ஞாயிறு, 21 நவம்பர், 2010

# 38 காட்சி படைத்தன கண்கள் எனில்........

தடங்கலுக்கு வருந்துகிறேன்.  கொஞ்சநாளாக பக்கத்து ரூமில் ஆணி பிடுங்க சொன்னதால் வலை பக்கமே வர முடியவில்லை. ...ஸாரி. போன பதவில் வந்ததில் சில ரெபெடிஷன் இருக்கலாம் ஆனால் போட்டோக்கள் புதியவை.


                                          பனி படர்ந்த மற்றொரு மலை
அடுத்தநாள் காலை குளிரில் எழுந்து நடுங்கியபடி காபி, பிஸ்கேட்டுடன் பிரேக்  பாஸ் ட்டை  முடித்து கிளம்பினோம். சூடான இட்லி சாம்பாருக்கு நாக்கு ஏங்கினது மறுக்கத்தேவை இல்லாத விஷயம். உப்பு சப்பில்லாத குளிர் வாழ்க்கை , ஒரு ஸ்டேஜிக்கு மேல் வெறுக்க வைத்தது.
                                           ரயிலடி
பஸ்ஸில் நம்முடன் கூட மத்தியான லஞ்சும் பயணப்பட்டது. வெளியில் டெம்பரேச்சர் ஜீரோவிற்கு கீழ் மூன்று. ஜீபீஎஸ் உதவியுடன் டிரைவர் சுகமாக பஸ்ஸை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த ஊர் மக்களை பார்த்தால் எனக்கு வரும் ஒரு சந்தேகம், இந்த மாக்கான்கள் எப்படி நம்மூர் வரை வந்து அங்க ஆட்சிவேற பண்ணினானுங்க?

                                           பனிப்பாதை
ஒரு கிலோமீட்டருக்கு ஒரு வீடு. தேடி தேடி பாத்தால்கூட மக்கள் கண்ணில படல.    ஏன் ஐய்யா ஊர் க்ளீனா இருக்காது? குப்பை போட கூட ஆள் வேணாமா?.

                                           மற்றொரு ரயிலடி
மறுபடியும் மகா பெரிய்ய புல் தரைகள். கண்ணுக்கு எட்டியவரை பச்சை பசேல். வழியோர பெட்ரோல் பங்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து கையில் கொண்டு வந்து இருந்த சாப்பாடு போஜனம். சாப்பிட விடாமல் பயங்கர காத்து; குளிர். நம்மூரில் இது போல காத்தை பாத்தாற்போல் நினைவே இல்லை. ஒருக்கால் புயல் அடிக்கும் போது இருக்குமோ என்னவோ.

                                         ரயில்வே கேண்டீனில் "சரக்கு"
சாயந்திரம்போல GSTAD என்னும் ஊறிலுள்ள ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.
                                         ஹோட்டலில் இந்திய சினிமா போஸ்டர்கள்
வாவ் பின்னணியில் பிரும்மாண்டமான பனி போர்த்திய மலைகள். லேசான பனி பொழிவு. கண்ண தாசன் சொன்னாற்போல் " காட்சி படைத்தன கண்கள் எனில் அவை காண விரும்பும் இடம்...."
                                          மேலும் சில போஸ்டர்கள்
அடுத்தநாள் கலையில் எழுந்து ஒரு பெரிய ரயிலில் மலை ஏற்றம். பாதி தூரம் இந்தரயில் போகிறது, மீதி தூரத்திற்கு இன்னும் ஒரு ரயில் . சுத்தமாக இரண்டு மணி நேர பயணம் பல் சக்கரம் வைத்த ரயில்கள். மலை மேல் போனால் ஒரு பெரிய மால் போல பில்டிங்.

                                            மேலும் சில போஸ்டர்கள்
அங்கே ஒரு ஹோட்டல் "பாலிவுட் ரெஸ்டாரென்ட்". நம்மூர் சப்பாத்தி, புலாவ். நான் வெஜ் சமைப்பதால் நமக்கு, வெறும் சாலடுடன் தயிர் தான் லஞ்சு.

                                         பனி குகை
 ஆனால் கண்ணிற்கு விருந்து. அந்த ஹோட்ட முழுவதும் ஏகப்பட்ட நம்மூர் சினிமா போஸ்டர்கள் பிரேம் போட்டு மாட்டி இருக்கிறார்கள். அதில் தமிழ் போஸ்டர்களை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

                                          பனி சுவர்
 இங்குதான் ஐஸ் பேலஸ் என்னும் குகை இருக்கிறது. வழுக் வழுக்கென்னும் தரை, சுவரே ஐஸில் கட்டி இருக்கிறது, ஒரே கூல் கூல் ஜில் ஜில்


உள்ளே ஐசில் சிற்பங்கள் செய்து வைத்து இருக்கிறார்கள், டான்ஸ் ஆடும் டால்பின், பனிக்கரடி இத்யாதி.
                                          டால்பின்
இதை விட்டு வெளியில் வந்ததால் போதும் என்று ஆனது.

                                         ஜில்லென்ற சிலைகள் 
பில்டிங்கில் வந்ததால் சூடாக காபி. சற்று இளைப்பாறளுக்கு பிறகு மீண்டும் ஐஸில் நடந்தோம். இரண்டு மலை சிகரங்களை சகோதரிகள் என்று சொல்கிறார்கள்.

                                          மேலும் மேலும் ஐஸ்...
 நன்றாக பொழுதை போக்கிய பின் திரும்பியும் ரயில்களில் பயணம். அன்று மாலை ஒரு நீட்ன்ட ரோப் காரில் இன்னொரு மலை ஏற்றம்.

மலை மேல் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் குடி பார்டி, டின்னர்.

 " மிதந்த"படி நண்பர்கள் மலை இறங்கினார்கள் "குளிர்ல போத நிக்க மாட்டேன்குதுபா'.

 இரவு ஒன்பது மணிக்கு குளிரில் அந்த உயரமான கேபிள் காரில் தரை நோக்கி பயணம். பஸ் பிடித்து பதினோரு மணிக்கு ஹோட்டலில் வந்து.......அப்பாடா.


இன்னும் போவோம்.Reply Forward

New window

Print all

Expand all

Collapse all

Forward all

Sponsored Links

Doing Business in Italy

Corporate and personal taxation. All kinds of companies.

www.vasapolli.it

Tax Incentives in Ohio

New Bremen, Ohio - A great place for your business. Learn more here!

www.newbremen.com

Daily Stock Advice by SMS

7 Top Investors+ 13 Broking Houses Offer Starts @ 450/mth. Hurry!

MoneyControl.com/PowerYourTrade

Stocks Ready To Explode

#1 U.S Penny Stock Newsletter 1000% Gains, Join Now Free

WhisperfromWallStreet.com

Stocks Ready To Soar

Hot News Alert, Huge Profits 1000%+ Stock Near Explosive Breakout Point

www.otcstockexchange.com

About these links« Back to Inbox Archive Report spam Delete Move to

Labels

More actions

‹ Newer 129 of 500 Older ›Search your mail quicker than ever. Download the Google Toolbar, now with Gmail search. Learn more

You are currently using 235 MB (3%) of your 7521 MB.

Last account activity: Nov 7 at IP 59.92.93.58. Details

Gmail view: standard
turn off chat
turn off buzz
older contact manager
basic HTML Learn more

©2010 Google - Terms - Privacy Policy - Buzz Privacy Policy - Google HomeLet people know what you're up to, or share links to photos, videos, and web pages.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

#37 ஹைரோப்பா....சுவர்க்கமா.... இல்ல சுவிஸ்ஸா

                                                   நாங்கள் தங்கிய ஹோட்டல்
அடுத்த நாள் வழக்கமான பிரேக்பாஸ்ட் முடித்து கிளம்பினோம் . இப்ப சரியான நாடோடி வாழ்கை... தினம் ஒவ்வொரு ஊர் .. ஸாரி...நாடு.தினமும் செக்கின் செக்கவுட்டு..புது புது ரூம்.. தூக்கம் போயே போச்.

பஸ்ஸின் தெர்மா மீட்டர் இரண்டு டிகிரிய காட்டு கிறது. படுவேகமாக பயணம்.இந்த ஊர்களில் பஸ் மற்றும் கார் பயணிகள் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இடங்களை செய்து வைத்து இருக்கிறார்கள். சிலசமயம் பெட்ரோல் பங்க்கை ஒட்டினாற்போல் ...சில சமயம் ஹோட்டல் அருகில்...நிறுத்தின இடத்தில் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு ..லன்ச்சை முடித்ததாக பேர் பண்ணி மீண்டும் பயணம் தொடர்ந்தோம். ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பசும் புல் தரைகள் மட்டுமல்ல.. ஏகப்பட்ட மிக நீண்ட டன்னல்கள்...இந்த டன்னல்களில் கரண்ட் இல்லாமல் கார் ஒட்டவே முடியாது என்று தோன்றுகிறது. இந்த ஊர் டிரைவர்களை போலிஸ் க்ளோசாக கண் காணிக்கிறது. ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு கார்ட் கொடுத்து இருக்கிறார்கள். இந்த கார்டை காலையில் பஸ்ஸை எடுக்கும் போது இந்த கார்டை ஒரு ரீடரில் என்கேஜ் ஏய்த்து வைக்கிறார்கள். பஸ்ஸின் மூவ்மேண்டுகள் லாக் ஆகின்றன. போலிஸ் இந்த ரீடர்களை வைத்து டிரைவரின் ஓட்டும் ஸ்டைலை கணக்கு பண்ணுகிறார்கள். எட்டு மணி நேரத்துக்கு மேல் ஓட்டினால் செம்மை பைன் போடுகிறார்கள். நம்மூரில் இன்னும் இது மாதிரி எல்லாம் ரெஸ்ட்ரிக்ஷன் வரலை வந்ததால், நம் போலீஸ்களின் காட்டில் மாமூல் மழை தினமும் பொழியும்.

                                                    பலகை மாளிகை
சாயந்திரம் Gstaad என்னும் இடத்தில் உள்ள ஹோட்டலுக்கு போய் சேர்ந்தோம். பனி மலைகளின் மிக....மிக்க....அருகில் உள்ளது. அடுத்த நாள் ஆல்ப்ஸ் காலையில் ஜில்லென்று கூப்பிட்டது. வெளியில் மைனஸ் இரண்டு டேம்ப்ரச்சர்.
                                                   போற வழியில் புல் மலைகள்
அழகான சுவிஸ் சாலைகளின் வழியே அடுத்த மலையை தேடி பயணம். அந்த ஊரில் வீடுகள் எல்லாம் மரத்தால் கட்டப்பட்டு உள்ளன ஆனாலும் அழகாக, பூ செடிகள் சூழ அழகாக கட்டப்பட்டு உள்ளன. நம்மூர் டீ கடை பெஞ்சுகள் போல் வீடு களின் வெளியே, ஆனால் பெரிய பெரிய கட்டைகளை வைத்து போட்டு இருக்கிறார்கள். தொட்டிகளில் பூக்கள் ஊரே அழகு, குளிர். அடுத்த மலை ஏற பயணம்.
                                                       மலை ரயில்
ரயில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் வந்து பஸ்ஸை விட்டு இறங்கினோம். மேலே பார்த்தால், அடப்பாவிகளா. மரத்தை வெட்டி ஒரு மலையில் இருந்து பக்கத்து மலைக்கு தூக்கிக்கொண்டு போக ஹெலிகாப்டரில் தொங்க விட்டு எடுத்து போகிறார்கள். ஹெலி காப்டரில் இருந்து ஒரு கயிறு தொங்கு கிறது. தரையில் உள்ள மக்கள் , அந்த கயிறில் வெட்டின மரத்தை சட்டென்று மாட்டுகிறார்கள். ஹெலிகாப்டர் மரத்தை தூக்கியபடி அடுத்த மலைக்கு பறக்கிறது. அங்கு ஆகாயத்தில் நிற்கிறது . அந்த மலை மக்கள் சட்டென்று மரத்தை கழட்டி அடுக்கு கிறார்கள். மீண்டும் ஹெலி முதல் மலைக்கு பறக்கிறது , அடுத்த ட்ரிப் அடிக்க. காஸ்ட்லி ட்ரான்ஸ்போர்டேஷன்டா சாமி..

                                                        ஐஸ் மூடிய மலை
அடுத்தது ரயிலடி. நம்மூர் ஸ்டேஷன் மாதிரி தான் இருக்கிறது.. சின்ன சின்ன ரயில்கள். முதல் ரயில் மலைமேல் பாதி தூரம் அழைத்து போகிறது. ரயிலில் பாதிபேர் மலையில் ஸ்கீ பண்ண போகிற தடிப்பசங்கள். ரெண்டு பக்கமும் ஐஸ் ஐஸ் ஐஸ் இரண்டு நாட்களாக பார்த்து சலித்த அதே காட்சிகள்.
                                                      ஐஸ் ஐஸ் எங்கும் ஐஸ்
உலா தொடரும்

புதன், 18 ஆகஸ்ட், 2010

# 36 சாருவும் பஸ் டிரைவரும்

ரொம்ப வருஷம் முன் நான் கொஞ்ச காலம் நாகபட்டினத்தில் ஆணி புடிங்கி கொண்டு இருந்த போது வாராவாரம் திருவள்ளுவர் பஸ்ஸில் சென்னை வந்து போகவேண்டி இருந்தது. இந்த பஸ் ஒன்றில் தான் நம் கதாநாயகர் டிரைவராக இருந்தார் அவர் பெயர் ஸே...முனுசாமி என்ற கொள்வோம். இந்த முனுசாமி தன்னை வெகு உன்னதமான டிரைவர் என்று நினைத்துக்கொண்டு பஸ் ஓட்டுவார். அது என்னவோ நாகபட்டினம் போய் சேர்வதற்குள் குறைந்தது ஒரு இருவதுபேராவது நிச்சயமாக முனுசாமியுடன் சண்டை போடுவார்கள். அதில் ஒன்றிரண்டு பேர் சட்டையை பிடித்து அடிக்கும் அளவுக்கு போவார்கள்.
" யோவ் இவ்வளவு மெதுவா போனா எப்ப வீடு போய் சேர்றது? சீக்கிரமா போய்யா" என்று ஒரு பெரிசு ஆட்டத்தை தொடக்கி வைக்கும். நம் முனுசாமிக்கு கோபம் பொத்து கொண்டு வரும் " எங்களுக்கு எல்லாம் தெரியும் நீ மூடிகினு கெட" என்று மறு மொழி வரும்.
'தோ பார்ரா பைலட்டுக்கு கோவம் வருது... " ஒரு பயணியின் கமென்ட். கடுப்பான முன்ஸ் திடீரென்று படு வேகமாக ஓட்டுவார். லேப்ட்டில் போய் ஒரு சைக்கிளை மோதுவது போல் போய் சடாரென்று ரைட்டில் ஒடித்து பீதியை கிளப்புவார். இதற்குள் தெருவிலிருந்து ஒரு பத்து பேராவது முனுசாமியை திட்டி தீர்ப்பார்கள்.... ஒன்றிரண்டு வாகன ஓட்டிகள் பஸ்ஸை ஓவர் டேக் செய்து பஸ்ஸை மறித்து முன்சை திட்டி தீர்ப்பார்கள். பஸ்ஸில் உள்ளவர்கள் குஷியாவார்கள்.
"யோவ் டிரைவர் நாங்க என்ன வீட்டுக்கு போவதா இல்ல ஆஸ்பத்திரிக்கு போவதா" என்று கடுப்பு ஏத்துவார்கள். முன்சுக்கு பிபி எகிறிவிடும். பஸ்ஸை ஓரம்கட்டிவிட்டு, காக்கி போட்ட கௌதம புத்தர்போல அமைதி காப்பார். பயணிகளில் ஒருவருக்காவது மூக்கை தாண்டி கோவம் வந்து உரத்த குரலில் கத்துவார். நம் முன்ஸ்.. கண்ணை மூடி அமைதி காப்பார். " அண்ணன் தூங்கறார் சத்தம் போடாதீங்கப்பா" என்று ஒருவர் தூண்டிவிட. மற்றொருவர் முன்சை உலுக்கி 'எழுப்புவார்' . அடுத்தவர் கை தன் மேல் பட்டவுடன் முனுஸ் கோபக்கண்ணகி போல் எழுந்து நின்று கூவுவார் . பஸ்ஸில் உள்ளவர்களை எல்லாம் பொத்தாம் பொதுவாக சரமாரியாக திட்டி தீர்ப்பார். பஸ்ஸில் குறைந்த பட்சம் ஒருவராவது 'டென்ஷன் பார்ட்டி' இருப்பார். இவர் டிரைவரை அடிக்கப்போக... "உடுப்பா"... "உடுப்பா" என்று சிலர் சமாதான கொடியாட்ட ...முன்ஸ் திட்டியபடி பஸ்ஸை எடுப்பார்.
ஐந்து ஸ்டாப் தாண்டி ஏறிய புதிய ஒருவர் சொல்வார் " டிரைவர் கொஞ்சம் வேக மாக போங்க...."
இது ஒருமுறை அல்ல பல பற்பல முறை பார்த்த நிகழ்வு.
"இந்த டிரைவருக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு ராசி" என்று நான் வியந்தது உண்டு.
பதிவுலகத்திற்கு நான் வந்து சில மாதங்களே ஆகின்றன. சாரு மீது வீசப்படும் விமரிசனங்களை பார்க்கும் போது எனக்கு டிரைவர் முனுசாமி தான் நினைவிற்கு வருகிறார். சாரு மட்டும் எதை எழுதினாலும், எந்த டீவீயில் வந்தாலும் குறைந்த பட்சம் இருபது பேர் தங்கள் பிளாக்குகளில் திட்டி ரொம்ப ஓவராக தீர்கிறார்கள். இவர்களுக்கும் சாருவிற்கும் ஏதாவது வரப்பு தகராறு இருக்குமோ என்னவோ தெரியாது. ஆனாலும் ஆளுக்கு ஆள் சாத்தும்படி இவர் என்ன செய்தார் என்று புரியவில்லை. அடிக்கடி 'தான் எழுதுவதை நிறுத்தினால் இலக்கியத்தாய் தூக்கு போட்டுக்கொள்வாள் என்ற ரீதியில் இவர் எழுதுவது ரொம்ப ஓவராக இருந்தாலும் அதற்காக இப்படியா?
"பரவயில்லபா டிரைவர இப்படி திட்டினால் அவர் எப்படி பஸ் ஓட்டுவார்? ....நீ ஓட்டி பாருய்யா எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும்" என்று முனுசாமியை 'ஏத்தி' விடுவது போல் இங்கேயும் சிலர் சாருவை ஏத்தி விடுகிறார்கள் " உங்கள் எழுத்தை படித்தால்தான்..தூக்கம் வரும்.. சாப்பாடு இறங்கும்.. உங்கள் முகத்தை பார்க்காமல் என் மூச்சு நிற்கிறது " இந்த ரீதியில் எழுதுகிறார்கள் ... . அவரும் முனுசாமி கணக்காக இடதுசாரி வலதுசாரியாக பஸ்ஸை ஓட்டி பலரிடமும் வாங்கி கட்டிகொள்கிறார்.
எனக்கு முனுசாமி பஸ்ஸில் போவதும் பிடிக்கும்... சாருவின் பிளாக்கையும் சாருவை பற்றின பிளாக்கு களும் பிடிக்கும்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

# 35 ஹைரோப்பா ....பிரமிக்க வைக்கும் பிரெஞ்ச் ஆல்ப்ஸ்

நம் ஹோட்டல்
அடுத்த நாள் ஜில்லென்ற காலை....உப்பு சப்பற்ற பிரேக் பாஸ்ட். மீண்டும் ஒரு ஏங்க வைக்கும் காலை. குளிரில் வெளியே வந்தால் கூட்டம் கூட்டமாக கால்களில் பெரீ.....ய ஷூ அணிந்த ஸ்கீ வீரர்கள். ஹோட்டலை சுற்றி பனி மூடிய பெரிய மலைகள்.. அதுவும் கைக்கு எட்டும் தூரத்தில். நம்ம டார்ஜீலிங் கேங்டாக் எல்லாம் கிட்ட கூட வர முடியாது. சூப்பர் சூழல் பிரீசிங் குளிர்.

ஆல்ப்ஸ் ஆறு சுத்தமான குளிர் நீர்
ஹோட்டல் பக்கத்தில் பனி நீர் உருகி ஓடி வரும் சிறு ஆறு. சுத்தமான அகலமான தெரு.
அழகான தெரு
சிறு நடைக்கு பிறகு ஒரு அரத பழசான ரயில்வே ஸ்டேஷன்... அழகிற்கு(?) ஒரு புராதன கரி இஞ்சின்.

ரயில்வே ஸ்டேஷன்
ஏதோ ஒரு பேர் தெரியாத ஸ்டேஷன். டிக்கட் வாங்கி பயணம் பண்ண சின்ன ரயில்.

ரயிலின் உள்- நிற்பவர் டூர் மேனேஜர்
ரயில் மிக செங்குத்தாக ஏறுகிறது. ரயிலின் இரு பக்கமும் ஐஸில் குளித்த செடிகள்... மரங்கள். உண்மையிலேயே கண்கொள்ளா குளிர் காட்சி.
                                                                     ஐசோ ஐஸ்
போகும் வழியில் ஒரு ஸ்டேஷனில் ரயில் ஐந்து நிமிஷம் நிற்கிறது. கீழே இறங்கி ஆல்ப்சை கண்ணும் குளிர பார்த்து , பின் ரயிலில் ஏற டயம் தருகிறார்கள். மேலே போனால்......வாவ்.மிகப்பெரிய நூறு புட் பால் மைதானம் சைசில் பெரிய... ஐஸ் மைதானம்.
ஐஸில் குளித்த மரங்கள்
...டீக்கடைகள். காஸ்ட்லியான சூடான காபி. நல்ல எக்ஸ்பீரியன்ஸ்.

                                                      எங்கு காணினும் ஐசடா
இந்த இடத்துக்கு 'மான்ட் வெர்ஸ்' என்று பெயர்.

                                                  ஐஸ் மைதானம்  ... ஐஸ் பாதை
இங்கே ஒரு ஐஸ் கேவ் இருக்கு உள் முழுதும் ஒரே ஐஸ்..... தரை, சுவர் மேலே எல்லா இடத்திலேயும். இங்கு வழுக்கி விழாமல் நடப்பதே பெரிய சவால்.
வெளியே வந்ததால் சூடான காப்பி.

                                                    மேலும் ஐஸ்.....ஐஸ் ஸ்டேஷன் 
பின் திரும்பி அதே ரயில். வலது பக்கம் ஐஸ் குவியலில் வைக்கபட்டாற்போல் நாங்கள் தங்கி இருந்த ஊர். கீழே இறங்கி பஸ்ஸில் சிறிது தூரத்தில் மகா மகா பிரும்மாண்டமான விஞ்ச் ஸ்டேஷன். வின்ச்சில் ஏறினாள் ஏறக்குறைய ஒருமணி நேர பயணம். மலையின் மேல் காபி ஷாப்புகள்..சாவனீர் ஷாப்புகள்.

சூடாக காப்பி....டீ...... சரக்கு  
ஐஸ் காடு... ஐஸ் மைதானம்.. ஐஸ் சிகரங்கள் ஐஸில் மிக வேகமாக ஸ்கீ செய்யும் வெள்ளை காரர்கள். ஐகுளு டூ மிடி என்று இந்த சிகரத்தை சொல்கிறார்கள். கண் நிறைந்த காட்சி களை சுமந்த படி மீண்டும் இறங்குமுகமாக வின்ச்.
                                                          ஐஸ் ஸ்டேஷன்........மற்றொன்று
ராபோஜனம் ஹோட்டலில் நமக்கு என்னமோ எதை பார்த்தாலும் அக்மார்க் மாமிசம் போல் தோண, பிஸ்கட், பழம் கூல் ட்ரின்க்...காபி.

...........இனிய குளிர்ந்த இரவு வணக்கம்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

# 34 ஹைரோப்பா ....ஜில்லுன்னு ஜெனீவா..மெஸ்மெரிக்கும் மான்ட் பிளான்க்அடுத்த நாள் காலை சில்லென்று புலர்ந்தது. தினந்தோறும் சில் சில் என்று குளிர் கடுப்பேத்தியது. வழக்க மான பிஸ்கட் காப்பி கூல் ட்ரின்க் குடித்து நெடும் பயணம் புறப்பட்டோம்.
                                                  வழியில் தென்படும் எழில் 
 நீண்ட ஆனால் சௌகர்யமான பயணம். சுத்தமான தெருக்கள். சிக்னலை மதிக்கும் வாகனங்கள். ஆனா ஒண்ணு , இந்த ஊர் ஆளுங்க , ரொம்ப மத்தாக இருக்கிறார்கள்.
ஒரு ஜெனீவா கட்டடம்
சுறு சுறுப்பு மருந்துக்கும் காணோம். இந்த மாக்கான்களா இந்தியாவை ஆள முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்? ..லாஜிக்கே இல்ல. இது எப்படி சாத்தியம் ஆனது.

                                                  U N O ஆபீஸ்
அடுத்த நாட்டுக்கு வந்தோம். சுவிஸ் லாந்து , ஜெனீவா., இங்க ஐநா சபை யின் ஆபீசை பார்த்தோம். ஒரு பிரம்மாண்டமான , ஒரு கால் உடைந்த நாற்காலி சிலையை, மரத்தால் ஆனது கட்டடத்தின் வாசலில் வைத்து இருந்தார்கள்.

                                                               உடைந்த நாற்காலி
மிக சுத்தமான தெருக்கள். ரோலர் ஸ்கீ யில் சறுக்கும் பெரிசுகள். உற்சாகமான ஊர். U N O ஆபீசின் நேர் எதிரில் இருக்கும் தெரு குழாய் மூட முடியாமல் தண்ணீர் ஒழுகி கொண்டு இருப்பது நம்மூரை நினைவு படுத்தியது.
                                                                                 மூடா குழாய்
அங்கு உள்ள ஒரு ஏரியின் நடுவில் , உலகின் மிக உயரமான Fountain இருக்கிறது 'முசி அரியானா' . கப்பன் பார்க்போல பூக்களால் ஆன கடிகாரம் ஒன்று இருக்கிறது
நாங்கள் பஸ்ஸில் காத்துக்கொண்டு இருந்த போது ஒரு காட்சி. ஒரு கார் ராங் சைடில் நிற்கிறது( நம்மூர் டிரைவர் போலும்) சர் என்று ஒரு போலிஸ் கார் வந்து நின்றது. அதி ஒரு போலிஸ் அதிகாரி ஸே அந்த ஊர் அலெக்ஸ் பாண்டியன், கோபமாக ராங் சிட் காரை பார்த்தார். சைடில் இருந்து ஒரு பெரிய கிளிப் பேட் ஒன்றை எடுத்தார் , ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்து அந்த காரின் நம்பரை 'வரைந்தார்' அந்த அளவிற்கு அவர்கள் படிப்பு அறிவு இருக்கிறது.
அக்கு ப்ரெஷர் (?) தெரு
ஒரே நேரத்தில் நாலு பைக்கு களை ஓரம் கட்டி , ஒரு லாரியிடமிருந்து மாமூலை உஷார் பண்ணி அதே நேரத்தில் அடுத்த காய்கறி வண்டியை ஓரம்கட்ட வைக்கும் நம் போலிஸ் வீரர்களின் 'கடமை' உணர்வும் சுறுசுறுப்பும் நமக்கு நினைவுக்கு வருகிறது இதனால் தான் உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் நம் போலிஸ் இருக்கிறதோ?
இங்கு இன்னும் ஒரு விஷயம், தெருக்களில் சின்ன சின்ன கல் துண்டுகள் வைத்து ரோடு போட்டு இருக்கிறார்கள் நம்மூர் போல் ஒரு லேயராக தார் ரோடுகள் இல்லை , குளிர் காரணமாக தெர்மல் contraction காரணமாக தெரு உடையாமல் இருக்க இப்படி இருக்குமோ?
அங்கிருந்து கிளம்பி மீண்டும் நெடிய பயணம். இந்த ஊரில் ஒரு விசேஷம் ... ஏகப்பட்ட டன்னல்கள் ..தன்னால் என்றால் பத்து மீட்டர் இருபது மீட்டர் நீளம் உள்ளது அல்ல . மிக நீண்..........ட டன்னல்கள். உள்ளே பளீர் என சோடியம் விளக்குகள்.....சுவர்கபுரி. இப்போது காட்சி மாறுகிறது. உயரமான மலை தொடர்கள். திடீர் என்று நாற்புறமும் மலைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. மலை என்றால் நம்ம பல்லாவரம் மலை .. சின்ன மலை போலெல்லாம் இல்லை மிக பெரிய ..மிக்க பெரிய ஐஸ் மூடிய சில் மலை

மான்ட் பிளான்க்
இந்த மலை தொடருக்கு இந்த பகுதியில் மான்ட் பிளான்க் என்று சொல்கிறார்கள், ஆல்ப்சின் இந்த பகுதிக்கு இந்த பெயர். இந்த மலையில் தான் நமது விஞ்ஞானி ஹோமிபாபா, ஜெனிவாவிற்கு வந்த போது விபத்தில் சிக்கி இறந்தார். ' நமது  விஞ்ஞானியை விழுங்கிய மலை கூலாக ஐஸ் பூசி நிற்கிறது.  

