வெள்ளி, 3 செப்டம்பர், 2010

#37 ஹைரோப்பா....சுவர்க்கமா.... இல்ல சுவிஸ்ஸா

                                                   நாங்கள் தங்கிய ஹோட்டல்
அடுத்த நாள் வழக்கமான பிரேக்பாஸ்ட் முடித்து கிளம்பினோம் . இப்ப சரியான நாடோடி வாழ்கை... தினம் ஒவ்வொரு ஊர் .. ஸாரி...நாடு.தினமும் செக்கின் செக்கவுட்டு..புது புது ரூம்.. தூக்கம் போயே போச்.

பஸ்ஸின் தெர்மா மீட்டர் இரண்டு டிகிரிய காட்டு கிறது. படுவேகமாக பயணம்.இந்த ஊர்களில் பஸ் மற்றும் கார் பயணிகள் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இடங்களை செய்து வைத்து இருக்கிறார்கள். சிலசமயம் பெட்ரோல் பங்க்கை ஒட்டினாற்போல் ...சில சமயம் ஹோட்டல் அருகில்...நிறுத்தின இடத்தில் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு ..லன்ச்சை முடித்ததாக பேர் பண்ணி மீண்டும் பயணம் தொடர்ந்தோம். ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பசும் புல் தரைகள் மட்டுமல்ல.. ஏகப்பட்ட மிக நீண்ட டன்னல்கள்...இந்த டன்னல்களில் கரண்ட் இல்லாமல் கார் ஒட்டவே முடியாது என்று தோன்றுகிறது. இந்த ஊர் டிரைவர்களை போலிஸ் க்ளோசாக கண் காணிக்கிறது. ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு கார்ட் கொடுத்து இருக்கிறார்கள். இந்த கார்டை காலையில் பஸ்ஸை எடுக்கும் போது இந்த கார்டை ஒரு ரீடரில் என்கேஜ் ஏய்த்து வைக்கிறார்கள். பஸ்ஸின் மூவ்மேண்டுகள் லாக் ஆகின்றன. போலிஸ் இந்த ரீடர்களை வைத்து டிரைவரின் ஓட்டும் ஸ்டைலை கணக்கு பண்ணுகிறார்கள். எட்டு மணி நேரத்துக்கு மேல் ஓட்டினால் செம்மை பைன் போடுகிறார்கள். நம்மூரில் இன்னும் இது மாதிரி எல்லாம் ரெஸ்ட்ரிக்ஷன் வரலை வந்ததால், நம் போலீஸ்களின் காட்டில் மாமூல் மழை தினமும் பொழியும்.

                                                    பலகை மாளிகை
சாயந்திரம் Gstaad என்னும் இடத்தில் உள்ள ஹோட்டலுக்கு போய் சேர்ந்தோம். பனி மலைகளின் மிக....மிக்க....அருகில் உள்ளது. அடுத்த நாள் ஆல்ப்ஸ் காலையில் ஜில்லென்று கூப்பிட்டது. வெளியில் மைனஸ் இரண்டு டேம்ப்ரச்சர்.
                                                   போற வழியில் புல் மலைகள்
அழகான சுவிஸ் சாலைகளின் வழியே அடுத்த மலையை தேடி பயணம். அந்த ஊரில் வீடுகள் எல்லாம் மரத்தால் கட்டப்பட்டு உள்ளன ஆனாலும் அழகாக, பூ செடிகள் சூழ அழகாக கட்டப்பட்டு உள்ளன. நம்மூர் டீ கடை பெஞ்சுகள் போல் வீடு களின் வெளியே, ஆனால் பெரிய பெரிய கட்டைகளை வைத்து போட்டு இருக்கிறார்கள். தொட்டிகளில் பூக்கள் ஊரே அழகு, குளிர். அடுத்த மலை ஏற பயணம்.
                                                       மலை ரயில்
ரயில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் வந்து பஸ்ஸை விட்டு இறங்கினோம். மேலே பார்த்தால், அடப்பாவிகளா. மரத்தை வெட்டி ஒரு மலையில் இருந்து பக்கத்து மலைக்கு தூக்கிக்கொண்டு போக ஹெலிகாப்டரில் தொங்க விட்டு எடுத்து போகிறார்கள். ஹெலி காப்டரில் இருந்து ஒரு கயிறு தொங்கு கிறது. தரையில் உள்ள மக்கள் , அந்த கயிறில் வெட்டின மரத்தை சட்டென்று மாட்டுகிறார்கள். ஹெலிகாப்டர் மரத்தை தூக்கியபடி அடுத்த மலைக்கு பறக்கிறது. அங்கு ஆகாயத்தில் நிற்கிறது . அந்த மலை மக்கள் சட்டென்று மரத்தை கழட்டி அடுக்கு கிறார்கள். மீண்டும் ஹெலி முதல் மலைக்கு பறக்கிறது , அடுத்த ட்ரிப் அடிக்க. காஸ்ட்லி ட்ரான்ஸ்போர்டேஷன்டா சாமி..

                                                        ஐஸ் மூடிய மலை
அடுத்தது ரயிலடி. நம்மூர் ஸ்டேஷன் மாதிரி தான் இருக்கிறது.. சின்ன சின்ன ரயில்கள். முதல் ரயில் மலைமேல் பாதி தூரம் அழைத்து போகிறது. ரயிலில் பாதிபேர் மலையில் ஸ்கீ பண்ண போகிற தடிப்பசங்கள். ரெண்டு பக்கமும் ஐஸ் ஐஸ் ஐஸ் இரண்டு நாட்களாக பார்த்து சலித்த அதே காட்சிகள்.
                                                      ஐஸ் ஐஸ் எங்கும் ஐஸ்
உலா தொடரும்

1 கருத்து: