ஒரு நடு வயது பெண்ணும் அவளது கஞ்சமான புருஷனும். இந்த விளம்பரத்தை நீங்கள் டிவி சேனல்களில் பார்த்து இருப்பீர்கள். பிளாஷ் பேக்கில் அந்த பெண் இவரிடம் வீடு வாங்க வேண்டும் என்பாள். இவர் பணம் இல்லை என்பார். பிறகு வீடு வாங்கவேண்டும் என்பாள் , இவர் பணம் இல்லை என்பார். அவர்கள் Tamil Matrimony ஆபீசுக்குள் போவார்கள். அவர்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். இதில் punch ஏ இப்போது தான் இருக்கிறது. அந்த பெண் freeze ஆகி நிற்பாள் , மனதுக்குள் "இவங்க இருவத்தஞ்சு வருஷம் முன்னே இருந்தாங்கன்னா என் வாழ்க்கை விளங்கி இருக்கும் இல்ல" . " என்ன" வென்று புருஷன் கேட்க " ஒண்ணுமில்ல" .
நடிப்பவர்களின் யதார்த்தமும், அவர்கள் பேசும் வட்டார " இழுப்பும்" சூப்பர். நரசிம்ம ராவையும் சிரிக்க வைக்கும் Ad
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 21 ஜூலை, 2010
புதன், 30 ஜூன், 2010
# 29 வலை உலகில் மீண்டும் போர் மூட்டம்?
நம் தண்டோரா மணியின் கணிப்பின் படி மீண்டும் ஒருமுறை வலை உலகில் தகலாருகள் வரும் என்று நம்பப்படுகிறது
***** பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .
அப்படியா ? இப்போதுதானே கொஞ்சம் அமைதியாக இருக்கிறது .
நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் . இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் **********
இந்த முறை அவை கோர்ட் கேஸ் என்று வளரும் என்றும் நம்புவதாக மணிஜீ சொல்லுகிறார்.
பெண்ணடிமையா? ஆணாதிக்கமா?? பார்பன ஆதிக்கமா?? மஞ்சள் பச்சை என கட்சி விவகாரமா என்பது தெரியவில்லை.
பொறுத்திருந்து பாப்போம். தெம்பு இருநதால் களத்தில் குதிப்போம் ....இல்லாதவர்கள் ஓரமாக இருந்து கைதட்டுவோம்..

புதன், 16 ஜூன், 2010
#27 நொந்த நித்தியும் பஞ்சாக்னி தபசும்
நித்தியானந்தா ஒரு வழியாக ஜெயிலில் இருந்து எஸ் ஆனார். ஆஸ்ரமம் வந்து உடன் செய்தது பஞ்சாக்னி தபஸ்.
போகி பண்டிகை போல் வட்டமாக நெருப்பை மூட்டி நடுவில் சாமியார் உட்கார்ந்து " fog effect' உடன் போஸ் தருகிறார். இது என்ன பஞ்சாக்னி?
மக்கள் தாம் பண்ணின தவறுக்கு பிராயச்சித்தமாக செய்யும் தவம் தான் இந்த பஞ்சாக்னி தபஸ். இதைத்தான் அக்னி பிரவேசம் என்றும் சொல்லுவார்கள் ( சீதை செய்ததும் இந்த தவம் தான்). பூமிக்கும் வான் வெளிக்கும் பாலமாக இருப்பதாலும், அசுத்த படுத்த முடியாததினாலும், அக்னி மற்ற 'பூதங்களை' விட சிறந்தது. நான்கு பக்கமும் தீயை மூட்டி ஐந்தாவது தீயாக சூரியன் இருக்க இதை ஜனவரி யில் இருந்து ஜூலை மாதத்தில் தொடங்குவார்கள்.
இந்த தவம் மனதை தூய்மை படுத்துவதாக நம்பிக்கை. இப்போது விஷயத்துக்கு வருவோம். இது " வாக்கிங் போகும்போது ஆரம்பித்து" ஒரு அவரில் முடியற உண்ணா விரதம் இல்லை. பன்னிரண்டு அல்லது ஒன்பது அல்லது மூன்று அல்லது ஒரு ஆண்டுக்கு செய்யும் தவம்.
முதலில் ஒரு பக்கம் நெருப்பை மூட்டி அதன் அருகில் அமர்ந்து தவம், பிறகு இரண்டு பக்கமும் தீ நடுவில் தவம், அதன் பின் மூன்று பக்கம் தீ நடுவில் தவம் , பிறகு நான்கு பக்கமும் தீ நடுவில் தவம், கடும் வெயிலிலும் நெருப்புக்கு நடுவே அமர்ந்து தவம் செய்ய வேண்டும். இப்படி சாதரணமாக ஒன்பது அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் செய்யவேண்டும்.
நமது சாமியார் இப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தால் , நான் அவரை உண்மையான சாமியார் என்று ஏற்றுக்கொள்ள தயார். சாமியார் செய்வாரா?
பஞ்சாக்னி தபஸ் பற்றி சீரியஸாக தெரிந்து கொள்ள click : http://www.yogamag.net/archives/2002/esep02/panch.shtml

வியாழன், 10 ஜூன், 2010
#26 நரசிம்ம பல்லவனின் - புஷ்ப்பத்தூர் போர்
வரலாற்று புனைவு தான் இது:-
சென்ற இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாற்று புகழ்மிக்க நரசிம்ம பல்லவன் - புஷ்பத்தூர் மகாராணி போரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்த்ரி கீழ் கண்டவாறு பதிவு செய்கிறார்.
ஆரிய வழியில் வந்த நரசிம்ம பல்லவன், " உலகத்தவர் எல்லாம் உறவினர்கள்" என்ற கொள்கையை சொல்லி ஒரு சிற்றூரை ஆண்டு வந்தான். ஒரு நாள் விதி வாய்விட்டு சிரிக்க, தன் ஆட்சியைப்பற்றி ஒரு நூலை அரங்கேற்றினான். அடுத்த ஊரான மயூரா புரியை ஆண்ட விஜய தேவி என்ற அரசி போட்டிக்கு, பல்லவனின் நூலை கிண்டல் செய்யும் தொனியில் தான் ஒரு நூலை எழுதி அரங்கேற்றினாள். நூல் அரங்கேற்றத்திற்கு , மயூராபுரியின் நட்பு நாடுகளை சேர்ந்த பற்பல அரசர்களும் அரசிகளும் வந்து விழாவை சிறப்பித்தனர். அக்காலத்தில் இதற்கு " கும்மியடித்தல் " என்ற சொல் வழக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. வந்து இருந்து விழாவை சிறப்பித்தவர்களில் , புஷ்பத்தூரை ஆண்ட, சந்தனா தேவி குறிப்பிட தக்கவர். சந்தனா தேவி, புஷ்பத்தூரை, திறம்பட ஆண்டு வந்த அரசி என்பதும், இவருக்கும் நரசிம்ம பல்லவனுக்கும் முன்பே, எரிச்சல், கடுப்பு இன்னபிற , உபாதைகளும் இருந்து வந்தன என்பதும், வரலாறு பகரும் உண்மைகள். மயூராபுரியின் நூல் அரங்கேற்ற விழா நரசிம்ம பல்லவனை கடும் கோபம் கொள்ள வைத்தது. தன் மீசை துடி துடிக்க, முகம் சிவக்க , மன்னன் வீறு கொண்டு எழுந்து, எழுத்தை எழுத்தால் வெல்ல விழைந்தான். " புஷ்பவல்லி" என்ற ஒரு நூலை அவசரமாக அவசரமாக எழுதி தன் அவையில் அரங்கேற்றினான். இந்த புஷ்பவல்லி என்ற நூல், மன்னனின் தரத்திற்கு ஏற்றதாக இல்லாவிடினும், எதிரி நாட்டு ராணியை தாக்குவது போல் இருந்ததால் , மன்னனின் நட்பு நாடு களின் வேந்தர்களும், சிற்றரசர்களும் , உள்நாட்டு விதூஷர்களும் பெரும் திரளாக வந்து இந்த அரங்கேற்றத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள்." புஷ்ப வல்லி" ஒரு தரம் தாழ்ந்த குப்பை என்று வரலாற்று ஆசிரியர்களும், இலக்கிய வாதிகளும், குறிப்பிடு கின்றனர். நரசிம்ம பல்லவன் , இப்படி ஒரு குப்பையை எழுதியதற்கு, ஆத்திரம் கண்ணை மறைத்ததும், கூட இருந்து ஏற்றி விட்ட ஆலோசகர்களும் தான் காரணம் என்று வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்திரி கருத்து உரைக்கின்றார்.
நரசிம்ம பல்லவனின் " புஷ்பவல்லி" , பெரும் போருக்கு காரணமானது. ட்ரோஜன் போருக்கு ஆப்பிள் பழம் காரண மானது போல், நரசிம்ம பல்லவன் போருக்கு இந்த நூல் காரணமானது என்கிறது வரலாறு.
புஷ்பத்தூரின் அண்டை நாடான, 'கேள்வி' நாட்டு மன்னனுக்கு, இந்த அரசியலை பார்த்து தன் தோள்கள் தினவெடுத்தன. " என்ன ஒரு அரசிக்கு எதிராக ஒரு அரசன் நூல் எழுதினானா? இதை மற்ற அரசர்களும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்களா? என்னே ஆணாதிக்கம் என்னே ஆரிய ஆதிக்கம் , என்னே அராஜகம் இன்னும் பல என்னேக்களை சேர்த்து மிக்க கோபம் கொண்டான். நாமிருக்க, ஆரிய நரசிம்மன் , திராவிட அரசியை கிண்டல் செய்து நூல் இயற்றுவதா? அதை மற்றோர் ரசித்து இருப்பதா?. நரசிம்ம பல்லவன் கோஷ்டி யில் உள்ள அனைவர் மேலும் 'கேள்வி' நாட்டு மன்னன் தீரா கோபம் கொண்டான்.மன்னர்கள் பலரும் தத்தம் வாட்களை உயர்திப்பிடித்தனர். 'வலைகுடாவை' போர் மேகங்கள் சூழ்ந்தன. கேள்விநாடு மன்னன் தலைமையில் ஒரு கோஷ்டி நரசிம்ம பல்லவன் தலைமையில் ஒரு கோஷ்டி என்று இரண்டு படைகளும் மோதின. இதில் நரசிம்ம பல்லவனின் நண்பன் 'பைத்தியக்கரத்தனமாக' எதிரியிடம் போய் சேர்ந்தான் என்றும் இந்த உள்குத்து போரின் ஒரு காரணம் என்றும் வரலாறு பேசுகிறது. எது எப்படியோ, பட்டாக்கத்தியை வேகமாக உருவிய நரசிம்ம பல்லவன், சரேலென்று ஜகா வாங்கி, ஸாரி என்று மடிந்து விட்டான். லேசில் தோற்காத மன்னன் பின் வாங்கியதன் காரணம் வரலாற்று அறிஞர் களின் யூகத்திற்கு எட்டாததாகவே உள்ளது.
தற்செயலாக ஆரம்பித்த இந்த போர், ஆரிய திராவிட போராக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதால் மன்னன் பின் வாங்கினான் என்றும்; இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சுபவன் அல்ல பல்லவன், தான் புனைந்த நூல் பலராலும் இழிந்துரைக்க பட்டதால் மனம் நொந்து , மன்னன் கிரீடத்தை துறந்து, போரை புறக்கணித்தான் என்றும் கூறுவர். மன்னன் பின் வாங்கியதை அசோகரின் மன மாற்றத்திற்கு ஒப்பிட்டும் சிலர் பேசுகின்றனர். பேஷண்டே போய் சேர்ந்த பிறகு மருந்து வாங்கி வரும் நபரைப்போல் ' பாண்டு' மன்னரும் மற்றோரும் 'கலகல' வென்று சல சலப்பதை பார்த்த மக்கள் ஆர்வத்துடன் கேட்கும் கேள்வி" 'பல்லவ மன்னர் மீண்டும் ஆட்சி அமைப்பரா? பகைமையை மறந்து மீண்டும் 'வலைகுடாவில்' வசந்தம் வீசுமா?; பிரிவினைகள் மனங்களை விட்டு மறையுமா?".
வரலாற்று ஆசிரியர் ரீலகண்ட சாஸ்திரி நீண்ட இக்கேள்விகளை முன் வைக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)