புதன், 30 ஜூன், 2010

# 30 1893ல் சென்னை (மேப்)எவ்வளவு ஏரிகள், எவ்வளவு காலி இடங்கள்; பார்த்தாலே இனிக்கிறது அல்லவா?.

# 29 வலை உலகில் மீண்டும் போர் மூட்டம்?

நம் தண்டோரா மணியின் கணிப்பின் படி மீண்டும் ஒருமுறை வலை உலகில் தகலாருகள் வரும் என்று நம்பப்படுகிறது

***** பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .

அப்படியா ? இப்போதுதானே கொஞ்சம் அமைதியாக இருக்கிறது .
நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் . இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் **********

இந்த முறை அவை கோர்ட் கேஸ் என்று வளரும் என்றும் நம்புவதாக மணிஜீ சொல்லுகிறார்.
பெண்ணடிமையா? ஆணாதிக்கமா?? பார்பன ஆதிக்கமா?? மஞ்சள் பச்சை என கட்சி விவகாரமா என்பது தெரியவில்லை.

பொறுத்திருந்து பாப்போம். தெம்பு இருநதால் களத்தில் குதிப்போம் ....இல்லாதவர்கள் ஓரமாக இருந்து கைதட்டுவோம்..

திங்கள், 21 ஜூன், 2010

#28 ஹைரோப்பா - கஞ்சாவூர்-சாக்லேட்டூர்

டூலிப் கார்டன்
அடுத்த நாள் காலையில் எழுந்தால் கப்பல் நகருவதாகவே தோன்றியது. கப்பலின் சின்ன பாத் ரூமில் குளித்து, டைனிங் ஹாலுக்கு வந்தாள் அதே பிரட் ஜாம் மார்மலேட் வெண்ணை. தண்ணீர் மட்டும் கிடையாது. "போங்கடா வெண்ணைங்களா" ன்னு பக்கத்தில் இருந்த டிபார்ட் மென்ட் ஸ்டோரில் தண்ணி பாட்டில் வாங்கிகொண்டு கப்பலை விட்டு கிளம்பினோம்.

வழியோர கட்டடம்

இப்போது நாங்கள் இருப்பது ஹாலந்த். குளிரான வானிலை. வேகமாக வீசும் காற்று , பச்சை பசேல் என்று புல் வெளிகள் , அங்காங்கே ஒட்டு வீடுகள். நிஜமாகவே உற்சாகம் ஏற்பட்டது. அகலமான சாலைகள் தெருவில் மனிதர்களையே பார்க்க முடியவில்லை. லெப்ட் ஹேன்ட் ட்ரைவ். இது தான் கொஞ்சம் இடித்தது. எதிரே வரும் வாகனங்கள் எல்லாம் நம் மேல் மோது வது போலவே நமக்கு தோன்று கிறது. ரவுண்ட் டானாக்களில் நம் பஸ் திரும்பும் போது, எங்கேயோ மோத போறது மாதிரியே ஒரு பீலிங்கு. இங்கைக்கும் லண்டனுக்கும் ஒரு மணி நேரம் டைம் டிபரன்ஸ் இங்க யூரோ தான் செல்லும். யூரோபியன் யூனியனில் சேராத இங்கிலாந்தில் பவுண்ட் தான் கரன்சி. இனி நாங்கள் போகும் எல்லா ஊரும் யூரோப்பியன் யூனியனில் இருப்பதால் எல்லா இடங்களிலும் யூரோ தான் செல்லும்.
டூலிப்
வெளியே டெம்பரேச்சர் நாலு டிகிரி. நாங்கள் முதலில் போனது கேகுனாப் டூலிப் கார்டன். ஹாலாந்து எங்கும் டூலிப் பூக்களாக பூத்து இருக்கும் என்று நம் சினிமாக்கள் ஏற்படுத்தி இருந்த இமேஜ் முற்றிலும் விலகியது (அந்நியன் படத்தில் , விக்ரமும், விவேக்கும் கோரமான சிலரும் பஜனை பாட்டு பாடிய படி வருவார்களே). அது மாதிரி ஹாலந்த் முழுவதும் இருக்கும் என்று எதிர் பார்த்தது என் தவறுதான் என்று தெரிந்தது. நாங்கள் போன டூலிப் தோட்டம் நம் போடானிகள் கார்டன் மாதிரி இருந்தது, அங்காங்கே டூலிப் பூக்கள் பூத்து இருந்தன. இந்த பூக்கள் ஏப்பிரல் , மே மாதங்களில் தான் பூக்குமாம். போட்டோ பிடித்து கொண்டேன். அங்கு இருந்த ஒரு டீ கடையில் காப்பியின் விலையை கேட்டு , ஜகா வாங்கினேன் (ஏறக்குறைய நூற்றி அம்பது ரூபாய்). அங்கு இருந்த கடையில் கீ செயின் ஒரு டஜன் வாங்கிகொண்டேன். ஆச்சரியமாக , என் காமிராவிற்கு மெமரி கார்டு அங்கே கிடைத்தது. ஏறக்குறைய 1500 ரூபாய் விலை சொன்னாள். வேறு வழி? இப்பொழுது தான் காமிராவிற்கு உயிர் வந்தது. போட்டோக்களை சுட்டு தள்ளி . பஸ்சிற்கு வந்தோம். அடுத்தது , நெதர்லாந்து. இங்கும் உற்சாகம் கொப்பளிக்கும் சூழல். நதிகள். நல்ல நதிகள்.

படகு
கரையோரம் நெருக்கமாக கடைகள், ஆபீஸ்கள், ஹோட்டல்கள். பாலங்கள். எங்கும் எங்கெங்கும் சைக்கிள்கள். ஒரு ரிவர் க்ரூஸ் போனோம்.

மத்தியான சாப்பாடுக்கு டாம் ஸ்குயர் என்ற இடத்தில் நிறுத்தினார்கள். அங்கிருந்த ஒரு காபி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு , ஒரு ஜூஸுடன் லன்ச்சை முடித்து கொண்டு புறப்பட்டோம்.

 இந்த ஊரில் சிகரெட் பிடிக்க தடை இருக்கிறது, ஆனால் கஞ்சா பிடிக்கலாம். ஊரே போதை மயமாக இருக்கிறது.

வழி எங்கும் பசுமையோ பசுமை. அங்கிருந்த ஒரு விண்ட் மில்லில் போட்டோ எடுத்துகொண்டோம்.

 இந்த மில் எந்த காலத்திலேயோ வேலை செய்து இருக்க வேண்டும்.

இப்போது போட்டோ எடுக்க மட்டுமே பயன்படுகிறது. அடுத்ததாக நாங்கள் போனது பெல்ஜியம்.


இந்த ஊரில் சமீபம் வரை கார் டூ வீலர் ஓட்ட லைசன்ஸ் கைசன்ஸ் எல்லாம் கிடையாதாம். சாக்கலேட்டும், கண்ணாடிகளும் இங்கு பிரசித்தம். நிறைய சாக்கலேட் வங்கி கொண்டேன். இங்குள்ள கிரான்ட் ஸ்குயர் கட்டிட கலையின் மார்வெல்.

சிமிண்டும் மெடலும் கலந்து சூப்பராக கட்டிடங்கள் கட்டி இருக்கிறார்கள். ஊரை சுற்றி பார்த்து விட்டு, ஹோட்டலுக்கு வந்தோம். நைட்டுக்கு பிஸ்கட்டும் , ஜூஸும்.

குட் நைட்.

.....இன்னும் பயணிப்போம்

புதன், 16 ஜூன், 2010

#27 நொந்த நித்தியும் பஞ்சாக்னி தபசும்

நித்தியானந்தா ஒரு வழியாக ஜெயிலில் இருந்து எஸ் ஆனார். ஆஸ்ரமம் வந்து உடன் செய்தது பஞ்சாக்னி தபஸ்.
போகி பண்டிகை போல் வட்டமாக நெருப்பை மூட்டி நடுவில் சாமியார் உட்கார்ந்து " fog effect' உடன் போஸ் தருகிறார். இது என்ன பஞ்சாக்னி?
மக்கள் தாம் பண்ணின தவறுக்கு பிராயச்சித்தமாக செய்யும் தவம் தான் இந்த பஞ்சாக்னி தபஸ். இதைத்தான் அக்னி பிரவேசம் என்றும் சொல்லுவார்கள் ( சீதை செய்ததும் இந்த தவம் தான்). பூமிக்கும் வான் வெளிக்கும் பாலமாக இருப்பதாலும், அசுத்த படுத்த முடியாததினாலும், அக்னி மற்ற 'பூதங்களை' விட சிறந்தது. நான்கு பக்கமும் தீயை மூட்டி ஐந்தாவது தீயாக சூரியன் இருக்க இதை ஜனவரி யில் இருந்து ஜூலை மாதத்தில் தொடங்குவார்கள்.
இந்த தவம் மனதை தூய்மை படுத்துவதாக நம்பிக்கை. இப்போது விஷயத்துக்கு வருவோம். இது " வாக்கிங் போகும்போது ஆரம்பித்து" ஒரு அவரில் முடியற உண்ணா விரதம் இல்லை. பன்னிரண்டு அல்லது ஒன்பது அல்லது மூன்று அல்லது ஒரு ஆண்டுக்கு செய்யும் தவம்.
முதலில் ஒரு பக்கம் நெருப்பை மூட்டி அதன் அருகில் அமர்ந்து தவம், பிறகு இரண்டு பக்கமும் தீ நடுவில் தவம், அதன் பின் மூன்று பக்கம் தீ நடுவில் தவம் , பிறகு நான்கு பக்கமும் தீ நடுவில் தவம், கடும் வெயிலிலும் நெருப்புக்கு நடுவே அமர்ந்து தவம் செய்ய வேண்டும். இப்படி சாதரணமாக ஒன்பது அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் செய்யவேண்டும்.
நமது சாமியார் இப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தால் , நான் அவரை உண்மையான சாமியார் என்று ஏற்றுக்கொள்ள தயார். சாமியார் செய்வாரா?
பஞ்சாக்னி தபஸ் பற்றி சீரியஸாக தெரிந்து கொள்ள click : http://www.yogamag.net/archives/2002/esep02/panch.shtml

வியாழன், 10 ஜூன், 2010

#26 நரசிம்ம பல்லவனின் - புஷ்ப்பத்தூர் போர்

வரலாற்று புனைவு தான் இது:-
சென்ற இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாற்று புகழ்மிக்க நரசிம்ம பல்லவன் - புஷ்பத்தூர் மகாராணி போரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்த்ரி கீழ் கண்டவாறு பதிவு செய்கிறார்.
ஆரிய வழியில் வந்த நரசிம்ம பல்லவன், " உலகத்தவர் எல்லாம் உறவினர்கள்" என்ற கொள்கையை  சொல்லி ஒரு சிற்றூரை  ஆண்டு வந்தான். ஒரு நாள் விதி வாய்விட்டு சிரிக்க, தன் ஆட்சியைப்பற்றி ஒரு நூலை அரங்கேற்றினான்.
அடுத்த ஊரான மயூரா புரியை ஆண்ட விஜய தேவி என்ற அரசி போட்டிக்கு, பல்லவனின் நூலை கிண்டல் செய்யும் தொனியில் தான் ஒரு நூலை எழுதி அரங்கேற்றினாள். நூல் அரங்கேற்றத்திற்கு , மயூராபுரியின் நட்பு நாடுகளை சேர்ந்த பற்பல அரசர்களும் அரசிகளும் வந்து விழாவை சிறப்பித்தனர். அக்காலத்தில் இதற்கு " கும்மியடித்தல் " என்ற சொல் வழக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. வந்து இருந்து விழாவை சிறப்பித்தவர்களில் , புஷ்பத்தூரை ஆண்ட, சந்தனா தேவி குறிப்பிட தக்கவர். சந்தனா தேவி, புஷ்பத்தூரை, திறம்பட ஆண்டு வந்த அரசி என்பதும், இவருக்கும் நரசிம்ம பல்லவனுக்கும் முன்பே, எரிச்சல், கடுப்பு இன்னபிற , உபாதைகளும் இருந்து வந்தன என்பதும், வரலாறு பகரும் உண்மைகள். மயூராபுரியின் நூல் அரங்கேற்ற விழா நரசிம்ம பல்லவனை கடும் கோபம் கொள்ள வைத்தது. தன் மீசை துடி துடிக்க, முகம் சிவக்க , மன்னன் வீறு கொண்டு எழுந்து, எழுத்தை எழுத்தால் வெல்ல விழைந்தான். " புஷ்பவல்லி" என்ற ஒரு நூலை அவசரமாக அவசரமாக எழுதி தன் அவையில் அரங்கேற்றினான். இந்த புஷ்பவல்லி என்ற நூல், மன்னனின் தரத்திற்கு ஏற்றதாக இல்லாவிடினும், எதிரி நாட்டு ராணியை தாக்குவது போல் இருந்ததால் , மன்னனின் நட்பு நாடு களின் வேந்தர்களும், சிற்றரசர்களும் , உள்நாட்டு விதூஷர்களும் பெரும் திரளாக வந்து இந்த அரங்கேற்றத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள்." புஷ்ப வல்லி" ஒரு தரம் தாழ்ந்த குப்பை என்று வரலாற்று ஆசிரியர்களும், இலக்கிய வாதிகளும், குறிப்பிடு கின்றனர். நரசிம்ம பல்லவன் , இப்படி ஒரு குப்பையை எழுதியதற்கு, ஆத்திரம் கண்ணை மறைத்ததும், கூட இருந்து ஏற்றி விட்ட ஆலோசகர்களும் தான் காரணம் என்று வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்திரி கருத்து உரைக்கின்றார்.
நரசிம்ம பல்லவனின் " புஷ்பவல்லி" , பெரும் போருக்கு காரணமானது. ட்ரோஜன் போருக்கு ஆப்பிள் பழம் காரண மானது போல், நரசிம்ம பல்லவன் போருக்கு இந்த நூல் காரணமானது என்கிறது வரலாறு.
புஷ்பத்தூரின்  அண்டை நாடான, 'கேள்வி' நாட்டு மன்னனுக்கு, இந்த அரசியலை பார்த்து தன் தோள்கள் தினவெடுத்தன. " என்ன ஒரு அரசிக்கு எதிராக ஒரு அரசன் நூல் எழுதினானா? இதை மற்ற அரசர்களும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்களா? என்னே ஆணாதிக்கம் என்னே ஆரிய ஆதிக்கம் , என்னே அராஜகம் இன்னும் பல என்னேக்களை சேர்த்து மிக்க கோபம் கொண்டான். நாமிருக்க, ஆரிய நரசிம்மன் , திராவிட அரசியை கிண்டல் செய்து நூல் இயற்றுவதா? அதை மற்றோர் ரசித்து இருப்பதா?. நரசிம்ம பல்லவன் கோஷ்டி யில் உள்ள அனைவர் மேலும் 'கேள்வி' நாட்டு மன்னன்  தீரா கோபம் கொண்டான்.மன்னர்கள் பலரும் தத்தம் வாட்களை உயர்திப்பிடித்தனர். 'வலைகுடாவை' போர் மேகங்கள் சூழ்ந்தன. கேள்விநாடு மன்னன் தலைமையில் ஒரு கோஷ்டி நரசிம்ம பல்லவன் தலைமையில் ஒரு கோஷ்டி என்று இரண்டு படைகளும் மோதின. இதில் நரசிம்ம பல்லவனின் நண்பன் 'பைத்தியக்கரத்தனமாக' எதிரியிடம் போய் சேர்ந்தான் என்றும் இந்த உள்குத்து போரின் ஒரு காரணம் என்றும் வரலாறு பேசுகிறது. எது எப்படியோ, பட்டாக்கத்தியை வேகமாக உருவிய நரசிம்ம பல்லவன், சரேலென்று ஜகா வாங்கி, ஸாரி என்று மடிந்து விட்டான். லேசில் தோற்காத மன்னன் பின் வாங்கியதன் காரணம் வரலாற்று அறிஞர் களின் யூகத்திற்கு எட்டாததாகவே உள்ளது.
தற்செயலாக ஆரம்பித்த இந்த போர், ஆரிய திராவிட போராக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதால் மன்னன் பின் வாங்கினான் என்றும்; இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சுபவன் அல்ல பல்லவன், தான் புனைந்த நூல் பலராலும் இழிந்துரைக்க பட்டதால் மனம் நொந்து , மன்னன் கிரீடத்தை துறந்து, போரை புறக்கணித்தான் என்றும் கூறுவர். மன்னன் பின் வாங்கியதை அசோகரின் மன மாற்றத்திற்கு ஒப்பிட்டும் சிலர் பேசுகின்றனர். பேஷண்டே போய் சேர்ந்த பிறகு மருந்து வாங்கி வரும் நபரைப்போல் ' பாண்டு' மன்னரும் மற்றோரும் 'கலகல' வென்று சல சலப்பதை பார்த்த மக்கள் ஆர்வத்துடன் கேட்கும் கேள்வி" 'பல்லவ மன்னர் மீண்டும் ஆட்சி அமைப்பரா? பகைமையை மறந்து மீண்டும் 'வலைகுடாவில்' வசந்தம் வீசுமா?; பிரிவினைகள் மனங்களை விட்டு மறையுமா?".
வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்திரி நீண்ட இக்கேள்விகளை  முன் வைக்கிறார்.

செவ்வாய், 8 ஜூன், 2010

#25 போபால் டிராஜடியும் ஊடகங்களின் குழப்படியும்

நீண்ட நெடும் காலத்திற்குப்பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கு ஒரு முடிவிற்கு வந்து இருக்கிறது.
சம்பவம் துயரமானது தான். இழப்பு ஈடு செய்ய முடியாதது தான். அங்கு பொறுப்பில் இருந்த 8 பேருக்கு இரண்டாண்டுகள் ஜெயில் என்பது குறைந்த பட்ச தண்டனையாகவே இருக்கலாம். அதற்காக?. இவ்வளவு எஹிர்ப்பு தேவைதானா? என்று கேட்க்க தோன்றுகிறது. அவர்கள் என்ன தீவிரவாதமா செய்தார்கள்? மும்பையில் போல குண்டு வெடிப்பா செய்தார்கள்? நடந்தது ஒரு pure accident. விளைவுகள் தீவிரமாக இருப்பதனால் செய்த செயல் பெரிய குற்றம் ஆகிவிடாது. யூனியன் கார்பைட் பாக்டரி பல்லாண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது( இந்த போபால் நிகழ்ச்சிக்கு பிறகு அது அல்மோஸ்ட் காணாமல் போய்விட்டது! பாவம். எஹோ ஒரு கெட்ட நாளில் நடந்த ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியால் போபாலில் பிரளயம் ஏற்பட்டது. வருந்த வேண்டிய நிகழ்ச்சிதான். அதற்காக சம்பந்த பட்டவர்களை எல்லாம் தூக்கில் போடு கசையடி கொடு என்ற ரேஞ்சிற்கு இந்த டிவி க்கள் கூப்பாடு போடுவது அபத்தம்.
நீங்கள் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் துணி காயப்போடுவதாக வைத்து கொள்ளுவோம். சரியாக கிளிப் போடாததால் காற்றில் துணி பறந்து தெருவில் போகும் பெட்ரோல் லாரியின் விண்ட் ஷீல்டில் விழுவதாக வைத்துக்கொள்வோம். லாரியின் டிரைவர் ஆக்சிடன்ட் செய்து விடுகிறார். பெட்ரோல் லாரி என்பதால் தீ பிடித்து பத்து குடிசை வீடுகள் எரிந்து விட்டன என்றாள் ; கோடியில் துணிக்கு சரியாக கிளிப் போடாத உங்களுக்கு தூக்கு தண்டனை என்று சொன்னாள் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் தான் இந்த ஊடகங்கள் அடிக்கும் கூத்து. மங்களூர் விமான விபத்தில் ஏகப்பட்டபேர் இறந்ததால், நல்ல வேளை Air இந்திய வின் சேர்மனை தூக்கில் போட சொல்லவில்லை இந்த ஊடகங்கள். சென்செஷனநிலசம் இருக்க வேண்டியதுதான் அதற்கு ஒரு வரை முறை வேண்டாம்.

பின் குறிப்பு: இந்த போபால் கசிவில் என் மச்சினன் மாட்டிக்கொண்டு; தெய்வாதீனமாக உயிர் தப்பி வந்தான். 

திங்கள், 7 ஜூன், 2010

# 24 ஹைரோப்பா (லண்டனூரில் ரங்கராட்டினம்-3 )

                                                                                     லண்டன் பாலம்
நம்மூரில் கூவம் ஓடுவதுபோல லண்டனில் தேம்ஸ் ஓடுகிறது ஆனால் நாறாமல் அழகாக! . நம்மர் ஆறு போல் சாக்கடையாக இல்லாமல் சுத்தமான அகலமான நதியாக ஓடுகிறது தேம்ஸ். நம்மூர் 'இளையவர்' கூட கூவம் இப்படித்தான் ஆகும் என்று கனவு காண்கிறாரோ?. நதியின் ஓரமாக எங்கள் பஸ் பயணித்தது.

