திங்கள், 19 ஜூலை, 2010

# 32 ஹைரோப்பா ...பார் பார் பாரீஸ் பார்...விளக்கணையா ஊர்


மியூசியத்தின் inverted pyramid
அடுத்த நாள் காலை மீண்டும் சில்லென்று விடிந்தது. வீட்டிற்கு போன் செய்து இரண்டு நாள் ஆனது நினைவிற்கு வந்தது. ரிசப்ஷன் காரியிடம் ஹோட்டலில் இருந்து போன் செய்ய முடியுமா என்ற போது , நம்ம முக விலாசத்தை பார்த்து, இங்க ரொம்ப காஸ்ட்லி என்று சொன்னாள்.
                                                                                      பாரிசின் வீதி
ரொம்ப வருஷம் முன் எங்க அப்பாவுடன் ரெங்கநாதன் தெருவில் காய் கறி வாங்க போனது நினைவிற்கு வந்தது. ஒரு பழைய சாக்கில் காய் கறி களை குமித்து வைத்து காய்கறி காரம்மா . முன்னாள் உட்கார்ந்து இருப்பாள். எங்க அப்பா 'கடைய' செலெக்ட் பண்ணி எதிரில் உட்கார்ந்து கொள்வார். தொண்டையை கனைத்து கொண்டு "கத்தாரி எப்படிம்மா?" என்று டீலை ஆரம்பிப்பார். கடைக்காரி கிஞ்சித்தும் இந்த பிசினசை லட்சியம் செய்யாமல் " நீ எல்லாம் வாங்க மாட்ட ஐயிரே" என்று டிஸ்மிஸ் செய்வாள்.
லூவர் மியூசியத்தின் Painting
அதே பாவனையை அரை நூற்றாண்டு கழித்து , பிரான்ஸ் ஹோட்டல் காரி அதே பாவனையில் சொன்னாள். என்ன கத்தரிக்கு பதில் டெலிபோன் கால். விஷயம் என்னவோ ஒன்றுதான், "உன் மூஞ்சை பாத்தால் பணம் கொடுக்கறவன் போல் தெரியல" .
நாமறிந்த மோனலிசா
 பரம்பரை இன்சல்ட் ஆச்சே விட்டு கொடுக்க மனம் வருமா? " பணம் கூட ஆனாலும் பரவாயில்லை போன் பண்ண வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து ஒரு நிமிஷம் போனுக்கு ஏறக்குறைய அறுநூறு ரூபாய் தண்டம் அழுதேன்.
மற்றொரு படம்
பிரேக் பாஸ்ட் வழக்கம் போல் பிஸ்கட் காப்பி, பாவிகள் தண்ணீர் மட்டும் தரவில்லை. ஜூஸ் குடித்து சமாளித்தேன்.
இன்னொரு ஓவியம்
அதே பஸ் அதே ஸீட். இப்போது பகலில் ஈபிள் டவர் தரிசனம். இந்த பிரும்மாண்டமான இரும்பு அமைப்பை கொஞ்சம் வருஷம் முன்பு இடித்து தரை மட்டம் ஆக்க பார்த்தார்களாம். நல்ல வேளை தப்பித்தது, உலக அதிசயம் என்று பெயரும் எடுத்தது.
அழகிய கிரேக்க சிலை
டவரின் இரண்டாம் கட்டம் வரை லிப்டில் போகலாம் , போனோம். அங்கே ரெஸ்டாரன்ட், போட்டோ கடைகள். போட்டோ எடுத்து கொண்டேன். கீழே வந்தோம். டவரின் கீழே ஏகப்பட்ட வியாபாரிகள் சிறு சிறு வாரிசு பொருட்கள் விற்று கொண்டு இருந்தார்கள்.
அழகிய தலை.........ஸாரி சிலை
 நம்மை " பாம்பே" " டில்லி" என்று கூப்பிடுகிறார்கள் . போலீசை கண்டவுடன் பிசினசை சடுதியில் நிறுத்திக்கொண்டு எஸ் ஆகிறார்கள். ஒரு விஷயம் உறுத்தியது. இவர்கள் அனைவரும் கறுப்பர்கள். டவரை விட்டு விலகி வந்தோம்.
                                                                   பாரிசின் அழகிய தோற்றம்
சிறிது நேர பயணத்திற்கு பின் ஒரு உயரமான பில்டிங்கிற்கு வந்தோம் வெகு விரைவான லிப்ட். 58 வது மாடிக்கு 58 நொடியில் போகிறது. இதன் மேலும் ரெஸ்டாரன்ட் கசப்பு காப்பி கொள்ளை விலையில் குடித்தேன் , போட்டோ கடைகள் போட்டோ எடுத்து கொண்டோம். தொலைவில் ஈபிள் டவரின் பின்னணியில் அழகிய பாரீஸ்.
பாரீஸ் அழகாக இல்லை?
சூப்பரான காட்சி. கீழே வந்து பஸ்ஸில் ஏறி நடு ஊருக்கு வந்து இந்தியன் ரெஸ்டாரண்டில் தயிர் சாதம் , பச்ச மொளகா .....ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா நல்ல லஞ்ச். இங்கே ஒரு wax musium இருக்கிறது. லண்டனில் போல் அவ்வளவு கூட்டம் இல்லை. இதில் ஷாரூக்கான் சிலை மிக பிரசித்தமாம். நான் உள்ளே போகவில்லை வீட்டுக்கு போன் செய்ய வேண்டும். அங்கிருந்து ஒரு சென்ட் விற்கும் கடைக்கு போனோம்.
சென்ட் கடை
 நிஜமாவே ஆணை விலை குதிரை விலைதான். நம் கிராமங்களில் திரு விழாக்களில் விற்கும் " மரிகொழுந்து" சென்ட் போல் ஒரு சமாச்சாரத்தை துக்கிளியூண்டு பாட்டிலில் போட்டு ஐநூறு அறுநூறு ரூபாய் என்கிறார்கள். கொஞ்சன் சொல்லிகொள்கிராற்போல் பாட்டில் என்றால் இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. விலை கேட்டு லேசாக தலை சுற்று வதுபோல் தோன்றியதால் வெளியே வந்து பஸ்ஸில் உட்கார்ந்தேன். சயந்திரம் உலக புகழ் பெற்ற லூவர் மியூசியம். கூட்டத்தில் நின்று உள்ளே போனால், நாம் பல முறை பார்த்த சிலைகள், படம்கள். கண்ணதாசன் சின்னது போல் " உடுத்தவும் நேரமின்றி போரிட்ட வீரர்களின்" சிலைகள்; படம்கள். எல்லா கூட்டமும் அம்முகிற ஸ்டால் எதுவென்றால் மோனலிசா வைக்க பட்டுள்ள ஹால். இந்த ஊரில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராத்திரியிலும் கடைகள் ஆபீஸ் கள் எல்லாவற்றிலும் ராத்திரி விளக்குகளை அணைப்பதே இல்லை. எல்லா கடைகளும் 
கண்ணாடி சுவர்களுடன் ராத்திரி எல்லாம் விளக்கில் ஜ்வலிக்கின்றன. ஐரோப்பாவின் பல ஊர்களிலும் இதே கதைதான். வாழ்க மின் சேமிப்பு!.  ராப்போஜனம் ஹோட்டலில். நான் எடுத்து போய் இருந்த MTR சாம்பார் சதம் பாக்கிட்டை காப்பி  மேக்கரின்  வெந்நீரில் வைத்து இருந்து சாப்பிட்டு படுத்தேன்.. குட் நைட்

2 கருத்துகள்:

 1. நல்ல அலசல் .,

  மக்களை முட்டால் ஆக்க பல கூட்டம்
  அதில்

  சினிமா கூத்தாடிகளுக்கு அமோக
  வரவேற்ப்பும் கொண்டாட்டமும்.
  ,
  நம் தமிழ் நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக
  கவிஞ்ஞனையும், புராணக் கதைகளையும்
  அதில் புனையப்படும் கட்டுக் கதைகளையும்
  மக்களை நம்ப வைத்து ஆளுமை செலுத்துவது
  நம் கண்முன்னே கருணாநிதி எம்ஜிஆர், செயலலிதா
  போன்றோர்களே ஆட்சிகளே சாட்சி சாட்சி

  பதிலளிநீக்கு
 2. தங்கள் கருத்து ஏற்புடையதே. ஆனால் இந்த பதிவிற்கும் இந்த கருத்துக்கும் யாதொரு சம்பந்தமும் என்னால் ஏற்படுத்த முடியவில்லை.

  வழி தவறி வந்து இருந்தாலும் , தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அப்படியே இந்த பதிவையும் படித்து பின்னுரை இட்டால் தன்யனாவேன்.

  பதிலளிநீக்கு