செவ்வாய், 8 ஜூன், 2010

#25 போபால் டிராஜடியும் ஊடகங்களின் குழப்படியும்

நீண்ட நெடும் காலத்திற்குப்பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கு ஒரு முடிவிற்கு வந்து இருக்கிறது.
சம்பவம் துயரமானது தான். இழப்பு ஈடு செய்ய முடியாதது தான். அங்கு பொறுப்பில் இருந்த 8 பேருக்கு இரண்டாண்டுகள் ஜெயில் என்பது குறைந்த பட்ச தண்டனையாகவே இருக்கலாம். அதற்காக?. இவ்வளவு எஹிர்ப்பு தேவைதானா? என்று கேட்க்க தோன்றுகிறது. அவர்கள் என்ன தீவிரவாதமா செய்தார்கள்? மும்பையில் போல குண்டு வெடிப்பா செய்தார்கள்? நடந்தது ஒரு pure accident. விளைவுகள் தீவிரமாக இருப்பதனால் செய்த செயல் பெரிய குற்றம் ஆகிவிடாது. யூனியன் கார்பைட் பாக்டரி பல்லாண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது( இந்த போபால் நிகழ்ச்சிக்கு பிறகு அது அல்மோஸ்ட் காணாமல் போய்விட்டது! பாவம். எஹோ ஒரு கெட்ட நாளில் நடந்த ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியால் போபாலில் பிரளயம் ஏற்பட்டது. வருந்த வேண்டிய நிகழ்ச்சிதான். அதற்காக சம்பந்த பட்டவர்களை எல்லாம் தூக்கில் போடு கசையடி கொடு என்ற ரேஞ்சிற்கு இந்த டிவி க்கள் கூப்பாடு போடுவது அபத்தம்.
நீங்கள் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் துணி காயப்போடுவதாக வைத்து கொள்ளுவோம். சரியாக கிளிப் போடாததால் காற்றில் துணி பறந்து தெருவில் போகும் பெட்ரோல் லாரியின் விண்ட் ஷீல்டில் விழுவதாக வைத்துக்கொள்வோம். லாரியின் டிரைவர் ஆக்சிடன்ட் செய்து விடுகிறார். பெட்ரோல் லாரி என்பதால் தீ பிடித்து பத்து குடிசை வீடுகள் எரிந்து விட்டன என்றாள் ; கோடியில் துணிக்கு சரியாக கிளிப் போடாத உங்களுக்கு தூக்கு தண்டனை என்று சொன்னாள் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் தான் இந்த ஊடகங்கள் அடிக்கும் கூத்து. மங்களூர் விமான விபத்தில் ஏகப்பட்டபேர் இறந்ததால், நல்ல வேளை Air இந்திய வின் சேர்மனை தூக்கில் போட சொல்லவில்லை இந்த ஊடகங்கள். சென்செஷனநிலசம் இருக்க வேண்டியதுதான் அதற்கு ஒரு வரை முறை வேண்டாம்.

பின் குறிப்பு: இந்த போபால் கசிவில் என் மச்சினன் மாட்டிக்கொண்டு; தெய்வாதீனமாக உயிர் தப்பி வந்தான். 

7 கருத்துகள்:

 1. hi, above-said is ur opinion since ur co-brother is alive. what's ur view in case if he is not alive bcos of this accident?

  பதிலளிநீக்கு
 2. விஸ்வாமித்திரன்,

  உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை.

  # யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர்.

  # விஷவாயு கசிவினால் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்பில் 15 ஆயிரம் பேர் வரை இறந்ததாகக் கூறப்படுகிறது.

  # ஆயிரக்கணக்கான கால்நடைகளும் விஷவாயு தாக்கி பலியாயின.

  # 5 லட்சம் பேர் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இவ்வளவுக்கும் காரணமான அந்த ஆலையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களுக்குத்தானே தண்டனை வழங்கப்படுகிறது. விபத்துக்குக் காரணம்? போதிய பராமரிப்பின்மை. ஆகவே தண்டனை யாருக்கு வழங்கவேண்டும்?

  இது போன்ற தண்டனைகள், அவர்களைப் போன்ற மற்ற ஆலை பொறுப்பாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றுதான் வழங்கப்படுகின்றன. இன்னுமொரு விபத்து நேராமல் தடுக்கவேண்டுமென்றால் இப்படித்தான் செய்யவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. டியர் பெயரில்லா , ஷெரிப்

  விபத்து என்று எப்போது சொல்கிறோமோ அப்போதே அது எதிர்பாராமல் ஏற்படுவது என்று தான் பொருள். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் எல்லோரும் ( தண்டனை அடைந்த 8 பேரயும் சேர்த்து) , விபத்து நடந்த இரவில் எங்கே இருந்தார்கள்? அதே போபாலில் தானே? அவர்கள் வீட்டு மக்களுக்கும் பாதிப்பு வரும் என்று தெரிந்து இருந்துமா அவர்கள் விஷ வாயுவை லீக் செய்திருப்பார்கள். சற்று சிந்தியுங்கள். ஒரு விபத்து முடிந்தபின் ஆயிரம் குற்றங்கள் சொல்வது நடை முறைதான். அது வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சிதான் என்பதில் மாற்று கருத்து இல்லை. அண்ணல் விபத்தை விபத்தாக த்தான் பார்க்க வேண்டுமே தவிர கொலையாக பார்ப்பது ஆரோக்யமான கண்ணோட்டம் இல்லை என்பது தான் நான் பதிய வந்த கருத்து.
  ஏன் மச்சினன் உயிரோடு இருப்பதனால்தான் இது ஏன் கருத்து என்பது குரூரமான கற்பனை
  வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. Mr. Viswamithiran

  You are a nut case. First understand what is meant by accident.

  விபத்து எதிர்பாராமல் நடப்பதன்று...... It is a sequence of Events.

  If your family was killed in that preplanned Crime will you speak like this???

  Becoz of people like you only, India is not growing and Justice is not same for all in India

  Those Bastards should be punished...........

  பதிலளிநீக்கு
 5. it is the negligence of the authorities of union carbide company. the damage also very huge. negligence is not an excuse. since the poeple lost their family and everything, they should be
  given compensation and work on that basis. govt.should (have) taken this kind of action atleast now. saying it is an accident is true. the price given to that unmeasurable. lives cannot be return by anybody. so pl. don't emphasise your opinion. u r on the wrong side.
  sukumar

  பதிலளிநீக்கு
 6. THE COMPLETE INFORMMATION HAS NOT BEEN GIVEN TO/KNOWN TO/UNDERSTOOD BY THE GENERAL PUBLIC.

  RECENTLY I HAPPENED TO SEE AN EDITORIAL IN AN ENGLISH NEWSPAPER: THE PLANTS USING METHYL ISOCYANATE, SUCH AS UNION CARBIDE, ARE EXPECTED TO KEEP AN ARRANGEMENT TO SPRAY AN ANTI-DOTE IN EMERGENCIES IF AND WHEN THE METHYL CYANATE LEAKS. IN THE BHOPAL PLANT, THEY USED TO HAVE THE ANDI-DOTE. IN THE NAME OF ECONOMY MEASURES, THE COMPANY MANAGEMENT STOPPED THE ARRANGEMENT. WHEN THE LEAK OCCURED, THEY COULD NOT DO ANYTHING.

  THAT IS, THOUGH IT IS AN ACCIDENT, CHEMICAL PLANTS, USING SUCH LETHAL CHEMICALS ARE EXPECTED TO KEEP SUCH ANTI-DOTES READY AND IN THIS CASE, THE MANAGEMENT IS RESPONSIBLE FOR DISCONTINUING THE EMERGENCY FIGHTING ARRANGEMENT. THEY ARE THEREFORE PUNISHABLE FOR CRIMINAL NEGLIGNECE.

  பதிலளிநீக்கு
 7. இந்த சம்பவம் விபத்தாகவே இருந்தாலும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதற்காக கடுமையான தண்டனை அளிக்க இந்திய கிரிமினல் சட்டத்தில் (Culpable homicide not amounting to murder. Section 304, Indian Penal Code) இடமுண்டு.

  ஆனால் உரிய தண்டனையளிக்க இங்கே மனம்தான் இல்லை என்பது வருந்துதற்குரிய விஷயம்.

  நன்றி!

  பதிலளிநீக்கு