நாள் வலையுலகிற்கு புதியவன். சேட்டைக்காரன் போன்றோர்கள் அட்வைஸ்படி, தாதாக்கள் மோதும் போது குறுக்கே தலை கொடுக்க பிடிக்காவதவன். ரெண்டு நாளாக பதிவுகளை படித்து நொந்து போனதால், என் விருப்பத்திற்கு மாறாக இந்த பதிவு.
பூக்காரி ஒரு மோசமான பாஷையில் எழுதப்பட்ட ஒரு பதிவு என்று கொள்ளலாம் அது மற்றொரு பதிவரை பற்றிய ரூபகம் என்று கொண்டால் எழுதிய நர்சிம்மை தாக்குகிறார்கள். நவீன வலைத்தமிழில் கேவலமாக எழுதுவது ரொம்ப சாதாரணம். பதிவுலக ஜாம்பவான்கள் எல்லாம் , முகம் சுளிக்கும்படி எழுதுவது ஒன்றும் புதிது அல்ல; அப்படி நரசிம் எழுதியது ஆச்சரியமான விஷயமும் அல்ல. என்னை கவனிக்க வைத்தது, இதை சாக்காக வைத்து ஒரு பெரிய கோஷ்டி செய்யும்' தர்ம அடி திருப்பணி'.
பூக்காரி பதிவில் எந்த ஒரு இடத்திலும் தன் ஜாதியை பற்றி பதிவர் எங்குமே சுட்டிக்காட்டவில்லை. பூக்காரியின் ஜாதியை பற்றியும் சொன்னாற்போல் நினைவில்லை.
எழுதியவர் 'பார்பான்' என்ற ஒரே காரணத்தால் பெரிய கோஷ்டியே சைக்கிள் சந்தில் சிந்துபாட கோஷ்டியாக ஓடிவருவது கேவலமான பார்பன துவஷத்தின் கேவலமான வெளிப்பாடாகவே தெரிகிறது. ஆணாதிக்கமும் பார்பனீயமும் எப்படி ஜெல் ஆகிறது என்று புரியவில்லை.
பூக்காரி பதிவு மேல் ஷாவனிசத்தின் வெளிப்பாடு என்று தெரிந்தால் அந்த aspect க்காக அவரை கும்மினால் நியாயம் இருக்கிறது, சம்மந்தம் இல்லாமல் அவரின் பூணூலை இழுப்பது , அதற்கு பெரிய கோஷ்டி கூடுவது கேனத்தனமாக தெரிகிறது. சிலருக்கு, பார்பனீயம், வர்ணாச்ரமம் . வைதீகம், சங்கராச்சாரி இப்படியெல்லாம் எழுதாவிட்டால் சோறு இறங்காது போல் தெரிகிறது. ரெண்டு பதிவர் அடித்துக்கொண்டால் ஒண்ணு ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கணும் அல்லது அரசமரத்தடியில் உட்கார்ந்து தீர்ப்பு சொல்லணும். அதை விட்டு விட்டு ஜாதி அரிப்பை தீர்த்துக்கொள்வது தப்பாட்டம்.
அதை விட்டு விட்டு ஜாதி அரிப்பை தீர்த்துக்கொள்வது தப்பாட்டம் - Totally agree with this.
பதிலளிநீக்குபூக்காரி பதிவில் "வளர்ப்பு முறை" என்ற வார்த்தை வந்துள்ளதே அதை என்ன சொல்வது நண்பா
பதிலளிநீக்குவெண்ணிற இரவு,
பதிலளிநீக்குதலைவரே இங்கதான் கொஞ்சம் சிந்திக்கணும். நல்ல பேசும் நடத்தையும் பிறப்பால வரது இல்ல, வளர்கிற விதத்தில் தான் இருக்கு. தேவநாதன் போன்றோர்களும், கலாம் போன்றோர்களும் இதற்கு சான்று. நான் ஏன் கலாமை சொன்னேன் என்றால் முஸ்லிம்மாக பிறந்தும் அவர் புலால் சாப்பிடாமல் , எல்லா ஜாதிக்காரர்களும் கும்பிடும் வகையில் இருக்கிறார்.
புனைவில் நரசிம் சொன்னது இது தான் என்று நான் புரிந்து கொண்டு இருக்கிறேன்,.
பெயரிலாவிற்க்கும் வெண்ணிற இரவிற்கும் நன்றி.