புதன், 21 ஜூலை, 2010

# 33 புன்னகை புரிய வைக்கும் விளம்பரம்

ஒரு நடு வயது பெண்ணும் அவளது கஞ்சமான புருஷனும். இந்த விளம்பரத்தை  நீங்கள் டிவி சேனல்களில் பார்த்து இருப்பீர்கள். பிளாஷ் பேக்கில் அந்த பெண் இவரிடம் வீடு வாங்க வேண்டும் என்பாள். இவர் பணம் இல்லை என்பார். பிறகு வீடு வாங்கவேண்டும் என்பாள் , இவர் பணம் இல்லை என்பார். அவர்கள் Tamil Matrimony  ஆபீசுக்குள்  போவார்கள். அவர்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். இதில் punch ஏ இப்போது தான் இருக்கிறது. அந்த பெண் freeze ஆகி நிற்பாள் , மனதுக்குள் "இவங்க இருவத்தஞ்சு வருஷம் முன்னே இருந்தாங்கன்னா என் வாழ்க்கை விளங்கி இருக்கும் இல்ல"  . " என்ன" வென்று புருஷன் கேட்க " ஒண்ணுமில்ல" .
நடிப்பவர்களின் யதார்த்தமும், அவர்கள் பேசும் வட்டார " இழுப்பும்" சூப்பர். நரசிம்ம ராவையும் சிரிக்க வைக்கும் Ad

திங்கள், 19 ஜூலை, 2010

# 32 ஹைரோப்பா ...பார் பார் பாரீஸ் பார்...விளக்கணையா ஊர்


மியூசியத்தின் inverted pyramid
அடுத்த நாள் காலை மீண்டும் சில்லென்று விடிந்தது. வீட்டிற்கு போன் செய்து இரண்டு நாள் ஆனது நினைவிற்கு வந்தது. ரிசப்ஷன் காரியிடம் ஹோட்டலில் இருந்து போன் செய்ய முடியுமா என்ற போது , நம்ம முக விலாசத்தை பார்த்து, இங்க ரொம்ப காஸ்ட்லி என்று சொன்னாள்.
                                                                                      பாரிசின் வீதி
ரொம்ப வருஷம் முன் எங்க அப்பாவுடன் ரெங்கநாதன் தெருவில் காய் கறி வாங்க போனது நினைவிற்கு வந்தது. ஒரு பழைய சாக்கில் காய் கறி களை குமித்து வைத்து காய்கறி காரம்மா . முன்னாள் உட்கார்ந்து இருப்பாள். எங்க அப்பா 'கடைய' செலெக்ட் பண்ணி எதிரில் உட்கார்ந்து கொள்வார். தொண்டையை கனைத்து கொண்டு "கத்தாரி எப்படிம்மா?" என்று டீலை ஆரம்பிப்பார். கடைக்காரி கிஞ்சித்தும் இந்த பிசினசை லட்சியம் செய்யாமல் " நீ எல்லாம் வாங்க மாட்ட ஐயிரே" என்று டிஸ்மிஸ் செய்வாள்.
லூவர் மியூசியத்தின் Painting
அதே பாவனையை அரை நூற்றாண்டு கழித்து , பிரான்ஸ் ஹோட்டல் காரி அதே பாவனையில் சொன்னாள். என்ன கத்தரிக்கு பதில் டெலிபோன் கால். விஷயம் என்னவோ ஒன்றுதான், "உன் மூஞ்சை பாத்தால் பணம் கொடுக்கறவன் போல் தெரியல" .
நாமறிந்த மோனலிசா
 பரம்பரை இன்சல்ட் ஆச்சே விட்டு கொடுக்க மனம் வருமா? " பணம் கூட ஆனாலும் பரவாயில்லை போன் பண்ண வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து ஒரு நிமிஷம் போனுக்கு ஏறக்குறைய அறுநூறு ரூபாய் தண்டம் அழுதேன்.
மற்றொரு படம்
பிரேக் பாஸ்ட் வழக்கம் போல் பிஸ்கட் காப்பி, பாவிகள் தண்ணீர் மட்டும் தரவில்லை. ஜூஸ் குடித்து சமாளித்தேன்.
இன்னொரு ஓவியம்
அதே பஸ் அதே ஸீட். இப்போது பகலில் ஈபிள் டவர் தரிசனம். இந்த பிரும்மாண்டமான இரும்பு அமைப்பை கொஞ்சம் வருஷம் முன்பு இடித்து தரை மட்டம் ஆக்க பார்த்தார்களாம். நல்ல வேளை தப்பித்தது, உலக அதிசயம் என்று பெயரும் எடுத்தது.
அழகிய கிரேக்க சிலை
டவரின் இரண்டாம் கட்டம் வரை லிப்டில் போகலாம் , போனோம். அங்கே ரெஸ்டாரன்ட், போட்டோ கடைகள். போட்டோ எடுத்து கொண்டேன். கீழே வந்தோம். டவரின் கீழே ஏகப்பட்ட வியாபாரிகள் சிறு சிறு வாரிசு பொருட்கள் விற்று கொண்டு இருந்தார்கள்.
அழகிய தலை.........ஸாரி சிலை
 நம்மை " பாம்பே" " டில்லி" என்று கூப்பிடுகிறார்கள் . போலீசை கண்டவுடன் பிசினசை சடுதியில் நிறுத்திக்கொண்டு எஸ் ஆகிறார்கள். ஒரு விஷயம் உறுத்தியது. இவர்கள் அனைவரும் கறுப்பர்கள். டவரை விட்டு விலகி வந்தோம்.
                                                                   பாரிசின் அழகிய தோற்றம்
சிறிது நேர பயணத்திற்கு பின் ஒரு உயரமான பில்டிங்கிற்கு வந்தோம் வெகு விரைவான லிப்ட். 58 வது மாடிக்கு 58 நொடியில் போகிறது. இதன் மேலும் ரெஸ்டாரன்ட் கசப்பு காப்பி கொள்ளை விலையில் குடித்தேன் , போட்டோ கடைகள் போட்டோ எடுத்து கொண்டோம். தொலைவில் ஈபிள் டவரின் பின்னணியில் அழகிய பாரீஸ்.
பாரீஸ் அழகாக இல்லை?
சூப்பரான காட்சி. கீழே வந்து பஸ்ஸில் ஏறி நடு ஊருக்கு வந்து இந்தியன் ரெஸ்டாரண்டில் தயிர் சாதம் , பச்ச மொளகா .....ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா நல்ல லஞ்ச். இங்கே ஒரு wax musium இருக்கிறது. லண்டனில் போல் அவ்வளவு கூட்டம் இல்லை. இதில் ஷாரூக்கான் சிலை மிக பிரசித்தமாம். நான் உள்ளே போகவில்லை வீட்டுக்கு போன் செய்ய வேண்டும். அங்கிருந்து ஒரு சென்ட் விற்கும் கடைக்கு போனோம்.
சென்ட் கடை
 நிஜமாவே ஆணை விலை குதிரை விலைதான். நம் கிராமங்களில் திரு விழாக்களில் விற்கும் " மரிகொழுந்து" சென்ட் போல் ஒரு சமாச்சாரத்தை துக்கிளியூண்டு பாட்டிலில் போட்டு ஐநூறு அறுநூறு ரூபாய் என்கிறார்கள். கொஞ்சன் சொல்லிகொள்கிராற்போல் பாட்டில் என்றால் இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. விலை கேட்டு லேசாக தலை சுற்று வதுபோல் தோன்றியதால் வெளியே வந்து பஸ்ஸில் உட்கார்ந்தேன். சயந்திரம் உலக புகழ் பெற்ற லூவர் மியூசியம். கூட்டத்தில் நின்று உள்ளே போனால், நாம் பல முறை பார்த்த சிலைகள், படம்கள். கண்ணதாசன் சின்னது போல் " உடுத்தவும் நேரமின்றி போரிட்ட வீரர்களின்" சிலைகள்; படம்கள். எல்லா கூட்டமும் அம்முகிற ஸ்டால் எதுவென்றால் மோனலிசா வைக்க பட்டுள்ள ஹால். இந்த ஊரில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராத்திரியிலும் கடைகள் ஆபீஸ் கள் எல்லாவற்றிலும் ராத்திரி விளக்குகளை அணைப்பதே இல்லை. எல்லா கடைகளும் 
கண்ணாடி சுவர்களுடன் ராத்திரி எல்லாம் விளக்கில் ஜ்வலிக்கின்றன. ஐரோப்பாவின் பல ஊர்களிலும் இதே கதைதான். வாழ்க மின் சேமிப்பு!.  ராப்போஜனம் ஹோட்டலில். நான் எடுத்து போய் இருந்த MTR சாம்பார் சதம் பாக்கிட்டை காப்பி  மேக்கரின்  வெந்நீரில் வைத்து இருந்து சாப்பிட்டு படுத்தேன்.. குட் நைட்

சனி, 3 ஜூலை, 2010

#31 ஹை ரோப்பா.. .பார் ... பார் பாரீஸ்

பெல்ஜியம் ஹோட்டல்
அடுத்த நாள் காலை குளிருடன் பெல்ஜியம் ப்ரேக்பாஸ்ட். வழக்கம் போல் காப்பியுடன் பிஸ்கட். ஏக்கத்துடன் பொங்கல் தோசை எல்லாம் மனசில் நினைத்து கொண்டு , ஒரு தயிர் கப்புடன் டைனிங் ஹாலை விட்டு வெளியே வந்தேன். ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். தெருவில் போகும் எல்லா கார் களும் என்கிட்டே வந்து நின்று போயின.அப்புறம் தான் தெரிந்தது நான் நின்று கொண்டு இருப்பது ஒரு ஜீப்ரா கிராசிங்கில். நான் தெருவை கடக்க நினை கிறேன் என்று நினைத்து தான் தெருவில் போன கார்கள் நான் கடப்பதற்கு நின்றன. நம்மூரில் நம்மை சற்றும் சட்டை செய்யாமல் விர்ரென்று பறக்கும் கார்களும் பைக்குகளும் நினைவிற்கு வந்தன. வழக்கமான பஸ் வழக்கமான ஸீட். அடுத்த ஊரை நோக்கி , அல்ல அடுத்த நாட்டை நோக்கி பயணம் ஆரம்பம்.

ஐரோப்பாவின் பசுமை கண் முன் விரிந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் பச்சை பசேல் என்று புல் தரை. உள்ள படியே மனதுக்குள் சிலீர் என்று புகுந்தது. பச்சையான பூமியின் ஊடாக பிரான்சுக்குள் நுழைந்தோம்.

ஆஸ்ட்ரிக்ஸ் பார்க் என்று ஒரு தீம் பார்க். நம்மூர் தீம் பார்குகள் போல் தான். இங்கு மிக வேகமாக ஓடும் wooden ரோலர் கோஸ்டர் இருக்கிறது. நமது வயசையும் சைசையும் பார்த்த டூர் மேனேஜர் , "நீங்கள் ஸ்டன்ட் ஷோ வையும் vaarungal என்று, டால்பின் ஷோ வையும் பார்த்து விட்டு வந்து விடுங்கள் என்றான் . ஒன் வயச மறந்து ஏதாவது அட்வென்ச்சர் பண்ணி கைய்ய கால ஓடச்சுக்க போற, வெளி யூர்ல வந்து என்று சொல்லாமல் சொன்னான். அந்த தீம் பார்க்கில் nothing was special. அங்க குட்டி குட்டியா வெள்ளைகார குழைந்தைகள் எஸ்கர்ஷன் வந்து இருந்தன. நான் போட்டோ பிடிக்க போனபோது , அவைகளின் டீச்சர் குறுக்கே பாய்ந்து தடுத்தாள். நம்மை பார்த்தால் பூச்சாண்டி போல இருக்கு போல. ஸ்டன்ட் ஷோ சாதாரண சர்கஸ் மாதிரி இருந்தது. டால்பின் ஷோ ஓகே. அங்கே புடிச்ச போட்டோ ஒண்ணு கூட வரல.
சாப்பாடு தான் கூப்பாடாக போனது. அங்கிருந்த டீ கடையில் ஒரு காப்பியுடன் லன்ச்சை முடித்து கொண்டு பஸ்ஸில் புறப்பட்டோம். ஒரு மணி நேர பயணத்திற்குப்பின் ஹோட்டல் வந்து சேர்ந்தோம். பெரிய ஹோட்டல் ஆனால் ஊருக்கு வெளியே.
                                                                 சைன் நதி
சாயந்திரம் ஊர் சுற்றிபார்க்க புறப்பட்டோம். ஆகா ஆகா அங்கேயும் ஒரு குடி மகன் புல் மப்பில் நடுத் தெருவில் ஒக்காந்து அலப்பறை பண்ணிக்கொண்டு இருந்தான். நம்மூருக்கு வந்தது மாதிரி இருந்தது. அரை மணி பயணத்திற்கு அப்பறம் ஊருக்கு உள்ள வந்தோம்.

ஈபிள்
சைன் நதியில் கண்ணாடி படகில் சின்ன சுற்று. நதியின் இரண்டு பக்கமும் பல பழம் பில்டிங்குகள்.

கிளாஸ் போட்- வளைவு பாலம்
போட்டில் போகும்போது , பல பாஷைகளில் ரன்னிங் கமெண்ட்ரி வைத்து இருக்கிறார்கள். ஹெட் போன் வைத்துக்கொண்டு நமக்கு வேண்டும் பாஷையில் கேட்கலாம்.

சைனில் போட்
அதில் ஒன்று தான் புகழ் பெற்ற லூவர் மியுசியம், வலது பக்கம் பிரும்மாண்டமான ஈபில் டவர் சற்று அழுக்காக இருந்தது.

கரையோர கட்டடங்கள்
பல பாலங்களின் வழி யாக பயணித்து திரும்பி வந்தோம். அடுத்த நாள் தான் டவர் மேல் ஏறபோவதாக பிளான் இருந்ததால் அப்போது டவரை கிட்ட போய் பார்க்க வில்லை. ஊருக்குள் போய் சுற்றி பார்த்து பின் டவர் பை நைட் பார்த்தோம்.

டவர் பை நைட் - ஏதாவது தெரியுதா?
இரவில் டவர் கரண்ட் விளக்குகளால் ஜ்வலித்தது. போட்டோ எடுத்து கொண்டோம்.

இரவுச்சிலை - ஈபிள் பக்கத்தில்
டின்னர் ஒரு இந்தியன் ஹோட்டலில் கொடுத்தார்கள். பூரி சப்ஜி , நான் சாதம் சாம்பார் என்று. இரவு ஹோட்டலில் ரிடையர் ஆனோம் அடுத்த நாளும் பாரிசில் தான்.

பாரிஸ் ஹோட்டல்

.........பயணிப்போம்