செவ்வாய், 30 மார்ச், 2010

# 17 நீதி மன்றத்தில் நித்யானந்தா - பராசக்தி ஸ்டையிலில் ஒரு கற்பனை

டிஸ்கி: இது சத்தியமாக என் கற்பனை அல்ல; யாரோ மெயிலில் அனுப்பியது

வியாழன், 25 மார்ச், 2010

#16திரு.....திரு.......திரு விழாக்கொழந்தை சாரு



நேற்று அதிசயமாக NDTV , ராத்திரி வைத்தேன். god man or con man என்பது topic . அதில் இரண்டாவதாக நம் சாரு. ஐயாவின் மீசையையும் தோரணையையும் பார்த்து ஐயா கிழிக்கப்போறார் என்று பார்த்தால் ........ அய்யோ பாவம்.


திரு விழாவில் தொலைந்து போன கொழந்தை கணக்கா இவர் முழிக்கிறார். பிரெஞ்சு , இத்தாலி என்றெல்லாம் புரியாத கொடேஷன் கொடுக்கும் இவர் இங்கிலிஷை பார்த்து மெரண்டு நின்றது கண்கொள்ளாக்காட்சி.

இவரது ருத்ர தாண்டவம் எல்லாம் சென்னை வரை தான் போலும். புத்தகத்தை கிழித்த இவர் சாமியாரை கிழிப்பர் என்று பார்த்தால், கிழித்து தொங்க விட்ட துணியைப்போல் மனுஷன் துவண்டு நிற்கிறார்.


நான் பார்த்த வரை இவரை தவிர மற்ற எல்லோரும் பேசினார்கள். நித்யாவிற்கு பதாகை தூக்கிய இவர் ,சாமியாரை சாடாமல் பம்மினார்.


வண்டி சத்தம் கொடுத்து கூப்பிட்ட ஆசாமி சாருவை பேச அழைத்தும் நல்ல சந்தர்பத்தை கோட்டை விட்டார்.


தனது சைட்டில் எழுதி இருபது போல் "சிடி பஸ்ஸில் ஜன்னல் சீட் பிடிக்க முடியாமல் நிற்பதுபோல்" இருந்தார். ஒரு திருத்தம் கூடுவாஞ்சேரி ஸ்டேஷனில் நிற்காமல் ஓடும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க முயலும் அப்பாவி பாசஞ்சரைப்போல் தான் எனக்கு தோன்றியது.

சாரு பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ( நெக்ஸ்ட் டைம் டாக் இங்கிலீஷில் என்று சொன்னால் அமைதியாக அப்பீட் ஆகிகொள்ளுவது எல்லோருக்கும் நல்லது)

வெள்ளி, 19 மார்ச், 2010

# 15 ஹை......ரோப்பா - ஒரு அறிவிப்பு

வரும் ஏப்ரல் மாசம் முதல்  வாரத்தில் நான் ஐரோப்பா டூர் போகபோறேன்.



டூரைப்பத்தி விரிவான பதிவுகளை ஏப்ரல் முதல் வாரம் முதல்
எதிர்பார்க்கலாம்.
போட்டோப்படங்களுடன் ஒரு ஜிலு ஜிலு பயணம் போவோமா???


                                                                                ******
போட்டோ என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு பழைய விகடன் ஜோக்

" மேலே உள்ள படத்தில் ஆப்பிரிக்க எருமையுடன் கட்டுரை ஆசிரியர் ( இடது பக்கம் உள்ளது எருமை)".

செவ்வாய், 9 மார்ச், 2010

# 14 திரு நங்கைகள்






இது ஒரு சீரியசான பதிவு


பால்முறையில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அழைப்பது? வடமொழியில் நபும்சகர்கள் என்று சொல்லப்படுவார்கள். ஹிந்தியில் ஹிஜ்ரா என்று சொல்லப்படுவார்கள். இந்த பாவப்பட்டவர்கள் தமிழில் என்னவோ வருஷம் ஒரு பெயரால் சொல்லப்படுகிறார்கள் பழம் தமிழில் அலி என்று சொல்லப்பட்டார்கள். இது ஒரு அர்த்தமுள்ள சொல். அ + லிங்கம் என்பது அலி ஆனது. வடமொழியில் சொற்களுக்கே பால் உண்டு சில சொற்கள் புருஷ சொற்கள் என்றும் சில சொற்கள் ஸ்த்ரீ சொற்கள் என்றும் வேறு சில சொற்கள் இரண்டும் அற்றவை அதாவது அலிங்க சொற்கள் என்றும் வகை படுத்தப்படும். இந்த மரபு படி பார்த்தால் ஸ்திரீ , புருஷ இரண்டு வகையிலும் சேராதவை அ லிங்கங்கள் என்றும் சொல்லப்படும் இதுவே சுருங்கி அலி என்று மூன்றாம் பாலின மக்களை குறிக்கும் சொல்லாயிற்று. இந்த சொல் ஏனோ பிடிக்காமல் போனது. எண்பதுகளில் சுருளிராஜன் காமெடிகளில் ஒம்போது என்று கேலிசெய்யும் வார்த்தையானது. இதன் etimology தெரியாவிட்டாலும் இது ஒன்றும் கௌரவமான சொல் இல்லை என்பது நிச்சயம்


புராணகாலத்தில் ஒரு மூன்றாம் பால் பெண் அரவானை மணந்ததால் இவர்கள் அரவாணிகள் என்று சொல்லப்பட்டார்கள் ஓரளவு அர்த்தம் உள்ள வார்த்தையாக இது தெரிகிறது.


பிறகு ஏனோ இந்த வார்த்தை பிடிக்காமல் போய் இவர்கள் திருநங்கைகள் என்று இப்பொழுது அழைக்கபடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அரவாணிகள் என்பது ஒரு கெட்டவார்த்தை போலவே பார்க்கபடுகிறது. திரு நங்கைகள் என்பதுதான் கௌரவமான சொல்லாக ஏற்க்கப்பட்டுவிட்டது. இதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.


திருநங்கை என்பது ஆங்கிலத்தில் shemale என்பதின் நேரடி தமிழாக்கம். இது மூன்றாம் பாலிநத்தவர்களை "ஆம்பிளை பெண்" என்பதற்கு சமமாக படுகிறது. இந்த வார்த்தை அவர்களின் குறைபாட்டை நேரடியாக சுட்டிக்காட்டும் சொல்லாக எனக்கு தோன்றுகிறது. இது "ஒற்றைக்காலன்" "பேசாவாயன்" என்பது போன்ற குரூர சொல்லாகவே படுகிறது.


திருநங்கை என்பது அவர்களின் குறைபாட்டை நேரடியாக குறிக்கும் ஒரு சொல். மேலை நாட்டவருக்கு பாந்தமாக shemale என்ற சொல் இருக்கலாம் . நிச்சயமாக இது தமிழர் பண்பாட்டிர்கேற்ற சொல் அல்ல. இதற்கு அரவாணி என்ற வார்த்தை மிகவும் கண்ணியமானது டீசன்ட் ஆனது.


மாற்றுவார்களா?

வியாழன், 4 மார்ச், 2010

# 13 நித்யானந்தம்











கதவை திறந்தார்
காற்று வந்ததோ இல்லையோ பணம் வந்தது
காமிராவை பார்க்காமல்
கதவை மூடினார்
கஷ்டம் வந்தது
நித்யானந்தம் இப்போது
நித்யகஷ்ட்டத்தில்.

திங்கள், 1 மார்ச், 2010

#12 நீயா நானாவும் பெரியாரும்

நேற்று இரவு நீயா நானாவில் வழக்கம் போலவே கோபி கலக்கினார். சுயமுன்னேற்ற புத்தங்களை படித்தால் முன்னேறமுடியுமா என்பது போல தலைப்பு.

சோம வள்ளியப்பனை பலியாடு போல உட்காரவைத்து "சுயமுன்னேற்றப்புத்தகங்கள் எல்லாம் சுத்த ஹம்பக், இவை பாக்கெட்டில் இருந்து பணம் திருடப்படும் உத்திகள் என்பதுபோல பேசினார்கள். அவர் பாவம் கஷ்ட்டப்பட்டு தன் தரப்பு வாதத்தை சொல்ல முயற்சித்தார்.


கோபியோ "வாதங்கள் தட்டையாக உள்ளன" என்பது போன்ற 'பின் நவீனத்துவ' வார்த்தைகளைப்போட்டு பேசினார்.

வாழ்க்கையில் உயர, எஸ் ராமகிருஷ்ணன் ஜெயமோகன் போன்றவர்களின் புத்தங்களையும் படிக்கலாம் என்றார். மூன்றாவது நபரின் பெயரைச்சொல்லவில்லை, என்ன கோபமோ?. அல்லது ஜீரோ டிகிரி போன்ற புத்தங்களை படித்தால் வாழ்கையில் முன்னேற முடியாது என்று நம்பினாரோ தெரியவில்லை.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த சுப வீ, " தனிநபர் முன்னேறினால் போதாது, சமுதாயம் ஒட்டு மொத்தமாக முன்னேற புத்தங்கள் போடுங்கள்" என்று வள்ளியப்பனின் அடி மடியிலேயே கையை வைத்தார். சமையல் குறிப்பு புத்தகம் வாங்கினால் கூட, "ஊருக்கு சமைப்பதெப்படி?" என்ற புத்தகம் தான் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள் போல. ஊரே முன்னேறினால் தான் தனிநபர் முன்னேறுவார் என்று அடித்து கூறி , சமூகம் முன்னேற, தீண்டாமை ஒழியவேண்டும் என்பதுபோல் பேசினார். தாம் கைகூப்புவது இல்லை ஏனென்றால் அது மறைமுகமாக தீண்டாமையை வளர்ப்பதாக தனக்கு தோன்றுவதாக உள்ளது என்றார். அதற்கு கைகொடுப்பது மேல் என்றார்.


சுயமுன்னேற்றம் பற்றிப்பேசும் போது, பெரியார் , அம்பேத்கார் புத்தங்களை படிக்கச்சொன்னார். சுய முன்னேற்றத்திற்கும் , பெரியாருக்கும் என்ன சம்மந்தம் என்று சத்தியமாக புரியவில்லை. வேலைக்குப்போவது , RESUME எழுதுவது போன்றவற்றை போதிக்கும் புத்தகங்களைப்பற்றி பேசும்  போது எப்படி இவரால் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்ளே கொண்டு வர முடிகிறது என்றே புரியவில்லை.


பெர்யாரைபடித்தால் பிராமண துவேஷம் வருமே தவிர எப்படி முன்னேற்றம் வரும் என்பது புரியவே இல்லை நம்மை போன்ற பாமரர்க்கு.

***************************