பிக் B உடன்  
தேம்ஸ் குறுக்காக கட்டப்பட்ட ஒரு பாலத்தை தாண்டும் பொழுது சூசன் அந்த பாலம் பெண்களால் கட்டப்பட்டது என்றார். ஆண்கள் சண்டை போட போனபொழுது, ஒரு பாலம் அவசரமாக கட்டவேண்டி இருந்ததாம் , அந்தூர் பொண்ணுங்கள் சேர்ந்து இந்த பாலத்தை கட்டினார்களாம். நம்மூரில் இது போல பெண்கள் எதுவும் செய்தால் போல தெரியவில்லை. முறத்தால் புலிகளை விரட்டியதும், கணவன் போய் சேர்ந்தபிறகு குழந்தைகளையும் போர்களத்திற்கு அனுப்பியதையும் தவிர.
                                                                            ஐஸ்
இங்கே ஒரு உயரமான கல்லை நிற்க வைத்து, கிளியோபாட்ரா வின் ஊசி என்கிறார்கள். பிறகு நாங்கள் உலக புகழ் பெற்ற லண்டன் பாலத்தை கடந்தோம்.பாலத்தை கடக்கும் போது சூசன் பாடிய " LONDON BRIDGE IS FALLING DOWN" என்று பாடிய நர்சரி ரைமிற்கு நல்ல வரவேற்பு. அனேகமாக சூசன் பேசியதில் எல்லோருக்கும் புரிந்தது இதுதான் போலும்.

இப்பொழுது நாங்கள் வந்து சேர்ந்தது 'LONDON EYE' என்று அழைக்கப்படும் மிக பெரிய ஜயன்ட் வீல். நம் பொருட்காட்சி களில் இருப்பது போன்ற ஆனால் மிக பெரிய ஜ. வீ . இதில் பெஞ்சு களுக்கு பதில் கண்ணாடியால் ஆன அறைகள் சுற்றுகின்றன. நாம் உட்கார பெஞ்சுகள் போடப் பட்டு இருக்கின்றன.. இதில் ஒரு சுற்று போக அறை மணி நேரம் ஆகிறது. இதில் இருந்து லண்டனின் அழகான தோற்றம் தெரிகிறது,
                                                             இரு அறிவாளிகள்
காமிராவின் மெமோரி கார்ட் பயமுறுத்தி கொண்டு இருப்பதால் சிக்கனமாக போடோ க்களை க்ளிக்கி முடித்தேன்.

இதை முடித்து இறங்கினால் செம குளிர். சூடாக ஒரு காப்பி போடலாம் என்று வாங்கினால் ஒரு பெரிய மெகா கப்பில் காப்பி தருகிறார்கள் கொதிக்க கொதிக்க. மீண்டும் பஸ்ஸில் ஏறி திரும்பினோம். வரும் வழியில் ஒரு மணிக்கூண்டு 'Big ben' பார்த்தோம். எனக்கு ஒன்றும் இது இம்ப்ரசிவ் வாக இல்லை. நம்ப ராயபேட்ட மணிக்கூண்டைத்தான் நினைவு படுத்தியது. 'வெஸ்ட் மினிஸ்டர் அபே' என்று அழைக்க படும் 'சர்ச்' சை பார்த்து விட்டு தேம்ஸ் ஓரமாகவே வந்தோம். லண்டனின் இந்த எல்லா நினைவு சின்னங்களும் தேம்ஸ் நதி ஓரமாகவே அமைந்து உள்ளன.
                                                         கருத்தம்மா இந்திரா
லண்டனுக்கு பை பை சொல்லிவிட்டு ஹாலாந்து போக, ஒன்றரை மணி டிராவல்  தூரத்தில் உள்ள ஹார்விக் துறை முகத்தை அடைந்தோம்.

                                                                           கப்பலில் டைனிங் ஹால்
அங்கு பாஸ் போர்ட் செக்கிங் முடிந்த வுடன் ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். எங்கள் பஸ் இரண்டாம் புளோரில் நிற்க எங்கள் அறை பத்தாம் புளோரில் இருந்தது. பெரிய ஹோட்டல் போல அமைப்புடன் அந்த புளோர் இருந்தது. எங்களுக்கு கப்பல் மேல் தளத்திற்கு போக அனுமதி இல்லை.
                                                                                            கப்பலில் ரூம்
கீழ் புளோரில் உள்ள விஸ்தாரமான லைனிங் ஹாலில் இரவு உணவு பப்பே புரில் வைத்து இருந்தார்கள். நமக்கு வழக்கம் போல ' எல்லாமே மாமிசம் போல் இருந்ததால் நான்கு பிஸ்கெட்டும் ஜூஸும் குடித்து உணவை முடித்து கொண்டேன் ( ஜூஸ் கொடுக்கும் நாதாரிகள் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்). ரூமுக்கு வந்து படுத்தால் லேசான அசைவுடன் கப்பல் நகர சுகமான தூக்கம்.
                                                                              கப்பல் வெளி தோற்றம்

                                                                                                                                          .......இன்னும் பயணிப்போம்... 

வியாழன், 3 ஜூன், 2010

# 23 பூக்காரி மேட்டர் - சைக்கிள் சந்தில் சிந்து பாடும் பேர்வழிகள்.

நாள் வலையுலகிற்கு புதியவன். சேட்டைக்காரன் போன்றோர்கள் அட்வைஸ்படி, தாதாக்கள் மோதும் போது குறுக்கே தலை கொடுக்க பிடிக்காவதவன். ரெண்டு நாளாக பதிவுகளை படித்து நொந்து போனதால், என் விருப்பத்திற்கு மாறாக இந்த பதிவு.
பூக்காரி ஒரு மோசமான பாஷையில் எழுதப்பட்ட ஒரு பதிவு என்று கொள்ளலாம் அது மற்றொரு பதிவரை பற்றிய ரூபகம் என்று கொண்டால் எழுதிய நர்சிம்மை தாக்குகிறார்கள். நவீன வலைத்தமிழில் கேவலமாக எழுதுவது ரொம்ப சாதாரணம். பதிவுலக ஜாம்பவான்கள் எல்லாம் , முகம் சுளிக்கும்படி எழுதுவது ஒன்றும் புதிது அல்ல; அப்படி நரசிம் எழுதியது ஆச்சரியமான விஷயமும் அல்ல. என்னை கவனிக்க வைத்தது, இதை சாக்காக வைத்து ஒரு பெரிய கோஷ்டி செய்யும்' தர்ம அடி திருப்பணி'.
பூக்காரி பதிவில் எந்த ஒரு இடத்திலும் தன் ஜாதியை பற்றி பதிவர் எங்குமே சுட்டிக்காட்டவில்லை. பூக்காரியின் ஜாதியை பற்றியும் சொன்னாற்போல் நினைவில்லை.
எழுதியவர் 'பார்பான்' என்ற ஒரே காரணத்தால் பெரிய கோஷ்டியே சைக்கிள் சந்தில் சிந்துபாட கோஷ்டியாக ஓடிவருவது கேவலமான பார்பன துவஷத்தின் கேவலமான வெளிப்பாடாகவே தெரிகிறது. ஆணாதிக்கமும் பார்பனீயமும் எப்படி ஜெல் ஆகிறது என்று புரியவில்லை.
பூக்காரி பதிவு மேல் ஷாவனிசத்தின் வெளிப்பாடு என்று தெரிந்தால் அந்த aspect க்காக அவரை கும்மினால் நியாயம் இருக்கிறது, சம்மந்தம் இல்லாமல் அவரின் பூணூலை இழுப்பது , அதற்கு பெரிய கோஷ்டி கூடுவது கேனத்தனமாக தெரிகிறது. சிலருக்கு, பார்பனீயம், வர்ணாச்ரமம் . வைதீகம், சங்கராச்சாரி இப்படியெல்லாம் எழுதாவிட்டால் சோறு இறங்காது போல் தெரிகிறது. ரெண்டு பதிவர் அடித்துக்கொண்டால் ஒண்ணு ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கணும் அல்லது அரசமரத்தடியில் உட்கார்ந்து தீர்ப்பு சொல்லணும். அதை விட்டு விட்டு ஜாதி அரிப்பை தீர்த்துக்கொள்வது தப்பாட்டம்.