வெள்ளி, 30 ஏப்ரல், 2010

#19 ஹைரோப்பா [1 ]- பூர்வாங்கம் விசா வீசை என்ன விலை?



ஐரோப்பா போக முடிவு பண்ணியாச்சு. இது ஒரு ட்ரைனிங் கம் டூர். இந்த தொடரில் ட்ரைனிங் சம்பந்தமான போர்ஷன்ச விட்டுவிட்டு ஜாலி போர்ஷன்ச மட்டும் சொல்வதாக பிளான். எங்க institute ட்ரிப் அரேஞ் பண்ணி இருந்தாங்க. லாஜிஸ்டிக்ஸ் க்கு ஒரு டூர் ஆபரேடர் மூலம் செய்து இருந்தாங்க.
ஐரோப்பா என்றவுடனே பயங்கர குளிர், பியூர் வெஜ் சாப்பாடு கிடையாது, தண்ணி கூட காசு கொடுத்து வாங்கணும் போன்ற உதரல்களுடந்தான் இந்த ப்ரோக்ராம்க்கு ஒத்துக்கொண்டேன்.

முதலில் விசா வாங்கணும் என்றார்கள். நாமோ விசா வீசை என்னவிலை என்று கேட்கிற கேசு. நமக்குத்தெரிஞ்சு ஐயம்பேட்டை லெவலுடன் நம் சொந்தபந்தங்கள் எல்லாம் முடிந்து போகும். ஐரோப்பாவாவது பொய்ரோப்பாவது . ஆனா , விசாவபத்தி மட்டும் ஒரு வார்னிங் மனசில் ஓடியது. US எம்பசி வாசலில் பெரிய்ய்யய்ய க்யூவில் கால் கடுக்க நிற்கும் மேட்டுக்குடி மக்களை பல முறை பார்த்து பரிதாபப்பட்டு இருப்பதால் , இந்த விசா சமாச்சாரத்தில் மட்டும் எனக்கு ஒரு உதறல் இருந்தது. விசா கொடுக்கும் முன் வெள்ளைக்காரன் எல்லாம் கேள்வி கேட்டு, interview பண்ணி தொல்லை செய்வார்கள் என்று ஒரு பட்சி சொல்லியிருந்ததால் நம் டென்ஷன் எகிறியது.
US கான்சலேட் ஆபீசில் அமெரிக்க விசாதான் கொடுப்பார்கள். UK மற்றும் ஐரோப்பா விசாவிற்கு வேறு ஆபீஸ் என்று என் மண்டையில் ஏற பல நாள் பிடித்தது. அபியும் நானும் பிரகாஷ் ராஜ் போல் பயங்கரமாக பிரிபரேஷன் எல்லாம் செய்துகொண்டு போனால், யூ கே விசா ஆபீஸ் பச்சையப்பாஸ் காலேஜ் எதிரில் என்றார்கள். ஆனால் இந்த ஸ்தலத்தில் பெரும் கூட்டத்தை இதுவரையில் பார்த்ததில்லை என்பதால் சின்ன ஆறுதல். என்றாலும்  டென்சனுடன் காலை பத்து மணிக்குப் போனேன். முதல் கேள்வி: செல்போன் வைத்து இருக்கிறீர்களா . கேட்டவர் செக்யுரிட்டி. யப்பா ஈசி கேள்வி. உள்ளே போனால் பேங்க் போல் நிறைய கௌண்டர்கள். நான் எதிர் பார்த்தது போல் ஒரு வெள்ளைக்காரன்கூட இல்லை. நம்மூர் முன்சாமி, கந்தசாமி சுப்புலட்சுமி தான். அப்ப்ளிகேஷனை ஒருதரம் பார்த்துவிட்டு ஓகே ஒரு வாரத்தில் கிடைக்கும் என்றாள் அந்தப்பெண். அய்யோ படித்தது எல்லாம் வீணா? ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே. மனசு ஆற ரொம்ப நேரம் பிடித்தது. யூரோ விசா பாம்பேயில் டூர் காரர்களே ஏற்பாடு செய்து கொள்வார்களாம் ஒரே வாரத்தில் ரெண்டு விசாவும் ரெடி. யூரோ விசாவிற்கு பெல்ஜியம் கான்சலேட் ஆபீசில் அரேஞ் பண்ணி இருந்தார்கள். ஒரு நல்ல விஷயம். இன்டர்நெட்டில் சென்னையில் இருந்தபடியே யுரோ விசாவை track செய்ய முடிந்தது.
அடுத்தது கரன்சி. சாப்பாடு , ஹோட்டல் எல்லா செலவையும் டூர் ஆபரேடர் பார்த்து கொள்வதால் "வெத்தலை பாக்கு பீடி சிகரெட்" செலவுக்கு மட்டும் பாரின் கரன்சி எடுத்துக்கொண்டால் போதுமானது. கொஞ்சம் பவுண்ட் (லண்டனுக்காக) கொஞ்சம் யூரோ, கொஞ்சம் சுவிஸ் பிரான்க் வாங்கி வைத்துக்கொண்டு, ஏப்ரல் 5 க்காக காத்து இருந்தேன்.....


1 கருத்து: