திங்கள், 1 மார்ச், 2010

#12 நீயா நானாவும் பெரியாரும்

நேற்று இரவு நீயா நானாவில் வழக்கம் போலவே கோபி கலக்கினார். சுயமுன்னேற்ற புத்தங்களை படித்தால் முன்னேறமுடியுமா என்பது போல தலைப்பு.

சோம வள்ளியப்பனை பலியாடு போல உட்காரவைத்து "சுயமுன்னேற்றப்புத்தகங்கள் எல்லாம் சுத்த ஹம்பக், இவை பாக்கெட்டில் இருந்து பணம் திருடப்படும் உத்திகள் என்பதுபோல பேசினார்கள். அவர் பாவம் கஷ்ட்டப்பட்டு தன் தரப்பு வாதத்தை சொல்ல முயற்சித்தார்.


கோபியோ "வாதங்கள் தட்டையாக உள்ளன" என்பது போன்ற 'பின் நவீனத்துவ' வார்த்தைகளைப்போட்டு பேசினார்.

வாழ்க்கையில் உயர, எஸ் ராமகிருஷ்ணன் ஜெயமோகன் போன்றவர்களின் புத்தங்களையும் படிக்கலாம் என்றார். மூன்றாவது நபரின் பெயரைச்சொல்லவில்லை, என்ன கோபமோ?. அல்லது ஜீரோ டிகிரி போன்ற புத்தங்களை படித்தால் வாழ்கையில் முன்னேற முடியாது என்று நம்பினாரோ தெரியவில்லை.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த சுப வீ, " தனிநபர் முன்னேறினால் போதாது, சமுதாயம் ஒட்டு மொத்தமாக முன்னேற புத்தங்கள் போடுங்கள்" என்று வள்ளியப்பனின் அடி மடியிலேயே கையை வைத்தார். சமையல் குறிப்பு புத்தகம் வாங்கினால் கூட, "ஊருக்கு சமைப்பதெப்படி?" என்ற புத்தகம் தான் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள் போல. ஊரே முன்னேறினால் தான் தனிநபர் முன்னேறுவார் என்று அடித்து கூறி , சமூகம் முன்னேற, தீண்டாமை ஒழியவேண்டும் என்பதுபோல் பேசினார். தாம் கைகூப்புவது இல்லை ஏனென்றால் அது மறைமுகமாக தீண்டாமையை வளர்ப்பதாக தனக்கு தோன்றுவதாக உள்ளது என்றார். அதற்கு கைகொடுப்பது மேல் என்றார்.


சுயமுன்னேற்றம் பற்றிப்பேசும் போது, பெரியார் , அம்பேத்கார் புத்தங்களை படிக்கச்சொன்னார். சுய முன்னேற்றத்திற்கும் , பெரியாருக்கும் என்ன சம்மந்தம் என்று சத்தியமாக புரியவில்லை. வேலைக்குப்போவது , RESUME எழுதுவது போன்றவற்றை போதிக்கும் புத்தகங்களைப்பற்றி பேசும்  போது எப்படி இவரால் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்ளே கொண்டு வர முடிகிறது என்றே புரியவில்லை.


பெர்யாரைபடித்தால் பிராமண துவேஷம் வருமே தவிர எப்படி முன்னேற்றம் வரும் என்பது புரியவே இல்லை நம்மை போன்ற பாமரர்க்கு.

***************************

3 கருத்துகள்:

  1. சுப.வீ போன்ற ஜால்ராக்கள் பேட்சைஎல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு எழதுவது எல்லாம் வீண் வேலை.விஜயன்.

    பதிலளிநீக்கு
  2. // ஜீரோ டிகிரி போன்ற புத்தங்களை படித்தால் வாழ்கையில் முன்னேற முடியாது என்று நம்பினாரோ தெரியவில்லை//

    :)

    பதிலளிநீக்கு
  3. திரு விஜயன் , கண்ணன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு