வியாழன், 25 மார்ச், 2010

#16திரு.....திரு.......திரு விழாக்கொழந்தை சாருநேற்று அதிசயமாக NDTV , ராத்திரி வைத்தேன். god man or con man என்பது topic . அதில் இரண்டாவதாக நம் சாரு. ஐயாவின் மீசையையும் தோரணையையும் பார்த்து ஐயா கிழிக்கப்போறார் என்று பார்த்தால் ........ அய்யோ பாவம்.


திரு விழாவில் தொலைந்து போன கொழந்தை கணக்கா இவர் முழிக்கிறார். பிரெஞ்சு , இத்தாலி என்றெல்லாம் புரியாத கொடேஷன் கொடுக்கும் இவர் இங்கிலிஷை பார்த்து மெரண்டு நின்றது கண்கொள்ளாக்காட்சி.

இவரது ருத்ர தாண்டவம் எல்லாம் சென்னை வரை தான் போலும். புத்தகத்தை கிழித்த இவர் சாமியாரை கிழிப்பர் என்று பார்த்தால், கிழித்து தொங்க விட்ட துணியைப்போல் மனுஷன் துவண்டு நிற்கிறார்.


நான் பார்த்த வரை இவரை தவிர மற்ற எல்லோரும் பேசினார்கள். நித்யாவிற்கு பதாகை தூக்கிய இவர் ,சாமியாரை சாடாமல் பம்மினார்.


வண்டி சத்தம் கொடுத்து கூப்பிட்ட ஆசாமி சாருவை பேச அழைத்தும் நல்ல சந்தர்பத்தை கோட்டை விட்டார்.


தனது சைட்டில் எழுதி இருபது போல் "சிடி பஸ்ஸில் ஜன்னல் சீட் பிடிக்க முடியாமல் நிற்பதுபோல்" இருந்தார். ஒரு திருத்தம் கூடுவாஞ்சேரி ஸ்டேஷனில் நிற்காமல் ஓடும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க முயலும் அப்பாவி பாசஞ்சரைப்போல் தான் எனக்கு தோன்றியது.

சாரு பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ( நெக்ஸ்ட் டைம் டாக் இங்கிலீஷில் என்று சொன்னால் அமைதியாக அப்பீட் ஆகிகொள்ளுவது எல்லோருக்கும் நல்லது)

5 கருத்துகள்:

 1. உங்கள் எதிர்பார்ப்பு படியெல்லாம் அவர் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லை? ;)

  பதிலளிநீக்கு
 2. அன்பு ராதாக்ருஷ்ணன் /ராம்ஜி யாகூ

  தலைவரே நாங்க ரொம்பவெல்லாம் எதிர்பாக்கல்ல. மினிமம் expectation கூட பூர்த்தியாகவில்லை என்பதுதான் பிரச்னை.
  வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி

  பதிலளிநீக்கு
 3. இது ஏதோ மொழிப்ரச்சனைபோல தெரியவில்லை. ஏனென்றால் இவர் பங்குபெற்ற நீயா நானா மற்றும் இப்படிக்கு ரோஸ் போன்ற தமிழ் நிகைழ்சிகளிலும் இதே கதைதான். இவைகளில் ndtv நிகழ்ச்சியைவிட சற்று அதிகமாக பேசினார். அதைகேட்டபோது இவர் இப்படி உள்ளருவதட்கு, பேசாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. சமிபத்தில் அவர் உலக இலக்கிய மேதாவிகளின் கூட்டத்தில் அளித்த உரையின் ஆங்கில மொழியாக்கத்தை அவருடைய ப்ளாக்கில் படித்தல் நன் சொல்வது புரியும்.

  ஈஸ்வரன்

  பதிலளிநீக்கு
 4. ஐய்யா பெயரில்லா
  உங்கள் வாயில் ஒரு கிலோ சர்க்கரை போடவேண்டும்
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு