வியாழன், 29 ஏப்ரல், 2010

#18 பிராமணனா பார்ப்பானா

தமிழ் கூறும் நல்லுலக பதிவாளர்களில் பலர் , முக்கியமாக பெரியார் கட்சிக்காரர்களும் அவர்தம் வழித்தோன்றல்களும் பிராமணர்களை பார்ப்பான் என்றே எழுதுகின்றனர். பிராமணர்கள் என்றால் ஏதோ அவர்களை உயர்த்திப்பிடிப்பது போலவும் பார்பானர்கள் என்று எழுதினால் அவர்களுக்குரிய இடத்தில் அவர்களை வைப்பது போலவும் நினைக்கிறார்கள். நிற்க

பிராமணர்கள் என்றால் பிரம்மத்தின் வழி நடப்பவர்கள் என்று ஒரு பொருள் உண்டு. பிரம்மத்தின் வழி என்றால் அறவழி என்று கொண்டால் " அந்தணர் என்போர் அறவோர்" என்ற வள்ளுவரின் வார்த்தை ஏறக்குறைய மேற்சொன்ன difinition க்கு ஒத்து வருகிறது. காலப்போக்கில் "வழி நடப்பு" என்பது மாறி " பிறப்பு" என்பது criterian ஆனது.
பிராமணர்கள் என்றால் ஏனோ ஒரு சிலருக்கு பிடிக்காத வார்த்தையாய் போனது. மேற்சொன்ன படி, பிராமணர்கள் என்ற பதம் எவ்விதத்திலும் யாரையும் உயர்ச்சியாக சொல்லும் வார்த்தையாக கொள்ள முடியாது. சரி இப்போது பார்பனர்கள் என்ற வார்த்தையை பார்க்கலாம்.

பிராமணர்களை "இருமுறை பிறந்தவர்கள்(த்விஜர்கள்) " என்று சொல்லுவார்கள். இவர்கள் இயற்கையாக ஒரு முறையும் பூணல் போடும் போது ஒரு முறையும் பிறந்ததாக கருதுவது வழக்கம். அதாவது பிராமண வாழ்வில் முக்கியமானதாக கருதப்படும் பூணல் அணிவதையும் ஒரு பிறப்பாக கருத்தில் கொண்டு பிராமணர்களை மேற்க்கண்டவாறு கூறுவார்கள்.
பறவைகள் மட்டிலுமே இரு முறை பிறக்கின்றன. முட்டையாக ஒரு முறையும் பிறகு முட்டையில் இருந்து ஒரு முறையும் பிறக்கின்றன. பிராமணர்களும் இருமுறை பிறப்பதினால் அவர்களை பறவைக்கு ஒப்பிட்டு, "பார்ப்பு + அனர்கள்" அதாவது பார்பனர்கள் என்று கூறுவார்கள்.
பார்பனர்கள் என்ற வார்த்தை பிராமணர்கள் வாழ்வில் மிக முக்கியமானதாக கருதப்படும் "யக்யோபவீத தாரணத்தை" ஒரு புதிய பிறப்பாக கொண்டு சொல்லப்படும் ஒரு சொல்லாகும்.

பிராமணன் என்ற வார்த்தை ஒருவரின் நடத்தையை முன்னிட்டு சொல்லப்பட்டால் , பார்ப்பனன் என்பது பூணல் அணிவிப்பு நிகழ்ச்சியை, ஒரு முக்கியமானதாக கொண்டு கூறப்படும் வார்த்தை.
எனவே பார்பனர்கள் என்பது பிராமணர்கள் என்பதைவிட அதிக "ஆச்சாரமான"  வார்த்தை.
கருப்புசட்டை பதிவர்களே அர்த்தம் புரிந்து எழுதினால் நலம்
அன்புடன்
விஸ்வாமித்திரன்.

1 கருத்து:

  1. நல்ல காமடி போங்க! நடத்துங்க நடத்துங்க! பார்ப்பனர் என்பது அவர்கள் பால் போன்ற நிறத்தைக் கொண்டு எழுந்த சொல். இப்பெயர்களில் உயர்ச்சி தாழ்ச்சி எல்லாம் பிற்காலத்தில் புனையப் பட்ட சங்கதிகள்! ஒன்று அவர்கள் இங்கு வந்து சேர்ந்த போது கருப்பாக, மாநிறமாக இருந்த உள்ளூர் மக்கள் வெள்ளையாய் இருந்தோருக்கு வைத்த பெயர், மற்றது அவர்களே தங்களுக்கு கற்பிதமாகக் கொடுத்துக் கொண்ட கவுரப் பட்டப் பெயர். அம்புட்டு தான் மாட்டர்! பிளேட்டுகளத் திருப்பிப் போட்டு உட்டாலக்கடி காட்டுவது இந்துத்துவ வியாதிகள் ஸ்டைல் தானே!

    பதிலளிநீக்கு