வியாழன், 27 மே, 2010

# 21 ஜாதி பெயரா அப்பா பெயரா

தமிழ் நாட்டில் ஜாதி என்பதே ஒரு கெட்ட வார்த்தை ஆகிவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே.
"ராஜ்" என்று ஒரு பெயரை  கேட்ட உடன் நமக்கு மனதில் உண்டாகும் உருவத்திற்கும், "ராஜ் ஜெயின்" என்று கேட்டால் உண்டாகும் உருவத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கும். மன்மோகன் சிங் க்கும் மன்மோகன் என்ற பெயரை கேட்டவுடன் தோன்றும் உருவத்துக்கும் நிறைய வேறு பாடு இருக்கும். ஒரு பெயரை வைத்து அந்த நபரை அறிய உதவும் சாதனம் தான் ஜாதி பெயரும், ஊர் பெயரும். மதுரைக் காரன் என்றாலே இழுத்து இழுத்து பேசும் பாணியும் , முதுகுக்குப்பின் அருவாளும் தோன்றும்.
இந்தவேறு பாடுகளை எல்லாம் அறியவைக்கும் ஊர் பெயரையும் ஜாதி பெயரையும் மறைப்பது தான் போன தலை முறை நமக்கு கற்றுத்தந்த பாடம். ஜாதி களை ஒழிக்கிறேன் பேர்வழி என்று தெருக்களின் பெயர்களை மாற்றிய கூத்து தமிழ் நாடு தவிர வேறு எந்த ஊரிலும் நடந்து இருக்க முடியாது . "டாக்டர் நாயர் ரோடு" வெறும் "டாக்டர் ரோடு" ஆன கேலிக்கூத்து சென்னைக்கு மட்டுமே உரியது. நல்லவேளை "நாயுடு பேட்டை" வெறும் பேட்டை ஆகவில்லை.
ஜாதி மக்கள் மனதையும் அரசியலையும் விட்டுப்போகாத வரை ஜாதி ஒழிப்பு என்பதே ஒரு கண்துடைப்புதான். ஜாதி ஒழிப்பைப்பற்றி வாய்கிழிய பேசுபவர்கள்தான் ஜாதிவாரி கணக்குஎடுப்பு வேண்டும் என்பது பெரிய காமெடி. எனக்கு ரொம்பநாளாக ஒரு கேள்வி. ஜாதி ஒழிப்பை பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் யாராவது ஒரு குறத்தியை தன வீட்டு மருமகளாக கட்டியிருக்கிறார்களா? கட்டுவார்கள?. பின் எங்கே போனது இவர்களின் ஜாதி ஒழிப்பு கொள்கைகளும் வெங்காயமும். ஸாரி! எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்.
அனேகமாக தமிழ் நாட்டை தவிர மற்ற அனைவரும் "sur name" என்று ஒன்று வைத்துக்கொள்கிறார்கள். இது ஜாதி, clan போன்றவை ஆகும். மலையாளத்து காரர்கள் மனை பெயரை வைத்து கொள்வார்கள். அந்த வீட்டு அனைவரும் அந்த மனை பெயரால்  அறியப்படுவார்கள். நம்மூருக்கு வருவோம். நல்லதோ கேட்டதோ ஜாதியை நாம் சொல்லிக்கொள்ள வெட்கபடுவதால், இந்த "surname" கட்டத்தை எப்படி fill செய்வது என்று தெரியாமல் இனிஷியலை expand செய்து  அப்பா பெயரை பொட்டுகொள்கிறோம். எனவே அப்பாவின் பெயர் secondname அல்லது surname ஆக அமைகிறது. தமிழனைத்தவிர மற்ற அனைவரும் மற்றவரை ( மிகவும் நெருங்கிய வராக இருந்தால் ஒழிய) surname சொல்லித்தான் குறிப்பிடுவார்கள். இந்த நடை முறையினால் அப்பாவின் பெயர் மகன் பெயர் ஆகிறது. முன்னாள் மந்திரி அன்புமணியின் பெயரை ராமதாஸ் என்று தான் பல வடநாட்டு ஊடகங்கள குறிப்பிட்டன. இரண்டாவது சொல்லப்படுவது அவருடைய அப்பாவின் பெயர் அது அவரின் பெயரின் ஒரு பகுதியல்ல என்பதையே அவை புரிந்துகொள்ளவில்லை. அடுத்த பெயர் தயாநிதி மாறன். இவரையும் மாறன் என்றே குறிப்பிடுகின்றன. மாறன் என்பது ஜாதி பெயரோ, குடும்ப பெயரோ அல்ல அது இவரின் அப்பாவின் பெயர் என்பது மறக்க படுகிறது. நான் கொஞ்சகாலம் டில்லியில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தபோது என் நண்பர் கேட்டார், " நம் ஆபீஸ் லக்ஷ்மி யும் ஜனாதி பதியும் ஒரே ஜாதியா" என்று. இதற்கு காரணம் எங்கள் டைபிஸ்ட் பெயர் லக்ஷ்மி வெங்கட்ராமன் , அப்போதைய ஜனாதி பெயரும் வெங்கட்ராமன். இரண்டு பேரின் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. இன்னும் ஒரு குழப்பம் அப்பாவின் பெயரை தன பெயரின் முன் வைத்துக்கொள்வதா அல்லது பின் வைத்துக்கொள்வதா என்று. எனக்குதெரிந்த ஸ்டையிலான பையனின் பெயர் ராஜேஷ் முனுஸ்வாமி இதில் பையன் பெயர் ராஜேஷ் என்று எண்ணி ஏமாந்தவர்கள் அநேகம். பையன் முனுஸ்வாமி, அப்பாவின் பெயர்தான் ஸ்டைலான ராஜேஷ். இனிஷியலை expand பண்ணி மாட்டிக்கொள்ளாத சில புத்திசாலிகளும் உண்டு. TR பாலு , P சிதம்பரம், மு க அழகிரி போன்றோர். இன்னும் சிலர் இந்த surname கூத்தால் , தன பெயரை இழந்து ஊரின் பெயரால் அழைக்கபடுபவர்களும் உண்டு. ராமசாமி ஆற்காடு முதலியார் என்பவர் , R ஆற்காடு என்றே கடைசி வரை அறியப்பட்டார்.
ஜாதியின் பெயர் (இந்த பிரயோகம் பிடிக்க வில்லையென்றால்) இனத்தின் பெயர் அந்த இனத்தின் வளர்ச்சியே குறிக்கிறது. பறவைகளை பொறுத்த வரை அவை தங்கள் தாயை மட்டும் தான் அறியும். அதுவும் சில நாட்கள், மாதங்கள் தான். இது முதல் நிலை. சில மிருகங்கள் தங்கள் உடன் பிறப்புக்களுடன் சில மாதங்கள், சில ஆண்டுகள் சேர்ந்து இருக்கும். இது அடுத்த , சற்று மேம்பட்ட நிலை. அடுத்த ஊர் மாடுகூட்டதிற்கும் தங்களுக்கும் வேறு பாடு தெரிய துவங்கினால் அது மாடுகளின் அறிவு வளர்ச்சியையே குறிக்கும். நான் சொல்லவருவது என்னவென்றால் , தன் இனம், தன் கூட்டம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்க முயல்வது சமூக நோக்கில் மேம்பாடையே காட்டும். இந்த பிரிவு, பிறப்பை முன் வைத்து இருக்கலாம், படிப்பை முன்வைத்து இருக்கலாம், பலத்தை முன் வைத்து இருக்கலாம், சமூக அந்தஸ்தை முன் வைத்தும், பண பலத்தை முன் வைத்து கூட இருக்கலாம்.
இந்த பிரிவினை. தவிர்க்க முடியாதது. இவை அனைத்தும் ஒழிந்து ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் உருவாகும் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். ஏற்றத்தாழ்வுகள் ஏதோ ஒரு parameter ல் கட்டயாமாக இருக்கும்.

1 கருத்து:

  1. அநேகமாக தங்களின் அனைத்து கருத்துகளையும் ஒத்துபோகிறேன்.
    குறிப்பாக கிழ் வருவன,
    //அனேகமாக தமிழ் நாட்டை தவிர மற்ற அனைவரும் "sur name" என்று ஒன்று வைத்துக்கொள்கிறார்கள். இது ஜாதி, clan போன்றவை ஆகும்//

    //இந்த பிரிவினை. தவிர்க்க முடியாதது. இவை அனைத்தும் ஒழிந்து ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் உருவாகும் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். ஏற்றத்தாழ்வுகள் ஏதோ ஒரு parameter ல் கட்டயாமாக இருக்கும்//

    ஆனாலும் மனிதன் முன்னேற தான் இந்த ஜாதி, மதம் எல்லாம் உருவாகி இருக்கனும்கிறது என்னோட தாழ்மையான கருத்து

    பதிலளிநீக்கு