் புரிந்தது இதுதான் போலும்.

இப்பொழுது நாங்கள் வந்து சேர்ந்தது 'LONDON EYE' என்று அழைக்கப்படும் மிக பெரிய ஜயன்ட் வீல். நம் பொருட்காட்சி களில் இருப்பது போன்ற ஆனால் மிக பெரிய ஜ. வீ . இதில் பெஞ்சு களுக்கு பதில் கண்ணாடியால் ஆன அறைகள் சுற்றுகின்றன. நாம் உட்கார பெஞ்சுகள் போடப் பட்டு இருக்கின்றன.. இதில் ஒரு சுற்று போக அறை மணி நேரம் ஆகிறது. இதில் இருந்து லண்டனின் அழகான தோற்றம் தெரிகிறது,
                                                             இரு அறிவாளிகள்
காமிராவின் மெமோரி கார்ட் பயமுறுத்தி கொண்டு இருப்பதால் சிக்கனமாக போடோ க்களை க்ளிக்கி முடித்தேன்.

இதை முடித்து இறங்கினால் செம குளிர். சூடாக ஒரு காப்பி போடலாம் என்று வாங்கினால் ஒரு பெரிய மெகா கப்பில் காப்பி தருகிறார்கள் கொதிக்க கொதிக்க. மீண்டும் பஸ்ஸில் ஏறி திரும்பினோம். வரும் வழியில் ஒரு மணிக்கூண்டு 'Big ben' பார்த்தோம். எனக்கு ஒன்றும் இது இம்ப்ரசிவ் வாக இல்லை. நம்ப ராயபேட்ட மணிக்கூண்டைத்தான் நினைவு படுத்தியது. 'வெஸ்ட் மினிஸ்டர் அபே' என்று அழைக்க படும் 'சர்ச்' சை பார்த்து விட்டு தேம்ஸ் ஓரமாகவே வந்தோம். லண்டனின் இந்த எல்லா நினைவு சின்னங்களும் தேம்ஸ் நதி ஓரமாகவே அமைந்து உள்ளன.
                                                         கருத்தம்மா இந்திரா
லண்டனுக்கு பை பை சொல்லிவிட்டு ஹாலாந்து போக, ஒன்றரை மணி டிராவல்  தூரத்தில் உள்ள ஹார்விக் துறை முகத்தை அடைந்தோம்.

                                                                           கப்பலில் டைனிங் ஹால்
அங்கு பாஸ் போர்ட் செக்கிங் முடிந்த வுடன் ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். எங்கள் பஸ் இரண்டாம் புளோரில் நிற்க எங்கள் அறை பத்தாம் புளோரில் இருந்தது. பெரிய ஹோட்டல் போல அமைப்புடன் அந்த புளோர் இருந்தது. எங்களுக்கு கப்பல் மேல் தளத்திற்கு போக அனுமதி இல்லை.
                                                                                            கப்பலில் ரூம்
கீழ் புளோரில் உள்ள விஸ்தாரமான லைனிங் ஹாலில் இரவு உணவு பப்பே புரில் வைத்து இருந்தார்கள். நமக்கு வழக்கம் போல ' எல்லாமே மாமிசம் போல் இருந்ததால் நான்கு பிஸ்கெட்டும் ஜூஸும் குடித்து உணவை முடித்து கொண்டேன் ( ஜூஸ் கொடுக்கும் நாதாரிகள் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்). ரூமுக்கு வந்து படுத்தால் லேசான அசைவுடன் கப்பல் நகர சுகமான தூக்கம்.
                                                                              கப்பல் வெளி தோற்றம்

                                                                                                                                          .......இன்னும் பயணிப்போம்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக