ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

# 34 ஹைரோப்பா ....ஜில்லுன்னு ஜெனீவா..மெஸ்மெரிக்கும் மான்ட் பிளான்க்



அடுத்த நாள் காலை சில்லென்று புலர்ந்தது. தினந்தோறும் சில் சில் என்று குளிர் கடுப்பேத்தியது. வழக்க மான பிஸ்கட் காப்பி கூல் ட்ரின்க் குடித்து நெடும் பயணம் புறப்பட்டோம்.
                                                  வழியில் தென்படும் எழில் 
 நீண்ட ஆனால் சௌகர்யமான பயணம். சுத்தமான தெருக்கள். சிக்னலை மதிக்கும் வாகனங்கள். ஆனா ஒண்ணு , இந்த ஊர் ஆளுங்க , ரொம்ப மத்தாக இருக்கிறார்கள்.
ஒரு ஜெனீவா கட்டடம்
சுறு சுறுப்பு மருந்துக்கும் காணோம். இந்த மாக்கான்களா இந்தியாவை ஆள முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்? ..லாஜிக்கே இல்ல. இது எப்படி சாத்தியம் ஆனது.

                                                  U N O ஆபீஸ்
அடுத்த நாட்டுக்கு வந்தோம். சுவிஸ் லாந்து , ஜெனீவா., இங்க ஐநா சபை யின் ஆபீசை பார்த்தோம். ஒரு பிரம்மாண்டமான , ஒரு கால் உடைந்த நாற்காலி சிலையை, மரத்தால் ஆனது கட்டடத்தின் வாசலில் வைத்து இருந்தார்கள்.

                                                               உடைந்த நாற்காலி
மிக சுத்தமான தெருக்கள். ரோலர் ஸ்கீ யில் சறுக்கும் பெரிசுகள். உற்சாகமான ஊர். U N O ஆபீசின் நேர் எதிரில் இருக்கும் தெரு குழாய் மூட முடியாமல் தண்ணீர் ஒழுகி கொண்டு இருப்பது நம்மூரை நினைவு படுத்தியது.
                                                                                 மூடா குழாய்
அங்கு உள்ள ஒரு ஏரியின் நடுவில் , உலகின் மிக உயரமான Fountain இருக்கிறது 'முசி அரியானா' . கப்பன் பார்க்போல பூக்களால் ஆன கடிகாரம் ஒன்று இருக்கிறது
நாங்கள் பஸ்ஸில் காத்துக்கொண்டு இருந்த போது ஒரு காட்சி. ஒரு கார் ராங் சைடில் நிற்கிறது( நம்மூர் டிரைவர் போலும்) சர் என்று ஒரு போலிஸ் கார் வந்து நின்றது. அதி ஒரு போலிஸ் அதிகாரி ஸே அந்த ஊர் அலெக்ஸ் பாண்டியன், கோபமாக ராங் சிட் காரை பார்த்தார். சைடில் இருந்து ஒரு பெரிய கிளிப் பேட் ஒன்றை எடுத்தார் , ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்து அந்த காரின் நம்பரை 'வரைந்தார்' அந்த அளவிற்கு அவர்கள் படிப்பு அறிவு இருக்கிறது.
அக்கு ப்ரெஷர் (?) தெரு
ஒரே நேரத்தில் நாலு பைக்கு களை ஓரம் கட்டி , ஒரு லாரியிடமிருந்து மாமூலை உஷார் பண்ணி அதே நேரத்தில் அடுத்த காய்கறி வண்டியை ஓரம்கட்ட வைக்கும் நம் போலிஸ் வீரர்களின் 'கடமை' உணர்வும் சுறுசுறுப்பும் நமக்கு நினைவுக்கு வருகிறது இதனால் தான் உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் நம் போலிஸ் இருக்கிறதோ?
இங்கு இன்னும் ஒரு விஷயம், தெருக்களில் சின்ன சின்ன கல் துண்டுகள் வைத்து ரோடு போட்டு இருக்கிறார்கள் நம்மூர் போல் ஒரு லேயராக தார் ரோடுகள் இல்லை , குளிர் காரணமாக தெர்மல் contraction காரணமாக தெரு உடையாமல் இருக்க இப்படி இருக்குமோ?
அங்கிருந்து கிளம்பி மீண்டும் நெடிய பயணம். இந்த ஊரில் ஒரு விசேஷம் ... ஏகப்பட்ட டன்னல்கள் ..தன்னால் என்றால் பத்து மீட்டர் இருபது மீட்டர் நீளம் உள்ளது அல்ல . மிக நீண்..........ட டன்னல்கள். உள்ளே பளீர் என சோடியம் விளக்குகள்.....சுவர்கபுரி. இப்போது காட்சி மாறுகிறது. உயரமான மலை தொடர்கள். திடீர் என்று நாற்புறமும் மலைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. மலை என்றால் நம்ம பல்லாவரம் மலை .. சின்ன மலை போலெல்லாம் இல்லை மிக பெரிய ..மிக்க பெரிய ஐஸ் மூடிய சில் மலை

மான்ட் பிளான்க்
இந்த மலை தொடருக்கு இந்த பகுதியில் மான்ட் பிளான்க் என்று சொல்கிறார்கள், ஆல்ப்சின் இந்த பகுதிக்கு இந்த பெயர். இந்த மலையில் தான் நமது விஞ்ஞானி ஹோமிபாபா, ஜெனிவாவிற்கு வந்த போது விபத்தில் சிக்கி இறந்தார். ' நமது  விஞ்ஞானியை விழுங்கிய மலை கூலாக ஐஸ் பூசி நிற்கிறது.  

                                                                 நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் 
பிரிஜ்ஜின் பிரீசர்க்குள் வைக்க பட்ட ஊர். இந்த இடத்தின் பெயர் "ஷாமுனீ பள்ளத்தாக்கு"
நாங்கள் தங்கிய ஹோட்டலில் (ஹோட்டல் ஆல்பினா)இருந்த கடை களில் எல்லாம் பனி சறுக்கு ஸ்கீக்கள் விற்பனைக்கும் வாடகைக்கும் வைத்து இருக்கிறார்கள்.
                                                     ஹோட்டலை ஒட்டி ஓடும் பனி உருகிய ஆறு
குறுகிய சுத்தமான தெருக்கள். கார் நுழைய முடியாத தெருக்கள். கடைகள் .. கடைகள். இரவு நேரத்திலும் விளக்குகள் எரிய.. இந்த ஐஸ் குளிரிலும் ஒரு சேட் ஹோட்டல் வைத்து இருக்கான். சப்பாத்தி... தயிர் சாதம்.
குட் நைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக