புதன், 18 ஆகஸ்ட், 2010

# 36 சாருவும் பஸ் டிரைவரும்

ரொம்ப வருஷம் முன் நான் கொஞ்ச காலம் நாகபட்டினத்தில் ஆணி புடிங்கி கொண்டு இருந்த போது வாராவாரம் திருவள்ளுவர் பஸ்ஸில் சென்னை வந்து போகவேண்டி இருந்தது. இந்த பஸ் ஒன்றில் தான் நம் கதாநாயகர் டிரைவராக இருந்தார் அவர் பெயர் ஸே...முனுசாமி என்ற கொள்வோம். இந்த முனுசாமி தன்னை வெகு உன்னதமான டிரைவர் என்று நினைத்துக்கொண்டு பஸ் ஓட்டுவார். அது என்னவோ நாகபட்டினம் போய் சேர்வதற்குள் குறைந்தது ஒரு இருவதுபேராவது நிச்சயமாக முனுசாமியுடன் சண்டை போடுவார்கள். அதில் ஒன்றிரண்டு பேர் சட்டையை பிடித்து அடிக்கும் அளவுக்கு போவார்கள்.
" யோவ் இவ்வளவு மெதுவா போனா எப்ப வீடு போய் சேர்றது? சீக்கிரமா போய்யா" என்று ஒரு பெரிசு ஆட்டத்தை தொடக்கி வைக்கும். நம் முனுசாமிக்கு கோபம் பொத்து கொண்டு வரும் " எங்களுக்கு எல்லாம் தெரியும் நீ மூடிகினு கெட" என்று மறு மொழி வரும்.
'தோ பார்ரா பைலட்டுக்கு கோவம் வருது... " ஒரு பயணியின் கமென்ட். கடுப்பான முன்ஸ் திடீரென்று படு வேகமாக ஓட்டுவார். லேப்ட்டில் போய் ஒரு சைக்கிளை மோதுவது போல் போய் சடாரென்று ரைட்டில் ஒடித்து பீதியை கிளப்புவார். இதற்குள் தெருவிலிருந்து ஒரு பத்து பேராவது முனுசாமியை திட்டி தீர்ப்பார்கள்.... ஒன்றிரண்டு வாகன ஓட்டிகள் பஸ்ஸை ஓவர் டேக் செய்து பஸ்ஸை மறித்து முன்சை திட்டி தீர்ப்பார்கள். பஸ்ஸில் உள்ளவர்கள் குஷியாவார்கள்.
"யோவ் டிரைவர் நாங்க என்ன வீட்டுக்கு போவதா இல்ல ஆஸ்பத்திரிக்கு போவதா" என்று கடுப்பு ஏத்துவார்கள். முன்சுக்கு பிபி எகிறிவிடும். பஸ்ஸை ஓரம்கட்டிவிட்டு, காக்கி போட்ட கௌதம புத்தர்போல அமைதி காப்பார். பயணிகளில் ஒருவருக்காவது மூக்கை தாண்டி கோவம் வந்து உரத்த குரலில் கத்துவார். நம் முன்ஸ்.. கண்ணை மூடி அமைதி காப்பார். " அண்ணன் தூங்கறார் சத்தம் போடாதீங்கப்பா" என்று ஒருவர் தூண்டிவிட. மற்றொருவர் முன்சை உலுக்கி 'எழுப்புவார்' . அடுத்தவர் கை தன் மேல் பட்டவுடன் முனுஸ் கோபக்கண்ணகி போல் எழுந்து நின்று கூவுவார் . பஸ்ஸில் உள்ளவர்களை எல்லாம் பொத்தாம் பொதுவாக சரமாரியாக திட்டி தீர்ப்பார். பஸ்ஸில் குறைந்த பட்சம் ஒருவராவது 'டென்ஷன் பார்ட்டி' இருப்பார். இவர் டிரைவரை அடிக்கப்போக... "உடுப்பா"... "உடுப்பா" என்று சிலர் சமாதான கொடியாட்ட ...முன்ஸ் திட்டியபடி பஸ்ஸை எடுப்பார்.
ஐந்து ஸ்டாப் தாண்டி ஏறிய புதிய ஒருவர் சொல்வார் " டிரைவர் கொஞ்சம் வேக மாக போங்க...."
இது ஒருமுறை அல்ல பல பற்பல முறை பார்த்த நிகழ்வு.
"இந்த டிரைவருக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு ராசி" என்று நான் வியந்தது உண்டு.
பதிவுலகத்திற்கு நான் வந்து சில மாதங்களே ஆகின்றன. சாரு மீது வீசப்படும் விமரிசனங்களை பார்க்கும் போது எனக்கு டிரைவர் முனுசாமி தான் நினைவிற்கு வருகிறார். சாரு மட்டும் எதை எழுதினாலும், எந்த டீவீயில் வந்தாலும் குறைந்த பட்சம் இருபது பேர் தங்கள் பிளாக்குகளில் திட்டி ரொம்ப ஓவராக தீர்கிறார்கள். இவர்களுக்கும் சாருவிற்கும் ஏதாவது வரப்பு தகராறு இருக்குமோ என்னவோ தெரியாது. ஆனாலும் ஆளுக்கு ஆள் சாத்தும்படி இவர் என்ன செய்தார் என்று புரியவில்லை. அடிக்கடி 'தான் எழுதுவதை நிறுத்தினால் இலக்கியத்தாய் தூக்கு போட்டுக்கொள்வாள் என்ற ரீதியில் இவர் எழுதுவது ரொம்ப ஓவராக இருந்தாலும் அதற்காக இப்படியா?
"பரவயில்லபா டிரைவர இப்படி திட்டினால் அவர் எப்படி பஸ் ஓட்டுவார்? ....நீ ஓட்டி பாருய்யா எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும்" என்று முனுசாமியை 'ஏத்தி' விடுவது போல் இங்கேயும் சிலர் சாருவை ஏத்தி விடுகிறார்கள் " உங்கள் எழுத்தை படித்தால்தான்..தூக்கம் வரும்.. சாப்பாடு இறங்கும்.. உங்கள் முகத்தை பார்க்காமல் என் மூச்சு நிற்கிறது " இந்த ரீதியில் எழுதுகிறார்கள் ... . அவரும் முனுசாமி கணக்காக இடதுசாரி வலதுசாரியாக பஸ்ஸை ஓட்டி பலரிடமும் வாங்கி கட்டிகொள்கிறார்.
எனக்கு முனுசாமி பஸ்ஸில் போவதும் பிடிக்கும்... சாருவின் பிளாக்கையும் சாருவை பற்றின பிளாக்கு களும் பிடிக்கும்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

# 35 ஹைரோப்பா ....பிரமிக்க வைக்கும் பிரெஞ்ச் ஆல்ப்ஸ்

நம் ஹோட்டல்
அடுத்த நாள் ஜில்லென்ற காலை....உப்பு சப்பற்ற பிரேக் பாஸ்ட். மீண்டும் ஒரு ஏங்க வைக்கும் காலை. குளிரில் வெளியே வந்தால் கூட்டம் கூட்டமாக கால்களில் பெரீ.....ய ஷூ அணிந்த ஸ்கீ வீரர்கள். ஹோட்டலை சுற்றி பனி மூடிய பெரிய மலைகள்.. அதுவும் கைக்கு எட்டும் தூரத்தில். நம்ம டார்ஜீலிங் கேங்டாக் எல்லாம் கிட்ட கூட வர முடியாது. சூப்பர் சூழல் பிரீசிங் குளிர்.

ஆல்ப்ஸ் ஆறு சுத்தமான குளிர் நீர்
ஹோட்டல் பக்கத்தில் பனி நீர் உருகி ஓடி வரும் சிறு ஆறு. சுத்தமான அகலமான தெரு.
அழகான தெரு
சிறு நடைக்கு பிறகு ஒரு அரத பழசான ரயில்வே ஸ்டேஷன்... அழகிற்கு(?) ஒரு புராதன கரி இஞ்சின்.

ரயில்வே ஸ்டேஷன்
ஏதோ ஒரு பேர் தெரியாத ஸ்டேஷன். டிக்கட் வாங்கி பயணம் பண்ண சின்ன ரயில்.

ரயிலின் உள்- நிற்பவர் டூர் மேனேஜர்
ரயில் மிக செங்குத்தாக ஏறுகிறது. ரயிலின் இரு பக்கமும் ஐஸில் குளித்த செடிகள்... மரங்கள். உண்மையிலேயே கண்கொள்ளா குளிர் காட்சி.
                                                                     ஐசோ ஐஸ்
போகும் வழியில் ஒரு ஸ்டேஷனில் ரயில் ஐந்து நிமிஷம் நிற்கிறது. கீழே இறங்கி ஆல்ப்சை கண்ணும் குளிர பார்த்து , பின் ரயிலில் ஏற டயம் தருகிறார்கள். மேலே போனால்......வாவ்.மிகப்பெரிய நூறு புட் பால் மைதானம் சைசில் பெரிய... ஐஸ் மைதானம்.
ஐஸில் குளித்த மரங்கள்
...டீக்கடைகள். காஸ்ட்லியான சூடான காபி. நல்ல எக்ஸ்பீரியன்ஸ்.

                                                      எங்கு காணினும் ஐசடா
இந்த இடத்துக்கு 'மான்ட் வெர்ஸ்' என்று பெயர்.

                                                  ஐஸ் மைதானம்  ... ஐஸ் பாதை
இங்கே ஒரு ஐஸ் கேவ் இருக்கு உள் முழுதும் ஒரே ஐஸ்..... தரை, சுவர் மேலே எல்லா இடத்திலேயும். இங்கு வழுக்கி விழாமல் நடப்பதே பெரிய சவால்.
வெளியே வந்ததால் சூடான காப்பி.

                                                    மேலும் ஐஸ்.....ஐஸ் ஸ்டேஷன் 
பின் திரும்பி அதே ரயில். வலது பக்கம் ஐஸ் குவியலில் வைக்கபட்டாற்போல் நாங்கள் தங்கி இருந்த ஊர். கீழே இறங்கி பஸ்ஸில் சிறிது தூரத்தில் மகா மகா பிரும்மாண்டமான விஞ்ச் ஸ்டேஷன். வின்ச்சில் ஏறினாள் ஏறக்குறைய ஒருமணி நேர பயணம். மலையின் மேல் காபி ஷாப்புகள்..சாவனீர் ஷாப்புகள்.

சூடாக காப்பி....டீ...... சரக்கு  
ஐஸ் காடு... ஐஸ் மைதானம்.. ஐஸ் சிகரங்கள் ஐஸில் மிக வேகமாக ஸ்கீ செய்யும் வெள்ளை காரர்கள். ஐகுளு டூ மிடி என்று இந்த சிகரத்தை சொல்கிறார்கள். கண் நிறைந்த காட்சி களை சுமந்த படி மீண்டும் இறங்குமுகமாக வின்ச்.
                                                          ஐஸ் ஸ்டேஷன்........மற்றொன்று
ராபோஜனம் ஹோட்டலில் நமக்கு என்னமோ எதை பார்த்தாலும் அக்மார்க் மாமிசம் போல் தோண, பிஸ்கட், பழம் கூல் ட்ரின்க்...காபி.

...........இனிய குளிர்ந்த இரவு வணக்கம்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

# 34 ஹைரோப்பா ....ஜில்லுன்னு ஜெனீவா..மெஸ்மெரிக்கும் மான்ட் பிளான்க்அடுத்த நாள் காலை சில்லென்று புலர்ந்தது. தினந்தோறும் சில் சில் என்று குளிர் கடுப்பேத்தியது. வழக்க மான பிஸ்கட் காப்பி கூல் ட்ரின்க் குடித்து நெடும் பயணம் புறப்பட்டோம்.
                                                  வழியில் தென்படும் எழில் 
 நீண்ட ஆனால் சௌகர்யமான பயணம். சுத்தமான தெருக்கள். சிக்னலை மதிக்கும் வாகனங்கள். ஆனா ஒண்ணு , இந்த ஊர் ஆளுங்க , ரொம்ப மத்தாக இருக்கிறார்கள்.
ஒரு ஜெனீவா கட்டடம்
சுறு சுறுப்பு மருந்துக்கும் காணோம். இந்த மாக்கான்களா இந்தியாவை ஆள முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்? ..லாஜிக்கே இல்ல. இது எப்படி சாத்தியம் ஆனது.

                                                  U N O ஆபீஸ்
அடுத்த நாட்டுக்கு வந்தோம். சுவிஸ் லாந்து , ஜெனீவா., இங்க ஐநா சபை யின் ஆபீசை பார்த்தோம். ஒரு பிரம்மாண்டமான , ஒரு கால் உடைந்த நாற்காலி சிலையை, மரத்தால் ஆனது கட்டடத்தின் வாசலில் வைத்து இருந்தார்கள்.

                                                               உடைந்த நாற்காலி
மிக சுத்தமான தெருக்கள். ரோலர் ஸ்கீ யில் சறுக்கும் பெரிசுகள். உற்சாகமான ஊர். U N O ஆபீசின் நேர் எதிரில் இருக்கும் தெரு குழாய் மூட முடியாமல் தண்ணீர் ஒழுகி கொண்டு இருப்பது நம்மூரை நினைவு படுத்தியது.
                                                                                 மூடா குழாய்
அங்கு உள்ள ஒரு ஏரியின் நடுவில் , உலகின் மிக உயரமான Fountain இருக்கிறது 'முசி அரியானா' . கப்பன் பார்க்போல பூக்களால் ஆன கடிகாரம் ஒன்று இருக்கிறது
நாங்கள் பஸ்ஸில் காத்துக்கொண்டு இருந்த போது ஒரு காட்சி. ஒரு கார் ராங் சைடில் நிற்கிறது( நம்மூர் டிரைவர் போலும்) சர் என்று ஒரு போலிஸ் கார் வந்து நின்றது. அதி ஒரு போலிஸ் அதிகாரி ஸே அந்த ஊர் அலெக்ஸ் பாண்டியன், கோபமாக ராங் சிட் காரை பார்த்தார். சைடில் இருந்து ஒரு பெரிய கிளிப் பேட் ஒன்றை எடுத்தார் , ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்து அந்த காரின் நம்பரை 'வரைந்தார்' அந்த அளவிற்கு அவர்கள் படிப்பு அறிவு இருக்கிறது.
அக்கு ப்ரெஷர் (?) தெரு
ஒரே நேரத்தில் நாலு பைக்கு களை ஓரம் கட்டி , ஒரு லாரியிடமிருந்து மாமூலை உஷார் பண்ணி அதே நேரத்தில் அடுத்த காய்கறி வண்டியை ஓரம்கட்ட வைக்கும் நம் போலிஸ் வீரர்களின் 'கடமை' உணர்வும் சுறுசுறுப்பும் நமக்கு நினைவுக்கு வருகிறது இதனால் தான் உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் நம் போலிஸ் இருக்கிறதோ?
இங்கு இன்னும் ஒரு விஷயம், தெருக்களில் சின்ன சின்ன கல் துண்டுகள் வைத்து ரோடு போட்டு இருக்கிறார்கள் நம்மூர் போல் ஒரு லேயராக தார் ரோடுகள் இல்லை , குளிர் காரணமாக தெர்மல் contraction காரணமாக தெரு உடையாமல் இருக்க இப்படி இருக்குமோ?
அங்கிருந்து கிளம்பி மீண்டும் நெடிய பயணம். இந்த ஊரில் ஒரு விசேஷம் ... ஏகப்பட்ட டன்னல்கள் ..தன்னால் என்றால் பத்து மீட்டர் இருபது மீட்டர் நீளம் உள்ளது அல்ல . மிக நீண்..........ட டன்னல்கள். உள்ளே பளீர் என சோடியம் விளக்குகள்.....சுவர்கபுரி. இப்போது காட்சி மாறுகிறது. உயரமான மலை தொடர்கள். திடீர் என்று நாற்புறமும் மலைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. மலை என்றால் நம்ம பல்லாவரம் மலை .. சின்ன மலை போலெல்லாம் இல்லை மிக பெரிய ..மிக்க பெரிய ஐஸ் மூடிய சில் மலை

மான்ட் பிளான்க்
இந்த மலை தொடருக்கு இந்த பகுதியில் மான்ட் பிளான்க் என்று சொல்கிறார்கள், ஆல்ப்சின் இந்த பகுதிக்கு இந்த பெயர். இந்த மலையில் தான் நமது விஞ்ஞானி ஹோமிபாபா, ஜெனிவாவிற்கு வந்த போது விபத்தில் சிக்கி இறந்தார். ' நமது  விஞ்ஞானியை விழுங்கிய மலை கூலாக ஐஸ் பூசி நிற்கிறது.  

                                                                 நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் 
பிரிஜ்ஜின் பிரீசர்க்குள் வைக்க பட்ட ஊர். இந்த இடத்தின் பெயர் "ஷாமுனீ பள்ளத்தாக்கு"
நாங்கள் தங்கிய ஹோட்டலில் (ஹோட்டல் ஆல்பினா)இருந்த கடை களில் எல்லாம் பனி சறுக்கு ஸ்கீக்கள் விற்பனைக்கும் வாடகைக்கும் வைத்து இருக்கிறார்கள்.
                                                     ஹோட்டலை ஒட்டி ஓடும் பனி உருகிய ஆறு
குறுகிய சுத்தமான தெருக்கள். கார் நுழைய முடியாத தெருக்கள். கடைகள் .. கடைகள். இரவு நேரத்திலும் விளக்குகள் எரிய.. இந்த ஐஸ் குளிரிலும் ஒரு சேட் ஹோட்டல் வைத்து இருக்கான். சப்பாத்தி... தயிர் சாதம்.
குட் நைட்