செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

#11. ஈ மெயிலில் சுட்டவை

1)     “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..

“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா 

5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். 
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

மனைவி:  நாம் மாலை நகை கடைக்குப்போவோம்  என்ன காலம்? (Tense)

கணவன்:   போறாதகாலம்

6) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

8) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

9) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி? 

10) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

11) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

12) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

13) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும். 
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு 
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!

புதன், 10 பிப்ரவரி, 2010

10# வாழ்க்கையே ஆம்லேட் தான்

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?


கணவன்:  என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா
சேர்ந்து சாப்பிடலாம்!
மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.
***************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?
மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க
கணவன்: அவ்ளோதானா?
மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!
***********************
கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!
******************************
கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?
மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
***********************
கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?
மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!
*************************
கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?
மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!
*****************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
மனைவி: சாதம் வைத்து இருக்கேன்,  பிரிஜ்ஜில நேத்து வாங்கின மோரும் இருக்கு , பழைய முட்டை ஒண்ணும்  இருக்கு  ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!
************************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?
மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!
************************************

பின்னூட்டம் மறக்காதீங்க









செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

#9 கத்தரிக்காய் சமாசாரம்


"To be or not to be" ஒதெல்லோ மாதிரி ஊரே பேசறவிஷயம் தான் இந்த BT கத்தரிக்காய்.
வெங்காயம், முருங்கைக்காய் அளவு சினிமால பேமஸ் ஆகலைன்னாலும் தமிழ்நாட்டில் மார்க்கெட் உள்ள காய் தான் இது. கூட்டு, கறி, ரசவாங்கி, குழம்பு, சாம்பார் ன்னு பல ரூபத்தில தமிழன் வயத்தையும் மனசையும் நிறைக்கிற கத்தரிக்காய்க்கு வந்தது சோதனை BT வடிவத்தில்.

BT கத்தரின்னா என்ன என்ன.
கத்தரிக்காயின் மரபணுவ மாத்தி சாதாரண கத்திரிக்காயின் பல குறைபாடுகள நீக்கி பண்ணின Man and God creation தான் இந்த BT கத்தரிக்காய்.

இதுல குழம்பு பண்ணினா கசக்குமா?
யோவ் ! வீட்டில மொளகா பொடிக்கு பதில் சீக்காப்போடிய போட்டாதான் கசக்கும். மத்தப்படி டேஸ்ட் எல்லாம் சாதாரணமாதான் இருக்கும்.

அப்ப என்ன பிரச்னை இதில? .
பிரச்னை காயில இல்ல நம்பகிட்டதான். இந்த கத்தரிக்காய பயிர் ஒருதடவ பண்ணிட்டா அப்புறம் சாதா கத்திரிக்காய பயிர் பண்ண முடியாதாம்.


இந்த கதரிக்கையின் விதய இம்போர்ட் தான் பண்ணனுமாம். நாமளே விளைவிக்க முடியாதாம். அதனால இதுக்கு மாறிட்டோம்ன்னா அதுக்கு அப்புரம் உஜாலாவுக்கு மாற முடியாது. அடுத்த நடவுக்கு அமெரிக்கக்காரன் தான் விதை தரணும். இப்படியே கத்தரி, வெண்டை, மொளகான்னு மாறிட்டோம்ன்னா அமெரிக்காகாரன் தர வெதயதான் நாம் பயிர் பண்ணனும். அதாவது நாம என்ன பயிர் பண்ணனும், என்ன சாபிடணும்ன்னு அமெரிகாகாரந்தான் முடிவு பண்ணும்படி ஆகிவிடும். இத சாப்பிடறதினால கான்சர் முதலிய வியாதிகள் வந்து சேரும். (யப்பா இந்த கான்சர் தொல்ல பெருந்தொல்லையா போயிடுத்தப்பா. சிகரட் புடிச்சா கான்சர், பொகயிலை போட்டா கான்சர், pet பாட்டில்ல தண்ணி புடிச்சு வெச்சு குடிச்சா கான்சர்...BT கத்திரிக்காய சாப்பிட்டாலும் கான்சர்).

அப்ப ஏனய்யா இத பயிர் பண்ணனும்?
இத பயிரிட்டா பூச்சி கடிக்காது ( பூச்சியும் செத்திடுமா கான்சர் வந்து ன்னு எல்லாம் கேக்ககூடாது), மகசூல் (சரியான வார்த்தையா?௦) பலமடங்கு அதிகரிக்கும், காயின் அளவும் பெரிசாக வரும். விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். விவசாயத்த பெரும் அளவு நம்பும் இந்தியாவுக்கு BT காய்கறிகள் பெரிய boon.

BT கத்தரிக்காய எதிர்கறது கம்ப்யூட்டர் பயன்பாட்ட எதிர்தோமே அது மாதிரிதான். அரசியல்-வியாதிகள் ஊர்வலம் போகலாம். வேலைத்த பசங்கள கூட்டம் கூட்டி கோஷம் இடலாம். ஆனா இதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரான போராட்டமே. நிச்சயமா ஜெயிக்க முடியாது. Petroleum 80 % இறக்குமதியாறது என்பதினால கார் ஸ்கூட்டர்ல போகமாட்டேன் மாட்டுவண்டியிலதான் போவேன், மத்தவங்களும் போகணும் என்பது போன்ற அபத்தம் தான் இந்த BT கத்தரிக்கு எதிரான போராட்டமும்.

குஷ்பு இட்லி மாதிரி இந்த காய்கறிகளுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் நல்ல ஒரு பெயரை தேர்ந்தெடுத்து வைக்கலாம்.

இப்போ கத்தரிக்காய் பத்தின ஜோக்
ஒருநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை தோட்டம் வழியாக நடந்துகொண்டு இருந்தார்கள். அன்று அக்பருக்கு செம்ம குஷி, அவங்க வீட்டுஅம்மா கத்தரிக்காய் பிரியாணி செய்து போட்டாங்க போல. தோட்டத்துல ஒரு கத்தரிக்காய் செடி காயோட இருந்துது அத பாத்தா ராஜா " காய் ன்னா கத்தரிக்காய் தான் ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு " என்று புகழ்ந்து கொண்டு வந்தாராம். கூட வந்த பீர்பால் , "ஆமாம் ராஜா கத்தரிக்காய் தான் காய்களின் ராணி அதுதான் ஆண்டவனே அதுக்கு தலையில் கிரீடம் வெச்சு இருக்கான்" ன்னு ஜிங் சாங் தட்டினானாம்.

அடுத்த நாள் , ராஜாவுக்கு உடம்பு பூரா அரிப்பு வந்துடுத்து , அரண்மனை வைத்தியர் அரிப்புக்குககாரணம் கத்தரிக்காய்தான் ன்னு சொன்னார். அடுத்த நாள் சோகமா slowmotion ல ராஜாவும் பீர்பாலும் அதே தோட்டத்துல உலாப்போறாங்க. அதே கத்திரிக்க செடியப்பாத்து ராஜா சொல்றார் " ஒலகத்துலையே மோசமான காய் இந்த கத்தரிக்காய் தான் இல்ல?'. பீர்பால் கொஞ்சமும் தயங்காத சொல்றார் "ஆமாம் மன்னா இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமான காய் இந்த கத்திரிக்காய் தான். அதுதான் கடவுளே இதன் தலையில அப்பு அடிச்சிருக்கான்"

ராஜாவுக்கு ஆச்சரியம் " யோவ் என்னய்யா பேசற நீயி.. நேத்திக்கு நான் கத்தரிக்காய் தான் நல்ல காய் ன்னு சொன்னதுக்கு நீ "ஒலகத்திலேயே நல்லகாய் கத்திரிக்காய் தான் அதுதான் கடவுளே இதன் தலையில கிரீடம் வெச்சு இருக்கான்"ன. இன்னைக்கு நான், "இது மோசமான காய் ன்னு" சொன்ன ஒடனே நீ , "இது ஒலகத்திலேயே மோசமான காய் அதுனாலதான் ஆண்டவனே இதன் தலைல ஆப்பு அடிசுஇருக்கன்நு சொல்லற? " ன்னார். பீர்பால் சொன்னான்" ராஜா இந்த பீர்பால் ஒங்களுக்குத்தான் அடிமை , கத்திரிக்காய்க்கு இல்லை".



பின்னூட்டம் ப்ளீஸ்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

# 8 அய்யோ பாவம் வடிவேலு

பல படங்களில் கூட வரும் கூட்டமே வடிவேலுவை தர்ம அடி அடிப்பதைபார்த்து நாம் சிரித்து இருக்கிறோம். இப்போது அவர்கூடவே காமெடிபண்ணும் சிங்கமுத்து டிராஜடி பண்ணிட்டார் போல. 
சுடுகாடு முதல் பொறம்போக்கு வரை  எல்லாத்தையும் வடிவேலு தலையில 
கட்டிட்டு ஆறேழு  கோடியோட  பார்ட்டி எஸ்.  போததற்கு கொலை மிரட்டல் வேறு. 
இதில் ஒரு விசேஷம் என்னன்னா இன்கம்டாக்ஸ் ரைட்க்கு அப்பறம் தான் இது வெளியில் வந்திருக்கு.  
ஏமாந்த  பணத்துக்கும்  டாக்ஸ் கட்டணும்ன்னு காமெடிக்கு தெரியுமா?

ஐயா தாயே பின்னூட்டம் போடுங்கப்பா...


#7. ஆயிரத்தில் ஒருவன் - ஒரு பார்வை


"இந்த படத்த பத்தி விமர்சனம் பண்ணும் போது தன கையில கீ  போர்டும்   மௌசும் இருக்கு என்பதினாலே கைக்கு வந்ததெல்லாம் நெட்ல எழுதறாங்க. சினிமாவ பத்தி விமர்சனம பண்ணுங்க அதை விட்டுட்டு அதுக்கு ஆன பணம் டைம் இதபத்திஎல்லாம் எழுதறது 
தேவை இல்லாதது"   இப்படி திருவாய் மலர்ந்தவர் ஒரு டிவி சானலில் சினிமா விமர்சனம் பண்ணும் ஒரு நடிக்காத நடிகை. 'நீ ஹோட்டலுக்கு வந்தியா தட்ட பாத்து சாப்டுட்டு போய்கினே இரு நீ ஏன் சமையல் ரூம்குள்ள எட்டி பார்குற. நாங்க எப்புடியோ சமைப்போம் அத பத்தி நீ பேசக்கூடாது' என்று வாய கட்டிபோடுவது போல் இருக்கு நடிகையின் அட்வைஸ். நாங்க நூத்தம்பது ரூ பாய அழுது அர நாள் வேஸ்ட் பண்ணி படம் பாத்தோம்னா அது சம்மந்தப்பட்ட எதப்பத்தியும்  எழுதறது எங்க உரிமை.    விமர்சனம் பார்ப்போமா?. 

'யோவ் இது எல்லாம் கப்சா; கேஸ் கீஸ் போட்டு தொலைக்காதீங்க' பட  ஆரம்பத்திலேயே டிஸ்கி போட்டுடறாங்க. எப்பவோ ஊரை விட்டு போன சோழ மன்னர் குல வாரிசையும், சோழ மக்களையும் தேடி ஸ்லீவ்லஸ் ஆட்ன்ட்ரியா, அரை நிஜார் ரீமா மற்றும்  கூலிக்காரன்  கார்த்தி போகும் பயணம் தான் இந்த சினிமாவின் கரு.  கற்காலத்தையும் தர்காலத்தையம் மோதவிட்டு படம் எடுத்து இருகிறார்கள். இதில்  பல காட்சிகள்  இங்கிலீஷ் சினிமால  உருவப்பட்டது என்று அறிந்தவர்கள் கூறுவதையும் நினைவில் கொள்ள வேண்டும். மணிரத்தினத்தின் பல காட்சிகள் இருளில் எடுக்கபட்டிருக்கும், இதில் அவரையும் மிஞ்சி விட்டார்கள். கதை குழப்பம் தவிர இந்த இருட்டு குழப்பமும் படத்தின் பின் பாதியில். 

"ஒங்களுக்கு இதில் வரும் தமிழ் புரியலைன்னா ஒங்களுக்கு தமிழும் தெரியாது வரலாறும் தெரியாதுன்னு அர்த்தம்" மேற்படி, விமர்சன நடிகையின் கருத்து இது. தெரியாம வந்து மாட்டிகிட்டது மட்டும் தெரிந்தது எனக்கு. ஏனோ சிலோன்தமிழைப்பேசவைத்து படத்தின் பின் பகுதியில் குழப்புகிறார்கள். படத்தில் வரும் வன்முறையையும் சிலோன் தமிழையும் சேர்த்துபார்த்தால் பலர் சொல்வது போல் இந்தப்படம் தற்காலத்திய ஸ்ரீ லங்கா போராட்டம் போல் தான் இருக்கிறது. பாவம் டைரக்டர்.பார்த்திபன் சொன்னது போல் சப் டைடி லாவது போட்டு தொலைத்திருக்கலாம்.  ஏன் தமிழர்கள் என்றால் நீக்ரோக்கைவிட கருப்பாக இருப்பார்கள் என்று டைரக்டர் நினைத்தார் என்று தெரியவில்லை. படம் முழுவதும் கரியை  பூசிக்கொண்டு பெரிய கோஷ்டி அலைகிறது.   சோப்பு போட்டு குளிக்காதவன் மாதிரி ராஜா இருக்கும்                                                                                                            போது குடிமக்களின் நிலைமையை கற்பனை செய்து பார்க்கலாம்.  ராஜ குமாரன் சோமாலியா  பையன்  மாதிரி இருக்கிறான் பாவம்.  
ஒரு ராஜாவை இதைவிட கேவலமாக பார்த்தாமாதிரி  நினைவு இல்லை.
மூன்று முறை பார்த்தும் நமக்கு கதை விளங்கவில்லை பாஸ். சுஜாதாவின் வசந்த் சொல்லுவது போல் " ஒரு ரத்தப்பொரியலும் ராவா குவாட்டர் ரம்மும் அடித்தாதான் தலைசுத்தல் சித்த நிக்கும் பாஸ்".

அய்யா தாயே பின்னூட்டம் போடுங்கப்பா



.  


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

#6 பாவத்தமிழர் சாரு

நான் ரெகுலராக விரும்பிப்படிக்கும் வலைத்தளம் சாருவின் வெப் பேஜ்.   இந்த மனிதர் ஆனா ஊனா  கப்பரைய தூக்கிட்டு  கிளம்பிடுறார் ( அவரது மாமூல்  e  உஞ்சவ்ருத்திய தவிர )  அவரது ரீசென்ட் ப்ளாக படிச்சுட்டு எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல்ல.  இவரது பரிதாபகரமான ஏழ்மைய புரிஞ்சிண்டு தமிழ் கூறும் நல்லுகம் என்ன பண்ணரப்போறது (நாய்களுக்கு மம்மு வாங்கவும் செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ண பணம் இல்லை என்னும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள தவிர)  நாம் மரியாதைவைக்கும் பெரியவர் இப்படி எழுதுவது எங்களுக்கு எரிச்சலாக இருக்கு என்பதை எப்போதுதான் புரிந்துகொள்வாரோ?


சோகமுடன்
விஸ்வாமித்திரன்


கெஞ்சல் :ஐயா தாயே பின்னூட்டம் போடுங்கப்பா...

#5 ஜெயராமின் சோக முகம்

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் தன சூப்பர் பங்களாவில் ஜாலியாக இருந்து முடிந்தால் ஒரு கட்சியும் ஆரம்பித்து சி எம் ஆகப்பார்கரத விட்டுட்டு , தன வீட்டு வேலைகாரிய எருமை மாடு போன்ற  தமிழ்ககாரி   என்று சொல்லி , தினமும் சோக முகத்துடன் சாரி சொல்லும் இந்த மலையாளிக்கு ஒரு "அய்யோ பாவம்"