திங்கள், 11 ஜனவரி, 2010

# 1 ஹலோ வேர்ல்ட்

இதோ நானும் எழுத வந்துவிட்டேன்.
பிதாமகர்கள்  சுஜாதா, பிவிஆர், ராகி ரங்கராஜன் ஆகியோரை  சேவித்து                        தொடங்குகிறேன்.
நேற்று புத்தககங்காட்சியின் கடைசி நாள். செம கூட்டம். காரில் போக பயந்து ஸ்கூட்டரில் போய உள்ளே பூர முடியாமல் ஒரு மயில் தள்ளி நிறுத்தி.   யப்பா உள்ள வந்தாச்சு.  வந்திருந்த செம கூட்டத்தப்பர்த்து சந்தோஷமா இருந்தது. நூறு வயசு தாத்தாவில் இருந்து சின்னவயசு ஜீன்ஸ் குட்டி வரை எல்லோரும் புஸ்தக அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். 
நிறைய  ரைட்டர்ஸ் பார்க்க முடிந்தது.
டிவி யில் அடிக்கடி வரும் ஒரு சோக பெரியவர்   சாமியார் மாதிரி    இருப்பவர   தனியா நின்று புஸ்தக மார்கெடிங் செய்தது  தமாஷாக இருந்தது. 
கிரி விகடன் நக்கீரனில் செம கூட்டம்.
நெஜமாகவே உயிர்மையில் ரெண்டுபேர் கோதவில் இருப்பாங்கன்னு பாத்தேன். சாதுவா ம.பு தான் யாரோ வாசகியுடன் பேசிக்கொண்டு இருந்தார். சப்பென்று இருந்தது.
யாரோ சொன்னங்க ஜீரோ டிகிரி மலிவு பதிப்பு கிடைக்கும்னு.  இல்லை  . 150  ரூ   மொய் எழுத மனம் வராமல் வெளியே வந்தேன்  
500 க்கு புஸ்தகம் வாங்கிய நிறைவுடன் ஜூஸ் குடித்து திருப்தியாய் வந்தேன்.

விஸ்வாமித்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக