சனி, 3 ஜூலை, 2010

#31 ஹை ரோப்பா.. .பார் ... பார் பாரீஸ்

பெல்ஜியம் ஹோட்டல்
அடுத்த நாள் காலை குளிருடன் பெல்ஜியம் ப்ரேக்பாஸ்ட். வழக்கம் போல் காப்பியுடன் பிஸ்கட். ஏக்கத்துடன் பொங்கல் தோசை எல்லாம் மனசில் நினைத்து கொண்டு , ஒரு தயிர் கப்புடன் டைனிங் ஹாலை விட்டு வெளியே வந்தேன். ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். தெருவில் போகும் எல்லா கார் களும் என்கிட்டே வந்து நின்று போயின.அப்புறம் தான் தெரிந்தது நான் நின்று கொண்டு இருப்பது ஒரு ஜீப்ரா கிராசிங்கில். நான் தெருவை கடக்க நினை கிறேன் என்று நினைத்து தான் தெருவில் போன கார்கள் நான் கடப்பதற்கு நின்றன. நம்மூரில் நம்மை சற்றும் சட்டை செய்யாமல் விர்ரென்று பறக்கும் கார்களும் பைக்குகளும் நினைவிற்கு வந்தன. வழக்கமான பஸ் வழக்கமான ஸீட். அடுத்த ஊரை நோக்கி , அல்ல அடுத்த நாட்டை நோக்கி பயணம் ஆரம்பம்.

ஐரோப்பாவின் பசுமை கண் முன் விரிந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் பச்சை பசேல் என்று புல் தரை. உள்ள படியே மனதுக்குள் சிலீர் என்று புகுந்தது. பச்சையான பூமியின் ஊடாக பிரான்சுக்குள் நுழைந்தோம்.

ஆஸ்ட்ரிக்ஸ் பார்க் என்று ஒரு தீம் பார்க். நம்மூர் தீம் பார்குகள் போல் தான். இங்கு மிக வேகமாக ஓடும் wooden ரோலர் கோஸ்டர் இருக்கிறது. நமது வயசையும் சைசையும் பார்த்த டூர் மேனேஜர் , "நீங்கள் ஸ்டன்ட் ஷோ வையும் vaarungal என்று, டால்பின் ஷோ வையும் பார்த்து விட்டு வந்து விடுங்கள் என்றான் . ஒன் வயச மறந்து ஏதாவது அட்வென்ச்சர் பண்ணி கைய்ய கால ஓடச்சுக்க போற, வெளி யூர்ல வந்து என்று சொல்லாமல் சொன்னான். அந்த தீம் பார்க்கில் nothing was special. அங்க குட்டி குட்டியா வெள்ளைகார குழைந்தைகள் எஸ்கர்ஷன் வந்து இருந்தன. நான் போட்டோ பிடிக்க போனபோது , அவைகளின் டீச்சர் குறுக்கே பாய்ந்து தடுத்தாள். நம்மை பார்த்தால் பூச்சாண்டி போல இருக்கு போல. ஸ்டன்ட் ஷோ சாதாரண சர்கஸ் மாதிரி இருந்தது. டால்பின் ஷோ ஓகே. அங்கே புடிச்ச போட்டோ ஒண்ணு கூட வரல.
சாப்பாடு தான் கூப்பாடாக போனது. அங்கிருந்த டீ கடையில் ஒரு காப்பியுடன் லன்ச்சை முடித்து கொண்டு பஸ்ஸில் புறப்பட்டோம். ஒரு மணி நேர பயணத்திற்குப்பின் ஹோட்டல் வந்து சேர்ந்தோம். பெரிய ஹோட்டல் ஆனால் ஊருக்கு வெளியே.
                                                                 சைன் நதி
சாயந்திரம் ஊர் சுற்றிபார்க்க புறப்பட்டோம். ஆகா ஆகா அங்கேயும் ஒரு குடி மகன் புல் மப்பில் நடுத் தெருவில் ஒக்காந்து அலப்பறை பண்ணிக்கொண்டு இருந்தான். நம்மூருக்கு வந்தது மாதிரி இருந்தது. அரை மணி பயணத்திற்கு அப்பறம் ஊருக்கு உள்ள வந்தோம்.

ஈபிள்
சைன் நதியில் கண்ணாடி படகில் சின்ன சுற்று. நதியின் இரண்டு பக்கமும் பல பழம் பில்டிங்குகள்.

கிளாஸ் போட்- வளைவு பாலம்
போட்டில் போகும்போது , பல பாஷைகளில் ரன்னிங் கமெண்ட்ரி வைத்து இருக்கிறார்கள். ஹெட் போன் வைத்துக்கொண்டு நமக்கு வேண்டும் பாஷையில் கேட்கலாம்.

சைனில் போட்
அதில் ஒன்று தான் புகழ் பெற்ற லூவர் மியுசியம், வலது பக்கம் பிரும்மாண்டமான ஈபில் டவர் சற்று அழுக்காக இருந்தது.

கரையோர கட்டடங்கள்
பல பாலங்களின் வழி யாக பயணித்து திரும்பி வந்தோம். அடுத்த நாள் தான் டவர் மேல் ஏறபோவதாக பிளான் இருந்ததால் அப்போது டவரை கிட்ட போய் பார்க்க வில்லை. ஊருக்குள் போய் சுற்றி பார்த்து பின் டவர் பை நைட் பார்த்தோம்.

டவர் பை நைட் - ஏதாவது தெரியுதா?
இரவில் டவர் கரண்ட் விளக்குகளால் ஜ்வலித்தது. போட்டோ எடுத்து கொண்டோம்.

இரவுச்சிலை - ஈபிள் பக்கத்தில்
டின்னர் ஒரு இந்தியன் ஹோட்டலில் கொடுத்தார்கள். பூரி சப்ஜி , நான் சாதம் சாம்பார் என்று. இரவு ஹோட்டலில் ரிடையர் ஆனோம் அடுத்த நாளும் பாரிசில் தான்.

பாரிஸ் ஹோட்டல்

.........பயணிப்போம்

புதன், 30 ஜூன், 2010

# 30 1893ல் சென்னை (மேப்)



எவ்வளவு ஏரிகள், எவ்வளவு காலி இடங்கள்; பார்த்தாலே இனிக்கிறது அல்லவா?.

# 29 வலை உலகில் மீண்டும் போர் மூட்டம்?

நம் தண்டோரா மணியின் கணிப்பின் படி மீண்டும் ஒருமுறை வலை உலகில் தகலாருகள் வரும் என்று நம்பப்படுகிறது

***** பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .

அப்படியா ? இப்போதுதானே கொஞ்சம் அமைதியாக இருக்கிறது .
நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் . இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் **********

இந்த முறை அவை கோர்ட் கேஸ் என்று வளரும் என்றும் நம்புவதாக மணிஜீ சொல்லுகிறார்.
பெண்ணடிமையா? ஆணாதிக்கமா?? பார்பன ஆதிக்கமா?? மஞ்சள் பச்சை என கட்சி விவகாரமா என்பது தெரியவில்லை.

பொறுத்திருந்து பாப்போம். தெம்பு இருநதால் களத்தில் குதிப்போம் ....இல்லாதவர்கள் ஓரமாக இருந்து கைதட்டுவோம்..

திங்கள், 21 ஜூன், 2010

#28 ஹைரோப்பா - கஞ்சாவூர்-சாக்லேட்டூர்

டூலிப் கார்டன்
அடுத்த நாள் காலையில் எழுந்தால் கப்பல் நகருவதாகவே தோன்றியது. கப்பலின் சின்ன பாத் ரூமில் குளித்து, டைனிங் ஹாலுக்கு வந்தாள் அதே பிரட் ஜாம் மார்மலேட் வெண்ணை. தண்ணீர் மட்டும் கிடையாது. "போங்கடா வெண்ணைங்களா" ன்னு பக்கத்தில் இருந்த டிபார்ட் மென்ட் ஸ்டோரில் தண்ணி பாட்டில் வாங்கிகொண்டு கப்பலை விட்டு கிளம்பினோம்.

வழியோர கட்டடம்

இப்போது நாங்கள் இருப்பது ஹாலந்த். குளிரான வானிலை. வேகமாக வீசும் காற்று , பச்சை பசேல் என்று புல் வெளிகள் , அங்காங்கே ஒட்டு வீடுகள். நிஜமாகவே உற்சாகம் ஏற்பட்டது. அகலமான சாலைகள் தெருவில் மனிதர்களையே பார்க்க முடியவில்லை. லெப்ட் ஹேன்ட் ட்ரைவ். இது தான் கொஞ்சம் இடித்தது. எதிரே வரும் வாகனங்கள் எல்லாம் நம் மேல் மோது வது போலவே நமக்கு தோன்று கிறது. ரவுண்ட் டானாக்களில் நம் பஸ் திரும்பும் போது, எங்கேயோ மோத போறது மாதிரியே ஒரு பீலிங்கு. இங்கைக்கும் லண்டனுக்கும் ஒரு மணி நேரம் டைம் டிபரன்ஸ் இங்க யூரோ தான் செல்லும். யூரோபியன் யூனியனில் சேராத இங்கிலாந்தில் பவுண்ட் தான் கரன்சி. இனி நாங்கள் போகும் எல்லா ஊரும் யூரோப்பியன் யூனியனில் இருப்பதால் எல்லா இடங்களிலும் யூரோ தான் செல்லும்.
டூலிப்
வெளியே டெம்பரேச்சர் நாலு டிகிரி. நாங்கள் முதலில் போனது கேகுனாப் டூலிப் கார்டன். ஹாலாந்து எங்கும் டூலிப் பூக்களாக பூத்து இருக்கும் என்று நம் சினிமாக்கள் ஏற்படுத்தி இருந்த இமேஜ் முற்றிலும் விலகியது (அந்நியன் படத்தில் , விக்ரமும், விவேக்கும் கோரமான சிலரும் பஜனை பாட்டு பாடிய படி வருவார்களே). அது மாதிரி ஹாலந்த் முழுவதும் இருக்கும் என்று எதிர் பார்த்தது என் தவறுதான் என்று தெரிந்தது. நாங்கள் போன டூலிப் தோட்டம் நம் போடானிகள் கார்டன் மாதிரி இருந்தது, அங்காங்கே டூலிப் பூக்கள் பூத்து இருந்தன. இந்த பூக்கள் ஏப்பிரல் , மே மாதங்களில் தான் பூக்குமாம். போட்டோ பிடித்து கொண்டேன். அங்கு இருந்த ஒரு டீ கடையில் காப்பியின் விலையை கேட்டு , ஜகா வாங்கினேன் (ஏறக்குறைய நூற்றி அம்பது ரூபாய்). அங்கு இருந்த கடையில் கீ செயின் ஒரு டஜன் வாங்கிகொண்டேன். ஆச்சரியமாக , என் காமிராவிற்கு மெமரி கார்டு அங்கே கிடைத்தது. ஏறக்குறைய 1500 ரூபாய் விலை சொன்னாள். வேறு வழி? இப்பொழுது தான் காமிராவிற்கு உயிர் வந்தது. போட்டோக்களை சுட்டு தள்ளி . பஸ்சிற்கு வந்தோம். அடுத்தது , நெதர்லாந்து. இங்கும் உற்சாகம் கொப்பளிக்கும் சூழல். நதிகள். நல்ல நதிகள்.

படகு
கரையோரம் நெருக்கமாக கடைகள், ஆபீஸ்கள், ஹோட்டல்கள். பாலங்கள். எங்கும் எங்கெங்கும் சைக்கிள்கள். ஒரு ரிவர் க்ரூஸ் போனோம்.

மத்தியான சாப்பாடுக்கு டாம் ஸ்குயர் என்ற இடத்தில் நிறுத்தினார்கள். அங்கிருந்த ஒரு காபி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு , ஒரு ஜூஸுடன் லன்ச்சை முடித்து கொண்டு புறப்பட்டோம்.

 இந்த ஊரில் சிகரெட் பிடிக்க தடை இருக்கிறது, ஆனால் கஞ்சா பிடிக்கலாம். ஊரே போதை மயமாக இருக்கிறது.

வழி எங்கும் பசுமையோ பசுமை. அங்கிருந்த ஒரு விண்ட் மில்லில் போட்டோ எடுத்துகொண்டோம்.

 இந்த மில் எந்த காலத்திலேயோ வேலை செய்து இருக்க வேண்டும்.

இப்போது போட்டோ எடுக்க மட்டுமே பயன்படுகிறது. அடுத்ததாக நாங்கள் போனது பெல்ஜியம்.


இந்த ஊரில் சமீபம் வரை கார் டூ வீலர் ஓட்ட லைசன்ஸ் கைசன்ஸ் எல்லாம் கிடையாதாம். சாக்கலேட்டும், கண்ணாடிகளும் இங்கு பிரசித்தம். நிறைய சாக்கலேட் வங்கி கொண்டேன். இங்குள்ள கிரான்ட் ஸ்குயர் கட்டிட கலையின் மார்வெல்.

சிமிண்டும் மெடலும் கலந்து சூப்பராக கட்டிடங்கள் கட்டி இருக்கிறார்கள். ஊரை சுற்றி பார்த்து விட்டு, ஹோட்டலுக்கு வந்தோம். நைட்டுக்கு பிஸ்கட்டும் , ஜூஸும்.

குட் நைட்.

.....இன்னும் பயணிப்போம்

புதன், 16 ஜூன், 2010

#27 நொந்த நித்தியும் பஞ்சாக்னி தபசும்

நித்தியானந்தா ஒரு வழியாக ஜெயிலில் இருந்து எஸ் ஆனார். ஆஸ்ரமம் வந்து உடன் செய்தது பஞ்சாக்னி தபஸ்.
போகி பண்டிகை போல் வட்டமாக நெருப்பை மூட்டி நடுவில் சாமியார் உட்கார்ந்து " fog effect' உடன் போஸ் தருகிறார். இது என்ன பஞ்சாக்னி?
மக்கள் தாம் பண்ணின தவறுக்கு பிராயச்சித்தமாக செய்யும் தவம் தான் இந்த பஞ்சாக்னி தபஸ். இதைத்தான் அக்னி பிரவேசம் என்றும் சொல்லுவார்கள் ( சீதை செய்ததும் இந்த தவம் தான்). பூமிக்கும் வான் வெளிக்கும் பாலமாக இருப்பதாலும், அசுத்த படுத்த முடியாததினாலும், அக்னி மற்ற 'பூதங்களை' விட சிறந்தது. நான்கு பக்கமும் தீயை மூட்டி ஐந்தாவது தீயாக சூரியன் இருக்க இதை ஜனவரி யில் இருந்து ஜூலை மாதத்தில் தொடங்குவார்கள்.
இந்த தவம் மனதை தூய்மை படுத்துவதாக நம்பிக்கை. இப்போது விஷயத்துக்கு வருவோம். இது " வாக்கிங் போகும்போது ஆரம்பித்து" ஒரு அவரில் முடியற உண்ணா விரதம் இல்லை. பன்னிரண்டு அல்லது ஒன்பது அல்லது மூன்று அல்லது ஒரு ஆண்டுக்கு செய்யும் தவம்.
முதலில் ஒரு பக்கம் நெருப்பை மூட்டி அதன் அருகில் அமர்ந்து தவம், பிறகு இரண்டு பக்கமும் தீ நடுவில் தவம், அதன் பின் மூன்று பக்கம் தீ நடுவில் தவம் , பிறகு நான்கு பக்கமும் தீ நடுவில் தவம், கடும் வெயிலிலும் நெருப்புக்கு நடுவே அமர்ந்து தவம் செய்ய வேண்டும். இப்படி சாதரணமாக ஒன்பது அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் செய்யவேண்டும்.
நமது சாமியார் இப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தால் , நான் அவரை உண்மையான சாமியார் என்று ஏற்றுக்கொள்ள தயார். சாமியார் செய்வாரா?
பஞ்சாக்னி தபஸ் பற்றி சீரியஸாக தெரிந்து கொள்ள click : http://www.yogamag.net/archives/2002/esep02/panch.shtml