                                                                 நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் 
பிரிஜ்ஜின் பிரீசர்க்குள் வைக்க பட்ட ஊர். இந்த இடத்தின் பெயர் "ஷாமுனீ பள்ளத்தாக்கு"
நாங்கள் தங்கிய ஹோட்டலில் (ஹோட்டல் ஆல்பினா)இருந்த கடை களில் எல்லாம் பனி சறுக்கு ஸ்கீக்கள் விற்பனைக்கும் வாடகைக்கும் வைத்து இருக்கிறார்கள்.
                                                     ஹோட்டலை ஒட்டி ஓடும் பனி உருகிய ஆறு
குறுகிய சுத்தமான தெருக்கள். கார் நுழைய முடியாத தெருக்கள். கடைகள் .. கடைகள். இரவு நேரத்திலும் விளக்குகள் எரிய.. இந்த ஐஸ் குளிரிலும் ஒரு சேட் ஹோட்டல் வைத்து இருக்கான். சப்பாத்தி... தயிர் சாதம்.
குட் நைட்

புதன், 21 ஜூலை, 2010

# 33 புன்னகை புரிய வைக்கும் விளம்பரம்

ஒரு நடு வயது பெண்ணும் அவளது கஞ்சமான புருஷனும். இந்த விளம்பரத்தை  நீங்கள் டிவி சேனல்களில் பார்த்து இருப்பீர்கள். பிளாஷ் பேக்கில் அந்த பெண் இவரிடம் வீடு வாங்க வேண்டும் என்பாள். இவர் பணம் இல்லை என்பார். பிறகு வீடு வாங்கவேண்டும் என்பாள் , இவர் பணம் இல்லை என்பார். அவர்கள் Tamil Matrimony  ஆபீசுக்குள்  போவார்கள். அவர்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். இதில் punch ஏ இப்போது தான் இருக்கிறது. அந்த பெண் freeze ஆகி நிற்பாள் , மனதுக்குள் "இவங்க இருவத்தஞ்சு வருஷம் முன்னே இருந்தாங்கன்னா என் வாழ்க்கை விளங்கி இருக்கும் இல்ல"  . " என்ன" வென்று புருஷன் கேட்க " ஒண்ணுமில்ல" .
நடிப்பவர்களின் யதார்த்தமும், அவர்கள் பேசும் வட்டார " இழுப்பும்" சூப்பர். நரசிம்ம ராவையும் சிரிக்க வைக்கும் Ad

திங்கள், 19 ஜூலை, 2010

# 32 ஹைரோப்பா ...பார் பார் பாரீஸ் பார்...விளக்கணையா ஊர்


மியூசியத்தின் inverted pyramid
அடுத்த நாள் காலை மீண்டும் சில்லென்று விடிந்தது. வீட்டிற்கு போன் செய்து இரண்டு நாள் ஆனது நினைவிற்கு வந்தது. ரிசப்ஷன் காரியிடம் ஹோட்டலில் இருந்து போன் செய்ய முடியுமா என்ற போது , நம்ம முக விலாசத்தை பார்த்து, இங்க ரொம்ப காஸ்ட்லி என்று சொன்னாள்.
                                                                                      பாரிசின் வீதி
ரொம்ப வருஷம் முன் எங்க அப்பாவுடன் ரெங்கநாதன் தெருவில் காய் கறி வாங்க போனது நினைவிற்கு வந்தது. ஒரு பழைய சாக்கில் காய் கறி களை குமித்து வைத்து காய்கறி காரம்மா . முன்னாள் உட்கார்ந்து இருப்பாள். எங்க அப்பா 'கடைய' செலெக்ட் பண்ணி எதிரில் உட்கார்ந்து கொள்வார். தொண்டையை கனைத்து கொண்டு "கத்தாரி எப்படிம்மா?" என்று டீலை ஆரம்பிப்பார். கடைக்காரி கிஞ்சித்தும் இந்த பிசினசை லட்சியம் செய்யாமல் " நீ எல்லாம் வாங்க மாட்ட ஐயிரே" என்று டிஸ்மிஸ் செய்வாள்.
லூவர் மியூசியத்தின் Painting
அதே பாவனையை அரை நூற்றாண்டு கழித்து , பிரான்ஸ் ஹோட்டல் காரி அதே பாவனையில் சொன்னாள். என்ன கத்தரிக்கு பதில் டெலிபோன் கால். விஷயம் என்னவோ ஒன்றுதான், "உன் மூஞ்சை பாத்தால் பணம் கொடுக்கறவன் போல் தெரியல" .
நாமறிந்த மோனலிசா
 பரம்பரை இன்சல்ட் ஆச்சே விட்டு கொடுக்க மனம் வருமா? " பணம் கூட ஆனாலும் பரவாயில்லை போன் பண்ண வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து ஒரு நிமிஷம் போனுக்கு ஏறக்குறைய அறுநூறு ரூபாய் தண்டம் அழுதேன்.
மற்றொரு படம்
பிரேக் பாஸ்ட் வழக்கம் போல் பிஸ்கட் காப்பி, பாவிகள் தண்ணீர் மட்டும் தரவில்லை. ஜூஸ் குடித்து சமாளித்தேன்.
இன்னொரு ஓவியம்
அதே பஸ் அதே ஸீட். இப்போது பகலில் ஈபிள் டவர் தரிசனம். இந்த பிரும்மாண்டமான இரும்பு அமைப்பை கொஞ்சம் வருஷம் முன்பு இடித்து தரை மட்டம் ஆக்க பார்த்தார்களாம். நல்ல வேளை தப்பித்தது, உலக அதிசயம் என்று பெயரும் எடுத்தது.
அழகிய கிரேக்க சிலை
டவரின் இரண்டாம் கட்டம் வரை லிப்டில் போகலாம் , போனோம். அங்கே ரெஸ்டாரன்ட், போட்டோ கடைகள். போட்டோ எடுத்து கொண்டேன். கீழே வந்தோம். டவரின் கீழே ஏகப்பட்ட வியாபாரிகள் சிறு சிறு வாரிசு பொருட்கள் விற்று கொண்டு இருந்தார்கள்.
அழகிய தலை.........ஸாரி சிலை
 நம்மை " பாம்பே" " டில்லி" என்று கூப்பிடுகிறார்கள் . போலீசை கண்டவுடன் பிசினசை சடுதியில் நிறுத்திக்கொண்டு எஸ் ஆகிறார்கள். ஒரு விஷயம் உறுத்தியது. இவர்கள் அனைவரும் கறுப்பர்கள். டவரை விட்டு விலகி வந்தோம்.
                                                                   பாரிசின் அழகிய தோற்றம்
சிறிது நேர பயணத்திற்கு பின் ஒரு உயரமான பில்டிங்கிற்கு வந்தோம் வெகு விரைவான லிப்ட். 58 வது மாடிக்கு 58 நொடியில் போகிறது. இதன் மேலும் ரெஸ்டாரன்ட் கசப்பு காப்பி கொள்ளை விலையில் குடித்தேன் , போட்டோ கடைகள் போட்டோ எடுத்து கொண்டோம். தொலைவில் ஈபிள் டவரின் பின்னணியில் அழகிய பாரீஸ்.
பாரீஸ் அழகாக இல்லை?
சூப்பரான காட்சி. கீழே வந்து பஸ்ஸில் ஏறி நடு ஊருக்கு வந்து இந்தியன் ரெஸ்டாரண்டில் தயிர் சாதம் , பச்ச மொளகா .....ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா நல்ல லஞ்ச். இங்கே ஒரு wax musium இருக்கிறது. லண்டனில் போல் அவ்வளவு கூட்டம் இல்லை. இதில் ஷாரூக்கான் சிலை மிக பிரசித்தமாம். நான் உள்ளே போகவில்லை வீட்டுக்கு போன் செய்ய வேண்டும். அங்கிருந்து ஒரு சென்ட் விற்கும் கடைக்கு போனோம்.
சென்ட் கடை
 நிஜமாவே ஆணை விலை குதிரை விலைதான். நம் கிராமங்களில் திரு விழாக்களில் விற்கும் " மரிகொழுந்து" சென்ட் போல் ஒரு சமாச்சாரத்தை துக்கிளியூண்டு பாட்டிலில் போட்டு ஐநூறு அறுநூறு ரூபாய் என்கிறார்கள். கொஞ்சன் சொல்லிகொள்கிராற்போல் பாட்டில் என்றால் இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. விலை கேட்டு லேசாக தலை சுற்று வதுபோல் தோன்றியதால் வெளியே வந்து பஸ்ஸில் உட்கார்ந்தேன். சயந்திரம் உலக புகழ் பெற்ற லூவர் மியூசியம். கூட்டத்தில் நின்று உள்ளே போனால், நாம் பல முறை பார்த்த சிலைகள், படம்கள். கண்ணதாசன் சின்னது போல் " உடுத்தவும் நேரமின்றி போரிட்ட வீரர்களின்" சிலைகள்; படம்கள். எல்லா கூட்டமும் அம்முகிற ஸ்டால் எதுவென்றால் மோனலிசா வைக்க பட்டுள்ள ஹால். இந்த ஊரில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராத்திரியிலும் கடைகள் ஆபீஸ் கள் எல்லாவற்றிலும் ராத்திரி விளக்குகளை அணைப்பதே இல்லை. எல்லா கடைகளும் 
கண்ணாடி சுவர்களுடன் ராத்திரி எல்லாம் விளக்கில் ஜ்வலிக்கின்றன. ஐரோப்பாவின் பல ஊர்களிலும் இதே கதைதான். வாழ்க மின் சேமிப்பு!.  ராப்போஜனம் ஹோட்டலில். நான் எடுத்து போய் இருந்த MTR சாம்பார் சதம் பாக்கிட்டை காப்பி  மேக்கரின்  வெந்நீரில் வைத்து இருந்து சாப்பிட்டு படுத்தேன்.. குட் நைட்