செவ்வாய், 9 மார்ச், 2010

# 14 திரு நங்கைகள்






இது ஒரு சீரியசான பதிவு


பால்முறையில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அழைப்பது? வடமொழியில் நபும்சகர்கள் என்று சொல்லப்படுவார்கள். ஹிந்தியில் ஹிஜ்ரா என்று சொல்லப்படுவார்கள். இந்த பாவப்பட்டவர்கள் தமிழில் என்னவோ வருஷம் ஒரு பெயரால் சொல்லப்படுகிறார்கள் பழம் தமிழில் அலி என்று சொல்லப்பட்டார்கள். இது ஒரு அர்த்தமுள்ள சொல். அ + லிங்கம் என்பது அலி ஆனது. வடமொழியில் சொற்களுக்கே பால் உண்டு சில சொற்கள் புருஷ சொற்கள் என்றும் சில சொற்கள் ஸ்த்ரீ சொற்கள் என்றும் வேறு சில சொற்கள் இரண்டும் அற்றவை அதாவது அலிங்க சொற்கள் என்றும் வகை படுத்தப்படும். இந்த மரபு படி பார்த்தால் ஸ்திரீ , புருஷ இரண்டு வகையிலும் சேராதவை அ லிங்கங்கள் என்றும் சொல்லப்படும் இதுவே சுருங்கி அலி என்று மூன்றாம் பாலின மக்களை குறிக்கும் சொல்லாயிற்று. இந்த சொல் ஏனோ பிடிக்காமல் போனது. எண்பதுகளில் சுருளிராஜன் காமெடிகளில் ஒம்போது என்று கேலிசெய்யும் வார்த்தையானது. இதன் etimology தெரியாவிட்டாலும் இது ஒன்றும் கௌரவமான சொல் இல்லை என்பது நிச்சயம்


புராணகாலத்தில் ஒரு மூன்றாம் பால் பெண் அரவானை மணந்ததால் இவர்கள் அரவாணிகள் என்று சொல்லப்பட்டார்கள் ஓரளவு அர்த்தம் உள்ள வார்த்தையாக இது தெரிகிறது.


பிறகு ஏனோ இந்த வார்த்தை பிடிக்காமல் போய் இவர்கள் திருநங்கைகள் என்று இப்பொழுது அழைக்கபடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அரவாணிகள் என்பது ஒரு கெட்டவார்த்தை போலவே பார்க்கபடுகிறது. திரு நங்கைகள் என்பதுதான் கௌரவமான சொல்லாக ஏற்க்கப்பட்டுவிட்டது. இதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.


திருநங்கை என்பது ஆங்கிலத்தில் shemale என்பதின் நேரடி தமிழாக்கம். இது மூன்றாம் பாலிநத்தவர்களை "ஆம்பிளை பெண்" என்பதற்கு சமமாக படுகிறது. இந்த வார்த்தை அவர்களின் குறைபாட்டை நேரடியாக சுட்டிக்காட்டும் சொல்லாக எனக்கு தோன்றுகிறது. இது "ஒற்றைக்காலன்" "பேசாவாயன்" என்பது போன்ற குரூர சொல்லாகவே படுகிறது.


திருநங்கை என்பது அவர்களின் குறைபாட்டை நேரடியாக குறிக்கும் ஒரு சொல். மேலை நாட்டவருக்கு பாந்தமாக shemale என்ற சொல் இருக்கலாம் . நிச்சயமாக இது தமிழர் பண்பாட்டிர்கேற்ற சொல் அல்ல. இதற்கு அரவாணி என்ற வார்த்தை மிகவும் கண்ணியமானது டீசன்ட் ஆனது.


மாற்றுவார்களா?

3 கருத்துகள்:

  1. சீரியசான பதிவு என்றாலும், கருத்துடன் சுவைபடக்கூறியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அன்பு சேட்டைக்காரன் ,
    தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு