திங்கள், 21 ஜூன், 2010

#28 ஹைரோப்பா - கஞ்சாவூர்-சாக்லேட்டூர்

டூலிப் கார்டன்
அடுத்த நாள் காலையில் எழுந்தால் கப்பல் நகருவதாகவே தோன்றியது. கப்பலின் சின்ன பாத் ரூமில் குளித்து, டைனிங் ஹாலுக்கு வந்தாள் அதே பிரட் ஜாம் மார்மலேட் வெண்ணை. தண்ணீர் மட்டும் கிடையாது. "போங்கடா வெண்ணைங்களா" ன்னு பக்கத்தில் இருந்த டிபார்ட் மென்ட் ஸ்டோரில் தண்ணி பாட்டில் வாங்கிகொண்டு கப்பலை விட்டு கிளம்பினோம்.

வழியோர கட்டடம்

இப்போது நாங்கள் இருப்பது ஹாலந்த். குளிரான வானிலை. வேகமாக வீசும் காற்று , பச்சை பசேல் என்று புல் வெளிகள் , அங்காங்கே ஒட்டு வீடுகள். நிஜமாகவே உற்சாகம் ஏற்பட்டது. அகலமான சாலைகள் தெருவில் மனிதர்களையே பார்க்க முடியவில்லை. லெப்ட் ஹேன்ட் ட்ரைவ். இது தான் கொஞ்சம் இடித்தது. எதிரே வரும் வாகனங்கள் எல்லாம் நம் மேல் மோது வது போலவே நமக்கு தோன்று கிறது. ரவுண்ட் டானாக்களில் நம் பஸ் திரும்பும் போது, எங்கேயோ மோத போறது மாதிரியே ஒரு பீலிங்கு. இங்கைக்கும் லண்டனுக்கும் ஒரு மணி நேரம் டைம் டிபரன்ஸ் இங்க யூரோ தான் செல்லும். யூரோபியன் யூனியனில் சேராத இங்கிலாந்தில் பவுண்ட் தான் கரன்சி. இனி நாங்கள் போகும் எல்லா ஊரும் யூரோப்பியன் யூனியனில் இருப்பதால் எல்லா இடங்களிலும் யூரோ தான் செல்லும்.
டூலிப்
வெளியே டெம்பரேச்சர் நாலு டிகிரி. நாங்கள் முதலில் போனது கேகுனாப் டூலிப் கார்டன். ஹாலாந்து எங்கும் டூலிப் பூக்களாக பூத்து இருக்கும் என்று நம் சினிமாக்கள் ஏற்படுத்தி இருந்த இமேஜ் முற்றிலும் விலகியது (அந்நியன் படத்தில் , விக்ரமும், விவேக்கும் கோரமான சிலரும் பஜனை பாட்டு பாடிய படி வருவார்களே). அது மாதிரி ஹாலந்த் முழுவதும் இருக்கும் என்று எதிர் பார்த்தது என் தவறுதான் என்று தெரிந்தது. நாங்கள் போன டூலிப் தோட்டம் நம் போடானிகள் கார்டன் மாதிரி இருந்தது, அங்காங்கே டூலிப் பூக்கள் பூத்து இருந்தன. இந்த பூக்கள் ஏப்பிரல் , மே மாதங்களில் தான் பூக்குமாம். போட்டோ பிடித்து கொண்டேன். அங்கு இருந்த ஒரு டீ கடையில் காப்பியின் விலையை கேட்டு , ஜகா வாங்கினேன் (ஏறக்குறைய நூற்றி அம்பது ரூபாய்). அங்கு இருந்த கடையில் கீ செயின் ஒரு டஜன் வாங்கிகொண்டேன். ஆச்சரியமாக , என் காமிராவிற்கு மெமரி கார்டு அங்கே கிடைத்தது. ஏறக்குறைய 1500 ரூபாய் விலை சொன்னாள். வேறு வழி? இப்பொழுது தான் காமிராவிற்கு உயிர் வந்தது. போட்டோக்களை சுட்டு தள்ளி . பஸ்சிற்கு வந்தோம். அடுத்தது , நெதர்லாந்து. இங்கும் உற்சாகம் கொப்பளிக்கும் சூழல். நதிகள். நல்ல நதிகள்.

படகு
கரையோரம் நெருக்கமாக கடைகள், ஆபீஸ்கள், ஹோட்டல்கள். பாலங்கள். எங்கும் எங்கெங்கும் சைக்கிள்கள். ஒரு ரிவர் க்ரூஸ் போனோம்.

மத்தியான சாப்பாடுக்கு டாம் ஸ்குயர் என்ற இடத்தில் நிறுத்தினார்கள். அங்கிருந்த ஒரு காபி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு , ஒரு ஜூஸுடன் லன்ச்சை முடித்து கொண்டு புறப்பட்டோம்.

 இந்த ஊரில் சிகரெட் பிடிக்க தடை இருக்கிறது, ஆனால் கஞ்சா பிடிக்கலாம். ஊரே போதை மயமாக இருக்கிறது.

வழி எங்கும் பசுமையோ பசுமை. அங்கிருந்த ஒரு விண்ட் மில்லில் போட்டோ எடுத்துகொண்டோம்.

 இந்த மில் எந்த காலத்திலேயோ வேலை செய்து இருக்க வேண்டும்.

இப்போது போட்டோ எடுக்க மட்டுமே பயன்படுகிறது. அடுத்ததாக நாங்கள் போனது பெல்ஜியம்.


இந்த ஊரில் சமீபம் வரை கார் டூ வீலர் ஓட்ட லைசன்ஸ் கைசன்ஸ் எல்லாம் கிடையாதாம். சாக்கலேட்டும், கண்ணாடிகளும் இங்கு பிரசித்தம். நிறைய சாக்கலேட் வங்கி கொண்டேன். இங்குள்ள கிரான்ட் ஸ்குயர் கட்டிட கலையின் மார்வெல்.

சிமிண்டும் மெடலும் கலந்து சூப்பராக கட்டிடங்கள் கட்டி இருக்கிறார்கள். ஊரை சுற்றி பார்த்து விட்டு, ஹோட்டலுக்கு வந்தோம். நைட்டுக்கு பிஸ்கட்டும் , ஜூஸும்.

குட் நைட்.

.....இன்னும் பயணிப்போம்

3 கருத்துகள்: