செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

#9 கத்தரிக்காய் சமாசாரம்


"To be or not to be" ஒதெல்லோ மாதிரி ஊரே பேசறவிஷயம் தான் இந்த BT கத்தரிக்காய்.
வெங்காயம், முருங்கைக்காய் அளவு சினிமால பேமஸ் ஆகலைன்னாலும் தமிழ்நாட்டில் மார்க்கெட் உள்ள காய் தான் இது. கூட்டு, கறி, ரசவாங்கி, குழம்பு, சாம்பார் ன்னு பல ரூபத்தில தமிழன் வயத்தையும் மனசையும் நிறைக்கிற கத்தரிக்காய்க்கு வந்தது சோதனை BT வடிவத்தில்.

BT கத்தரின்னா என்ன என்ன.
கத்தரிக்காயின் மரபணுவ மாத்தி சாதாரண கத்திரிக்காயின் பல குறைபாடுகள நீக்கி பண்ணின Man and God creation தான் இந்த BT கத்தரிக்காய்.

இதுல குழம்பு பண்ணினா கசக்குமா?
யோவ் ! வீட்டில மொளகா பொடிக்கு பதில் சீக்காப்போடிய போட்டாதான் கசக்கும். மத்தப்படி டேஸ்ட் எல்லாம் சாதாரணமாதான் இருக்கும்.

அப்ப என்ன பிரச்னை இதில? .
பிரச்னை காயில இல்ல நம்பகிட்டதான். இந்த கத்தரிக்காய பயிர் ஒருதடவ பண்ணிட்டா அப்புறம் சாதா கத்திரிக்காய பயிர் பண்ண முடியாதாம்.


இந்த கதரிக்கையின் விதய இம்போர்ட் தான் பண்ணனுமாம். நாமளே விளைவிக்க முடியாதாம். அதனால இதுக்கு மாறிட்டோம்ன்னா அதுக்கு அப்புரம் உஜாலாவுக்கு மாற முடியாது. அடுத்த நடவுக்கு அமெரிக்கக்காரன் தான் விதை தரணும். இப்படியே கத்தரி, வெண்டை, மொளகான்னு மாறிட்டோம்ன்னா அமெரிக்காகாரன் தர வெதயதான் நாம் பயிர் பண்ணனும். அதாவது நாம என்ன பயிர் பண்ணனும், என்ன சாபிடணும்ன்னு அமெரிகாகாரந்தான் முடிவு பண்ணும்படி ஆகிவிடும். இத சாப்பிடறதினால கான்சர் முதலிய வியாதிகள் வந்து சேரும். (யப்பா இந்த கான்சர் தொல்ல பெருந்தொல்லையா போயிடுத்தப்பா. சிகரட் புடிச்சா கான்சர், பொகயிலை போட்டா கான்சர், pet பாட்டில்ல தண்ணி புடிச்சு வெச்சு குடிச்சா கான்சர்...BT கத்திரிக்காய சாப்பிட்டாலும் கான்சர்).

அப்ப ஏனய்யா இத பயிர் பண்ணனும்?
இத பயிரிட்டா பூச்சி கடிக்காது ( பூச்சியும் செத்திடுமா கான்சர் வந்து ன்னு எல்லாம் கேக்ககூடாது), மகசூல் (சரியான வார்த்தையா?௦) பலமடங்கு அதிகரிக்கும், காயின் அளவும் பெரிசாக வரும். விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். விவசாயத்த பெரும் அளவு நம்பும் இந்தியாவுக்கு BT காய்கறிகள் பெரிய boon.

BT கத்தரிக்காய எதிர்கறது கம்ப்யூட்டர் பயன்பாட்ட எதிர்தோமே அது மாதிரிதான். அரசியல்-வியாதிகள் ஊர்வலம் போகலாம். வேலைத்த பசங்கள கூட்டம் கூட்டி கோஷம் இடலாம். ஆனா இதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரான போராட்டமே. நிச்சயமா ஜெயிக்க முடியாது. Petroleum 80 % இறக்குமதியாறது என்பதினால கார் ஸ்கூட்டர்ல போகமாட்டேன் மாட்டுவண்டியிலதான் போவேன், மத்தவங்களும் போகணும் என்பது போன்ற அபத்தம் தான் இந்த BT கத்தரிக்கு எதிரான போராட்டமும்.

குஷ்பு இட்லி மாதிரி இந்த காய்கறிகளுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் நல்ல ஒரு பெயரை தேர்ந்தெடுத்து வைக்கலாம்.

இப்போ கத்தரிக்காய் பத்தின ஜோக்
ஒருநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை தோட்டம் வழியாக நடந்துகொண்டு இருந்தார்கள். அன்று அக்பருக்கு செம்ம குஷி, அவங்க வீட்டுஅம்மா கத்தரிக்காய் பிரியாணி செய்து போட்டாங்க போல. தோட்டத்துல ஒரு கத்தரிக்காய் செடி காயோட இருந்துது அத பாத்தா ராஜா " காய் ன்னா கத்தரிக்காய் தான் ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு " என்று புகழ்ந்து கொண்டு வந்தாராம். கூட வந்த பீர்பால் , "ஆமாம் ராஜா கத்தரிக்காய் தான் காய்களின் ராணி அதுதான் ஆண்டவனே அதுக்கு தலையில் கிரீடம் வெச்சு இருக்கான்" ன்னு ஜிங் சாங் தட்டினானாம்.

அடுத்த நாள் , ராஜாவுக்கு உடம்பு பூரா அரிப்பு வந்துடுத்து , அரண்மனை வைத்தியர் அரிப்புக்குககாரணம் கத்தரிக்காய்தான் ன்னு சொன்னார். அடுத்த நாள் சோகமா slowmotion ல ராஜாவும் பீர்பாலும் அதே தோட்டத்துல உலாப்போறாங்க. அதே கத்திரிக்க செடியப்பாத்து ராஜா சொல்றார் " ஒலகத்துலையே மோசமான காய் இந்த கத்தரிக்காய் தான் இல்ல?'. பீர்பால் கொஞ்சமும் தயங்காத சொல்றார் "ஆமாம் மன்னா இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமான காய் இந்த கத்திரிக்காய் தான். அதுதான் கடவுளே இதன் தலையில அப்பு அடிச்சிருக்கான்"

ராஜாவுக்கு ஆச்சரியம் " யோவ் என்னய்யா பேசற நீயி.. நேத்திக்கு நான் கத்தரிக்காய் தான் நல்ல காய் ன்னு சொன்னதுக்கு நீ "ஒலகத்திலேயே நல்லகாய் கத்திரிக்காய் தான் அதுதான் கடவுளே இதன் தலையில கிரீடம் வெச்சு இருக்கான்"ன. இன்னைக்கு நான், "இது மோசமான காய் ன்னு" சொன்ன ஒடனே நீ , "இது ஒலகத்திலேயே மோசமான காய் அதுனாலதான் ஆண்டவனே இதன் தலைல ஆப்பு அடிசுஇருக்கன்நு சொல்லற? " ன்னார். பீர்பால் சொன்னான்" ராஜா இந்த பீர்பால் ஒங்களுக்குத்தான் அடிமை , கத்திரிக்காய்க்கு இல்லை".பின்னூட்டம் ப்ளீஸ்

3 கருத்துகள்:

 1. குஷ்பு இட்லி மாதிரி இந்த காய்கறிகளுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் நல்ல ஒரு பெயரை தேர்ந்தெடுத்து வைக்கலாம்.

  ........விஷயங்களை, நகைச்சுவையுடன் கிண்டி இருக்கும் பதிவு. நல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 2. நன்றி சித்ரா
  வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும்

  பதிலளிநீக்கு
 3. bt கத்தரி மூலம் அதிக விளைச்சல் கிடைக்க எந்த வழியும் கிடையாது . . . புழு தாக்குதலில் இருந்து தப்ப்புவதால் பூச்சி மருந்து செலவு மட்டுமே குறையும் .

  பதிலளிநீக்கு